
சென்னை தாம்பரம் அருகிலுள்ள வல்லக்கோட்டை பகுதியை ஆட்சி செய்தவர் பகீரத நாயனார். இவரது எதிரி மன்னன் கோரன் என்பவன் சூழ்ச்சியால் நாட்டை கைப்பற்றினான். சுக்ராச்சாரியாரை சரணடைந்த பகீரதன், இழந்த நாட்டை மீட்க வழி கேட்டான். வெள்ளிக்கிழமை விரதமிருந்து முருகனை வழிபட குறை தீரும் என்றார். அதன்படியே, பகீரதனும் முருகன அருளால் நாட்டை மீட்டான். பங்குனி உத்திரம் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருவது சிறப்பு. இழந்த சொத்தை மீட்க, வழக்கில் வெற்றி பெற விரும்புவோர் இந்த நாளில் விரதம் மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment