சூரிய குலம் அல்லது ரகுவம்சம் என்பது கலியுக அரச பரம் பரைகளில் ஒன்றாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சூரிய குல தோன்றலான ராமபிரானின் பரம்பரை வரிசைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
25-3-2018 ராமநவமி
சூரிய குலம் அல்லது ரகுவம்சம் என்பது கலியுக அரச பரம் பரைகளில் ஒன்றாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்துமத அடிப்படையில் வைவஸ்வத மனு என்பவர் சூரியனின் மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இசவாகுவின் வம்சம் சூரிய வம்சமாக அறியப்படுகிறது. இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் சொல்லப்படுகின்றனர்..
சூரிய குல தோன்றலான ராமபிரானின் பரம்பரை வரிசைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
1. பிரம்மாவின் மகன் மரீசி
2. மரீசியின் மகன் காஷ்யபன்
3. காஷ்யபன் மகன் விவஸ்வான்
4. விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு
5. வைவஸ்வத மனு மகன் இசவாகு (இவர்தான் அயோத்தியை உருவாக்கினார்).
6. இசவாகு மகன் குக்ஷி.
7. குக்ஷி மகன் விகுக்ஷி
8. விகுக்ஷி மகன் பானன்
9. பானன் மகன் அனரன்யன்
10. அனரன்யன் மகன் பிருது
11. பி்ருது மகன் திரிசங்கு (இவருக்காகத் தான் விஸ்வாமித்திரர் சொர்க்கம் படைத்தார்)
12. திரிசங்கு மகன் துந்துமாரன்
13. துந்துமாரன் மகன் யுவனஷ்வன்
14. யுவனஷ்வன் மகன் மாந்தாதா
15. மாந்தாதா மகன் சுசந்தி
16. சுசந்தி மகன் துவசந்தி மற்றும் பிரசந்ஜித்
17. துவசந்தி மகன் பரதன்
18. பரதன் மகன் அஸித்
19. அஸித் மகன் சாகரன்
20. சாகரன் மகன் அசமஞ்சன்
21. அசமஞ்சன் மகன் அம்சுமான்
22. அம்சுமான் மகன் திலீபன்
23. திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)
24. பாகீரதன் மகன் காகுஸ்தன்
25. காகுஸ்தன் மகன் ரகு (காளிதாசன் ரகுவம்சம் )
26. ரகு மகன் பிரவர்த்தன்
27. பிரவர்த்தன் மகன் ஷங்கனன்
28. ஷங்கனன் மகன் சுதர்ஷன்
29. சுதர்ஷன் மகன் அக்னிவர்னன்
30. அக்னிவர்னன் மகன் சீக்ரகன்
31. சீக்ரகன் மகன் மேரு
32. மேரு மகன் பிரகஷ்ருகன்
33. பிரகஷ்ருகன் மகன் அம்பரீஷன்
34. அம்பரீஷன் மகன் நகுஷன்
35. நகுஷன் மகன் யயாதி
36. யயாதி மகன் நபாகன்
37. நபாகன் மகன் அஜன்
38. அஜன் மகன் தசரதன்
39. தசரதன் மகன்கள் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன்
40. ராமன் மகன் லவன் மற்றும் குசன்
பிரம்மாவின் 39-வது தலைமுறை ராமர்.
No comments:
Post a Comment