Tuesday 27 March 2018

ஆற்றுப்படை பாடிய நக்கீரர்

Image result for நக்கீரர்

சிவபூஜையின் போது தவறு செய்யும் முனிவர்களை சிறை பிடித்தது கற்கிமுனி என்ற பூதம். ஆயிரம் முனிவர்களை சிறை பிடித்து அவர்களை விழுங்க வேண்டும் என்பது அதன் நோக்கம். ஒருவழியாக 999 முனிவர்கள் அகப்பட்டனர். இன்னும் ஒருவரைப் பிடிக்க பூதம் காத்திருந்தது. இந்த சமயத்தில் பொய்கையில் நீராடிய நக்கீரர் ஒரு ஆலமரத்தடியில் சிவபூஜை செய்தார். அந்த மரத்தின் இலைகள் காற்றில் உதிர்ந்தால் பறவையாகவும், நீரில் விழுந்தால் மீனாகவும் மாறி விடும் தன்மை கொண்டவை. நக்கீரர் பூஜை செய்த நேரத்தில் ஆலிலை ஒன்று நீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்தது. ஒரு பாதி மீனாகவும், மறு பாதி பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தது. இந்த அதிசயம் கண்ட நக்கீரர் பூஜையை மறந்து வேடிக்கை பார்த்தார். இது தான் சமயம் என பூதம் அவரையும் பிடித்து சிறையில் அடைத்தது. சிறையில் இருந்த 999 முனிவர்கள், பூதத்துக்கு இரையாவதை எண்ணி வருந்தினர். உடனே நக்கீரர் முருகன் மீது 'திருமுருகாற்றுப்படை' பாடினார். முருகன் அங்கு தோன்றி பூதத்தை கொன்று முனிவர்களை காப்பாற்றினார்.

No comments:

Post a Comment