Thursday 30 November 2017

திரும்பக் கிடைத்த திருமாங்கல்யம்


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்ஸவம் நடந்து வருகிறது. விழாவின் கடைசிநாளன்று, அம்பாள் விஸ்வரூப காட்சி தருவாள். இதையொட்டி, அக்கோயிலில் நடந்த அதிசய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள். காஞ்சி மகாப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பெண் பெரியவரிடம் வந்து, ""சுவாமி! என் மகளுக்கு திருமணம். ஆனால், திருமாங்கல்யம் வாங்கக்கூட வசதியில்லை,'' என்று சொல்லி அழுதார்.

பெரியவர் அந்தப் பெண்ணிடம்,""நீ போய் காமாட்சியம்மனை தரிசனம் செய்துவிட்டு இங்கே வா,'' என்றார்.

அந்தப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து விட்டு, பிரகார வலம் வரும்போது, கீழே ஒரு திருமாங்கல்யம் கிடப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு மடத்திற்கு வந்து பெரியவரிடம் காட்டி, அது தனக்கு கிடைத்த விதம் பற்றி சொன்னார்.

பெரியவர், ""அதை என் முன்னால் வைத்துவிடு, உனக்கு வேறு மாங்கல்யம் தருகிறேன்,'' என்றார்.
அந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்தார். அவர் இரண்டு திருமாங்கல்யங்களை பெரியவர் முன் வைத்தார்.
""பெரியவா! என் மகளுக்கு திருமணம். திருமாங்கல்யத்தை உங்களிடம் கொடுத்து ஆசி பெற வந்தேன்,'' என்றார்.
""அது சரி! உன் மகளுக்கு ஒரு மாங்கல்யம் தானே தேவை. இன்னொன்று எதற்கு?'' என்றார்.
""அது இங்கு வரும் ஏழை பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உங்கள் மூலமாக கொடுக்க!'' என்றார் பக்தர்.

""அப்படியா!'' என்ற பெரியவர், கூடுதலாக இருந்த மாங்கல்யத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, ""உன் மகள் கல்யாணத்தை சிறப்பாக நடத்து,'' என்றார். அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் இன்னொரு பெண் ஓடி வந்தார்.
""சுவாமி! நான் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் மாங்கல்யம் எங்கோ தவறி விழுந்து விட்டது. ஐயோ! கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே! தாங்கள் தான் என்னை சுமங்கலியாக இருக்க வாழ்த்த வேண்டும்!'' என்று அழுதார்.

""அழாதே! இதோ! நீ தொலைத்தது இந்த திருமாங்கல்யம் தானா சொல்!'' என்று ஏழைப்பெண்மணி தன்னிடம் ஒப்படைத்ததைக் காட்டினார். 
""இதுதான்!'' என்று ஆனந்தமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார் அந்தப் பெண்.
மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளியவள் காஞ்சி காமாட்சி. 
குருவருளும், திருவருளும் ஒரு சேர கிடைக்கும் இடம் காஞ்சி என்றால் அது மிகையல்ல!

பரசுராமர் தோற்ற காரணம்


விஷ்ணுவின் தசாவதாரங்களில் அதிகம் பேசப்படாதது பரசுராம அவதாரம். தந்தையின் சொல்லை ஏற்று தாயையே கொன்றார் என்ற அளவில் தான் அவரைத் தெரியும். இது சிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், அந்த அவதாரத்தை பக்தர்கள் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அந்த அவதாரம் தான் ராவணனின் அழிவுக்கு காரணமாக அமைந்தது. உலகிலேயே இரண்டு வில்கள் தான் பலம் மிக்கவை. ஒன்று சிவதனுசு, மற்றொன்று விஷ்ணு தனுசு. சீதையைத் திருமணம் செய்வதற்காக வைத்த போட்டியில், சிவதனுசுவை ராமர் உடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. விஷ்ணு தனுசு பரசுராமர் வசமிருந்தது. அவர் அரசர்களுக்கு எதிரான நிலையை எடுத்தவர். தன்னிடமுள்ள வில், எப்படியாவது ராமனிடம் போய் சேர வேண்டும், ராவணன் அழிந்தாக வேண்டும் என்பதால், ராமனை வலுச்சண்டைக்கு இழுத்தார். அதில் தோற்றது போல் பாவனை செய்து, விஷ்ணு தனுசுவை ராமருக்குக் கொடுத்தார். பின் துறவியாக மாறிவிட்டார். விஷ்ணு தனுசைக்கொண்டே ராவணனை ராமன் அழித்தார்.

