
தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரை என மூன்று மனைவியர். இதில் ராமனின் தாயான கோசலையும், பரதனின் தாயான கைகேயியும் பட்டாபிஷேக விஷயத்தில் நேரடியாக பங்கேற்றவர்கள். ஆனால் சுமித்ரை தன் பிள்ளைகளான லட்சுமணனை ராமனுக்கு உதவியாகவும், சத்ருக்கனனை பரதனுக்கு உதவியாகவும் அனுப்பி வைத்தாள். லட்சுமணனிடம், “ராமனுக்குத் தம்பி என்ற உரிமை எடுத்து கொள்ளாதே. வேலைக்காரன் போல் இரு” என்று அறிவுரை கூறினாள். தசரதரின் மனைவியர் மூவரில் தன் பிள்ளை களுக்கு பதவி ஆசை காட்டாமல், ஞானி போல் வாழ்ந்த சுமித்ரையை 'தெய்வத்தாய்' என்று பாராட்டலாம்.
No comments:
Post a Comment