Monday 19 March 2018

காளிங்க நர்த்தன தத்துவம்

காளிங்க நர்த்தன தத்துவம்

கிருஷ்ணரின் செய்த லீலைகள் சொல்லில் அடங்காதது. கிருஷ்ணரின் லீலைகளில் ஒன்றான காளிங்க நர்த்தன தத்துவத்திற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

கிருஷ்ணரின் செய்த லீலைகள் சொல்லில் அடங்காதது. அவரது லீலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். அவர் செய்த லீலைகளில் ஒன்றுதான், யமுனை நதியில் வசித்த ஐந்து தலை நாகமான காளிங்கனை அடக்கி, அதன் தலையில் நர்த்தனம் புரிந்தது. யமுனை நதியில் வசித்து வந்த காளிங்கனின் விஷ மூச்சுக் காற்றால், யமுனை நதியும், அதன் கரையில் இருந்த சோலைகளும் நஞ்சாகிப் போயின. இதனால் காளிங்கனை அங்கிருந்து கடலுக்கு செல்ல, கிருஷ்ணர் பணித்தார். அவன் மறுத்ததால் அவனை அடக்கி, அவனது தலையில் நர்த்தனம் புரிந்தார்.

இந்த காளிங்க நர்த்தன தத்துவத்துக்குள் சிறைப்பட்டிருக்கும் ஆழ்ந்த கருத்தை உணர்ந்தவர்கள் வெகு சிலரே, அப்படி உணர்ந்தாலும் அந்த கருத்தை செயல்படுத்துபவர்கள் ஒரு சிலரே.

மனித மனம் என்பது தான் பாம்பு. மனிதனின் ஐம்புலன்களும், பாம்பின் ஐந்து தலைகள். இந்த ஐம்புலன்களின் வழியாகத்தான் மனம் என்ற பாம்பு, நஞ்சினை (தீமைகளை) கக்குகிறது. எனவே ஐம்புலன்களால் படமெடுத்து ஆடும் மனம் என்னும் பாம்பை, நாம் அடக்கி ஒடுக்கி ஆள வேண்டும் என்பது தான் இதன் உயர்ந்த தத்துவமாகும்.

No comments:

Post a Comment