உயர்வான 9


இறைவனை எப்படி வழிபடலாம் என்பதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. இதில் ஒன்றை பக்தர்கள் பின்பற்றினால் போதும். 

1. சுகபிரம்மரிடம் மனம் ஒன்றி கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்டார் பரீட்சித்து மன்னர். கடவுளின் மகிமையைக் கேட்பதும் வழிபாடு தான்.

2. சுகபிரம்ம முனிவருக்கு, அவரது தந்தை வியாசர் வேதங்கள் குறித்து சொன்னார். அதைக் கேட்டே சுகப்பிரம்மர் உயர்வெய்தினார். கடவுளைப் பற்றி பிறருக்குச் சொல்வதும் "வழிபாடு' தான்.

3. பிரகலாதன் எந்நேரமும் நாராயணனையே சிந்தித்துக் கொண்டிருந்தான். "நினைப்பதும்' கடவுளை வணங்கும் வழிகளில் ஒன்று.

4. பெருமாளின் பாதங்களுக்கு சேவை செய்தாள் லட்சுமி. இறைவனின் திருப்பாதங்களை பார்த்தாலே போதும். பாதசேவையும் இறைவழிபாட்டு முறை தான்.

5. கோயிலிலோ, வீட்டிலோ வழிபடலாம்.

6. எந்த இடத்தில் இருந்தாலும், அங்கிருந்தே பிரார்த்தனை செய்யலாம்.

7. அவரவர் பணியை முதலாளிகளின் விருப்பம் போல் செய்து முடிப்பதும் வழிபாடே. ராமனின் கட்டளையை அனுமன் ஏற்றது போல.

8. கடவுளை தன் தாயாக, தந்தையாக, நண்பனாக, உறவாக ஏற்பதும் வழிபாடே. அர்ஜுனன் கிருஷ்ணனை நண்பனாக ஏற்றது போல்.

9. இந்த உடலால் செய்யும் ஒவ்வொரு நற்செயலையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கலாம். திருமாலிடம் மகாபலி தன்னையே ஒப்படைத்தது போல.

ஆக, கேட்டல், சொல்லுதல், நினைத்தல், பாதசேவை செய்தல், கோயிலில் வழிபடுதல், இருந்த இடத்திலேயே பிரார்த்தித்தல், பணிதல், நட்பு கொள்ளுதல், சமர்ப்பணம் செய்தல் ஆகிய ஒன்பது வழிகளில் தெய்வ வழிபாட்டை செய்யலாம்.

ஸ்ரீராமஜெயம் நோக்கம்


சிலர் "ஸ்ரீராமஜெயம்' என்னும் மந்திரத்தை லட்சக்கணக்கில் நோட்டுகளில் எழுதுகிறார்கள். சிலர் சொல்கிறார்கள். "ஜெயம்' என்றால் "வெற்றி'. "ஸ்ரீராமனுக்கே வெற்றி', "ஸ்ரீராமனால் வெற்றி' என்று எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளலாம். அதாவது, "ஸ்ரீராம ஜெயம்' எழுதினால் நினைத்தது நிறைவேறும். தடையற்ற வெற்றி கிடைக்கும்.

"நமோ' என்றால் என்ன?


கோயில்களுக்குள் நுழைந்தால், நம் காதுகளில் "நமோ' என்ற மந்திரச்சொல் விழாமல் இருக்காது. உதாரணத்துக்கு"ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை எடுத்துக் கொள்வோம். "நமோ' என்றால் "திருவடியில் விழுந்து வணங்குகிறேன்' என்று பொருள். 

