
காவிரி என்ற சொல்லுக்கு 'காகத்தால் விரிந்த நதி' என பொருள் சொல்வர். இதற்கு 'காவேரி' என்றும் பெயருண்டு. கவேர மகரிஷியின் மகள் என்பதால் இப்பெயர் வந்தது. மகரிஷி தன் மகள் திருமண வயதை அடையும் வரை, வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் வளர்த்தார். அகத்திய முனிவரை திருமணம் புரிந்த அவள், கணவரின் அன்பு கட்டளையை ஏற்று, கமண்டலத்தில் தீர்த்தமாக மாறி வாழ்ந்தாள். கடைசி வரை அடைபட்டு வெளியில் வராமல் கிடந்த காவிரி, காக்கையின் வடிவில் தோன்றிய விநாயகரின் கருணையால் சுதந்திரம்பெற்றாள். எல்லா உயிர்களையும் வாழ்விக்கும் நதியாக உருவெடுத்து 'காவிரித்தாய்' என போற்றப்பட்டாள்.
No comments:
Post a Comment