நம்மை விட யாரை உயர்ந்தவராக மதிக்கிறோமோ, அவரது காலில் விழுவதை பெருமையாக நினைக்கிறோம். ஒரு மாணவன் படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியதும், பெற்றோர் காலில் விழுகிறான். தனது புகழ், பெருமை எல்லாவற்றையும் பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறான். அதுபோல, பக்தன் கடவுளின் காலில் விழுந்து தன்னையே அவனிடம் ஒப்படைக்கிறான். ஒவ்வொரு தடவையும் விழுந்து வணங்குவது என்பது எல்லாக்கோயில்களிலும் சாத்தியமல்ல. எனவே, மந்திரத்தில் "நமோ' சேர்த்து காலில் விழுவதாக இறைவனிடம் சொல்கிறான். அவ்வாறு சொல்லும்போது அவனது ஆணவம், போலியான தற்பெருமை எல்லாம் அவனை விட்டு நீங்கி விடுகிறது. எந்த மந்திரம் சொன்னாலும், அதன் பொருள் புரிந்து சொன்னால் தான், நமக்கு பலன் கிடைக்கும்.

மாலையில் சாப்பிடாதீர்


"கருக்கல் வேளை வந்திருச்சு! சாப்பிடாதே, வாசல்படியில் உட்காராதே'' என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் தெரியுமா?

மாலை 6 மணிக்கு தான், நரசிம்மரால் வதம் செய்யப்பட்டான் இரணியன். என்னை வான மண்டத்திலோ, பூமியில் நல்ல இடங்களில் வைத்தோ கொல்ல முடியாது என்ற வரத்தை அவன் பெற்றிருந்தான். எனவே இரண்டும் கெட்டானாக வாசல்படிக்கு தூக்கி வந்து அமர்ந்த நரசிம்மர், வயிற்றைக் கிழித்து குடலைச் சாப்பிட்டார். சர்வ சாதுவான ஸ்ரீமன்நாராயணனே, இப்படி செய்கிறார் என்றால், அவருக்கு அவன் மீது எவ்வளவு கோபம் இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இந்த காரணத்தால், மாலையில் சாப்பிடும் உணவு நரமாமிசத்துக்கு சமமாகக் கருதப்படுகிறது. வாசல்படியில் உட்கார்ந்தால் ஆயுள் குறையும் என்பதும் ஒரு கருத்து. வாசல்படிக்கு மேலே பல்லி உள்ளிட்ட ஜந்துக்கள் அலையும். அவை நம் மேல் விழுந்து ரோகம் வந்துவிடக்கூடாது என்றும் சொல்வார்கள்.

அறியாமலே அர்ச்சனை

Image result for siva vilvam

பாரதப்போரில் காயமடைந்து அம்புப்படுக்கையில் கிடந்த பீஷ்மரிடம், சித்ரபானு என்ற மன்னன் தன் முற்பிறவிக்கதையைக் கூறினான். முற்பிறவியில் அவன் பெயர் சுச்வரன். "இனிய குரலைக் கொண்டவன்' என்பது இதன் பொருள். ஒருநாள் வேட்டைக்குச் சென்றபோது விலங்கேதும் சிக்கவில்லை. பசியால் வாடிய அவன், இரவில் ஒரு வில்வ மரத்தடியில் தங்கினான். தூக்கம் வராததால் மரத்தின் மீதேறி இலைகளை பறித்து பொழுது போக்கினான். அந்த இலைகள் கீழிருந்த லிங்கம் மீது விழ வில்வ அர்ச்சனையாக அமைந்தது. அந்த புண்ணியத்தால் மன்னராகப் பிறக்கும் பேறு பெற்றதாக கூறினான்.

பிரதோஷம் நடத்துவது ஏன் ?

Image result for பிரதோஷம்

அமிர்தம் பெறும் நோக்கத்துடன் தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை நாணாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது வாசுகி, துன்பம் தாளாமல் நஞ்சைக் கக்கியது. இதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானின் உதவியை நாடினர். அதனை ஒரு திவலையாக்கி சிவன் குடித்தார். கழுத்து நீலமானதால் "நீலகண்டன்' என பெயர் பெற்றார். தொடர்ந்து பாற்கடலைக் கடைந்த போது, துவாதசி திதிநாளில் அமிர்தம் வெளிவந்தது. தங்களுக்கு உதவிய சிவனுக்கு நன்றி செலுத்த மறந்தனர். திரயோதசி திதியன்று தங்களின் தவறை உணர்ந்து சிவனிடம் மன்னித்தருள வேண்டினர். இறைவனும் மன்னித்து ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக, நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு நடுவில் நின்று நடனமாடினார். அந்த புனித வேளையே "பிரதோஷம்'. அப்போது சிவனைத் தரிசித்த தேவர்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறப் பெற்றனர். 

முக்திவரத்தையும் இறைவன் அவர்களுக்கு வழங்கினார். பிரதோஷத்தன்று சிவபார்வதி இருவரும் ஆனந்ததாண்டவம் ஆடும்போது, எல்லா தேவதைகளும் சிவனை தரிசிக்க ஒன்று சேர்வதாக ஐதீகம். தேவதைகள் புல்லாங்குழல் வாசித்தும், மத்தளம் முழங்கியும் அவரை வழிபடுவர். தேவலோக கந்தர்வர்கள், யட்சர்கள் தேவகானங்களை பாடுவர். நாட்டிய பெண்களான அப்சரஸ் நடனமாடுவர். இந்நேரத்தில், ஸ்கந்த புராணத்திலுள்ள பிரதோஷ அஷ்டகத்தைப் படிப்பது சிறப்பு.

வேடனின் வடிவில் முருகன்


நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகிலுள்ள கொல்லிமலை அடிவாரத்தில் பழநியப்பர் (முருகன்) கோயில் உள்ளது. இங்கு முருகன் வேடனைப் போல தலையில் கொண்டையும், வேங்கைமலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடியிருக்கிறார். காலில் செருப்பும், வீரதண்டையும் உள்ளது. இடது கையில் வேலும், இடுப்பில் கத்தியும், கையில் சக்திஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் இடம்பெற்றுள்ளது. இவரை வழிபடுபவர்களுக்கு "நான்' என்ற ஆணவம் நீங்கிவிடும். நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகில் கொல்லிமலை உள்ளது.

Wednesday 29 November 2017

தலைமுடியைத் திரியாக்கியவர்


கணம்புல்லர் என்ற சிவபக்தர், சிவனுக்கு விளக்கேற்றி வழிபடுவதை தன் அன்றாடக் கடமையாகக் கொண்டிருந்தார். செல்வந்தரான இவர் தன் பொருளை எல்லாம் சிவாலயங்களில் தீபமேற்ற செலவழித்தார். செல்வத்தை இழந்த நிலையில், கணம்புல் என்னும் புல்லை அறுத்து விற்று வழிபாட்டைத் தொடர்ந்தார். ஒருநாள் புல்லை விலைக்கு வாங்க யாரும் வரவில்லை. அப்புல்லையே திரியாக்கி விளக்கேற்றினார். அது எரியாமல் அணைந்து போனது. உடனே, தன் தலைமுடியையே திரியாக்கத் துணிந்தார். அவரது பக்தியை மெச்சிய சிவன், பார்வதி உடன் எழுந்தருளி நற்கதி அளித்தார்.

லிங்கம் வடித்த அசுரன்


கம்சனின் நண்பனான பாணாசுரன், சிவனை நினைத்து தவத்தில் ஆழ்ந்தான். நேரில் காட்சியளித்த அவரிடம், ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகளைப் பெற்றான். தினமும் ஆயிரம் சிவலிங்கங்களை பூஜித்தான். ஸ்ரீசைலம், கங்கைக்கரை, நேபாளம், யமுனை போன்ற புண்ணிய தலங்களில் பதினான்கு கோடி சிவலிங்கங்களைப் பிரதிஷ்டைசெய்தான். கம்சனுக்கு நண்பனான இவனுடன் கிருஷ்ணர் போர் புரிந்தார். சிவபூஜை செய்த இருகைகள் தவிர மற்ற கைகளை வெட்டி வீழ்த்தினார். ஆனாலும், சிவபூஜையின் பலனால் கைலாயத்தை அடைந்தான். அங்கே குடமுழா என்னும் வாத்தியத்தை முழக்கும் பணியில் ஈடுபட்டான். பாணாசுரன் பிரதிஷ்டை செய்த லிங்கங்களை பாணலிங்கம் என்று குறிப்பிடுவர்.

நகை பிரச்னையால் திருமணத்தடையா ?


சிதம்பரம் அருகிலுள்ள சிவபுரி உச்சிநாதேஸ்வரர் கோயிலின் புராணப்பெயர் திருநெல்வாயில். ஒருசமயம், திருஞானசம்பந்தர் தனது தொண்டர்களுடன் இவ்வூர் வழியாக ஆச்சாள்புரம் சென்றார். கடும் வெயில் அடித்த உச்சிப்பொழுது அது. பசியோடு இருந்த தனது பக்தர்கள் சாப்பிட வேண்டுமென்று எண்ணிய சிவபெருமான், மாறு வேடத்தில் வந்து, உணவு பரிமாறினார். உச்சிவேளையில் உணவருளிய நாதர் என்பதால் "உச்சிநாதேஸ்வரர் எனப்பட்டார்'. இவர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். லிங்கத்தின் பின்புறம் பார்வதி பரமேஸ்வரர் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளது. நகைப் பிரச்னை காரணமாக திருமணம் தடைபட்டால், இங்குள்ள கனகாம்பிகையிடம் வேண்டுதல் வைக்கலாம்."கனகம்' என்றால் "தங்கம்'.

மதுரையின் வரலாறு


சிவபக்தனான குலசேகர பாண்டிய மன்னனிடம் சில பொருட்களை விற்க, தனஞ்ஜெயன் என்னும் வணிகர் வந்தார். வியாபாரத்தை முடித்துவிட்டு கடம்பமரங்கள் அடர்ந்த காட்டில் தங்கினார். அன்று இரவில், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு. வானிலிருந்து இறங்கி வந்த தேவர்கள் வழிபாடு நடத்தியதைக் கண்டார். ஆச்சரியமடைந்த அவர், மன்னனிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார். 

மன்னன் இதைக்கேட்டு ஆச்சரியமடைந்தான். வணிகர் குறிப்பிட்ட இடத்தில் கோயில் எழுப்பி, சுற்றிலும் வீதிகளை உண்டாக்கி, ஒரு நகரத்தை அமைத்தான். அப்போது அந்நகரின் மீது சிவனின் நெற்றியில் இருந்த சந்திரனில் இருந்து அமிர்தம் தெளிக்கப்பட்டது. அதனால், அந்த நகருக்கு "மதுரை' என்ற பெயர் ஏற்பட்டது. (அமிர்தத்தை "மது' என்றும் சொல்வர்)

ரதசப்தமியன்று புனித நீராடுங்கள்


தைமாத வளர்பிறை சப்தமியில் கொண்டாடப்படுவது ரத சப்தமி. (இந்த ஆண்டு பஞ்சாங்க மாறுபாட்டின் காரணமாக மாசியில் வருகிறது) இந்நாளில் சூரியன் தன் தேரை, மேற்குநோக்கி திருப்பி செலுத்துவதாக ஐதீகம். அன்று அதிகாலையில் புனித நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.

சுமங்கலிகள் ஏழு எருக்க இலைகளை அடுக்கி, மேல் இலையில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடவேண்டும். ஆண்கள் அட்சதை (மஞ்சள் கலந்த அரிசி) வைத்து நீராடலாம். அன்று பூஜையறையில் தேர்க்கோலமிட்டு, சுற்றிலும் செங்காவிப்பட்டை இட வேண்டும். சூரியனுக்கு சர்க்கரைப்பொங்கலும், வடையும் நைவேத்யம் செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகம், சூரிய சகஸ்ரநாமம் ஜபிக்க வேண்டும். இந்த விரதம் அனுஷ்டிப்பதால் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செல்வ வளம், சுமங்கலி பாக்கியம் நிலைக்கும். 

நன்றிதான் நிஜபக்தி


1927ம் ஆண்டில் காஞ்சி மடத்திற்கு ஒரு நாய் வந்தது. மகாபெரியவரின் பார்வையில் அது பட்டது. அது அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார். 
அந்த நாய் மடத்தில் கொடுக்கும் உணவை மட்டுமே சாப்பிடும். மடத்திற்கு வருபவர்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிடாது. தெருப்பக்கம் போனாலும், அங்கே கிடைப்பவற்றையும் உண்ணாது. தினமும் அதைக் குளிப்பாட்டி, நெற்றியில் திலகமிடுவார்கள். பெரியவரைக் காணவரும் பக்தர்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாது. மடத்தின் கால்நடைகளையும், பொருட்களையும் பாதுகாக்கும். மடத்து ஊழியர்கள் கண்ணயர்ந்து விட்டால், இது தூங்காமல் விழித்திருக்கும். நாயின் இந்த குணத்தை அறிந்த பெரியவர் ஒவ்வொரு நாள் மாலையிலும் புன்னகையுடன், "நாய்க்கு உணவு கொடுத்தாகி விட்டதா?'' என்று வாஞ்சையுடன் கேட்பார்.

சில நேரங்களில் ஊழியர்கள் உணவிட மறந்து விட்டால், பட்டினியாகவே கிடக்கும். பெரியவர் உபவாசம் (உண்ணாநோன்பு) இருக்கும் நாட்களிலும் அது சாப்பிடாது.

பெரியவர் மற்ற ஊர்களுக்கு முகாமிட பல்லக்கில் செல்லும் போது, பல்லக்கின் அடியிலேயே நாயும் செல்லும். யாத்திரை கிளம்பினால், அவருடன் செல்லும் யானையின் கால்களுக்கு இடையில் நடக்கும். 

ஒருநாள், பெரியவர் ஒரு ஊரில் முகாமிட்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் அதன் மீது கல்லை வீசியதில் காயம் ஏற்பட்டது. நாய் வலி தாங்காமல் குரைத்துக் கொண்டே இருந்தது. பெரியவருக்கு தெரிந்தால் என்னாகுமோ என பயந்த மடத்து அதிகாரிகள், ""நாயை ஏதாவது ஊரில் விட்டு வந்து விடுங்கள்,'' என உத்தரவிட்டனர்.

ஊழியர்களும் அதைப் பிடித்துக் கொண்டு, 40 கி.மீ., தள்ளி இருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டு சென்று கட்டிப் போட்டு விட்டு வந்து விட்டனர். ஆனால், நாய் விட்டதா என்ன...! கட்டை அறுத்துக்கொண்டு, ஊழியர்கள் மடத்திற்கு திரும்பும் முன்பே, வேறு ஏதோ வழியில் முகாமுக்கு வந்து விட்டது.

அன்றுமுதல், அது உயிர் வாழ்ந்த வரை, மகாபெரியவரைத் தரிசிக்காமல் சாப்பிட்டதில்லை. பெரியவரைத் தரிசிக்க வரும் பக்தர்களெல்லாம், இந்த அதிசய நாயையும் பார்த்துவிட்டே செல்வார்கள். 

பக்தி என்பதே நன்றி மறவாமை தான்! ஆம்..நன்றி மிக்க இந்த நாயின் பக்தி நமக்கும் நன்றி மறவாமல் இருக்க பாடம் கற்றுத்தருகிறது.

கற்பனை செய்தாலே பலன்


கடவுளைத் தரிசித்தால் மட்டும் தான் என்றில்லை. சில நல்ல நிகழ்வுகளைக் கற்பனை செய்தாலே பலனுண்டு. ராமனின் பட்டாபிஷேக நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பது இங்கே சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மனக்கண் முன் கற்பனை செய்தாலே போதும்! ராமகுடும்பத்தின் பூரண நல்லாசியுடன் செல்வவளம் பெற்று வாழும் பலன் கிடைக்கும்.

பதினான்கு வருட வனவாசம் முடிந்து புஷ்பக விமானத்தில் ராமன் சீதையுடன் அயோத்திக்குத் திரும்பினார். அவரைக் கண்ட மக்கள் அன்பினால் வெறி பிடித்தவர்கள் போல் ஆடிப்பாடினர். மலர் தூவி வரவேற்றனர். அரண்மனைக்குள் அவர் நுழைந்தபோது, பரதன் ராமனின் பாதுகைகளை (காலணி) எடுத்து வந்தான். சுக்ரீவன், விபீஷணன் இருவரும் கவரி வீசினர். அனுமன் வெண்கொற்றக்குடை பிடித்தான். வில்லையும், அம்பையும் சத்ருக்கனன் தூக்கி வந்தான். சீதை தீர்த்தக் கமண்டலம் பிடித்திருந்தாள். வாலியின் மகன் அங்கதன் உடைவாளும், கரடிகளின் தலைவரான ஜாம்பவான் தங்கக்கவசமும் வைத்திருந்தனர். 

அன்னையரான கோசலை, கைகேயி, சுமித்திரை மூவரையும் வணங்கிய ராமர் அரியணையில் அமர்ந்தார். அவருக்கு புனிதநதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தால் வசிஷ்டர் அபிஷேகம் செய்தார். நட்சத்திரத்திற்கு நடுவே முழுநிலவு போல ராமர் காட்சியளித்தார். மக்கள் சந்தோஷக் களிப்பில் மகிழ்ந்தனர்.

மங்களமும் மந்திரமும்


ஒருசமயம், உலகம் அழிந்த காலத்தில் வெள்ளத்தில் மிதந்த அமிர்த கலசத்தை உடைக்க வந்தார் சிவன். அவர், கும்பகோணத்தில் லிங்க உருவில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டதை அறிந்த பார்வதி அங்கு வந்தாள். மகாமக குளத்தில் நீராடினாள். அம்பிகையை தன் இடப்பாகத்தில் அமரும் படி அருள்புரிந்தார் சிவன். அவளுக்கு மங்களாம்பிகை என்ற பெயர் வந்தது. சக்திபீடங்களில் இது மங்களபீடம், மந்திரபீடம் என்று பெயர் பெறுகிறது. "மங்களம்' என்றால் "ஆக்குவது'. "மந்திரம்' என்றால் "காப்பது'. ஆக்குபவளும் அவளே, காப்பவளும் அவளே. இந்த அம்பிகையை மாசிமகத்தன்று வழிபட்டவர்க்கு எதையும் ஆக்கும் சக்தியும், ஆக்கியதைப் பாதுகாக்கும் திறனும் உண்டாகும்.

எழ முயன்ற பெருமாள்


கும்பகோணம் சாரங்கபாணியைக் கண்ட திருமழிசை ஆழ்வார், தன்னை லட்சுமி தாயார் போல் உருவகப்படுத்திக் கொண்டார். கணவனிடம் மனைவி எப்படி அன்பு மொழி கூறுவாளோ அதுபோல, ""பெருமாளே! காட்டில் நடந்து உன் (ராமன்) கால்கள் நொந்து விட்டதா? அதனால், காவிரிக்கரையான கும்பகோணத்தில் பள்ளி கொண்டு விட்டாயா! எழுந்து பேசமாட்டாயா?,'' என்று பரிவுடன் பாடினார். இதைக் கேட்ட பெருமாள் எழ முயற்சித்தார். அவ்வாறு எழ முயன்ற கோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார். இதனை "உத்தான சயனம்' என்பர். பெருமாள் மீது அன்பு கொண்ட திருமழிசையாழ்வாருக்கு "பிரான்' என்ற சொல்லைச் சேர்த்து "திருமழிசை பிரான்' என்ற சிறப்பு பெயர் உண்டானது.

Tuesday 28 November 2017

வாசனைப் பிரியர்

Related image

உஷ்ணம் தலைக்கேறி விட்டால் பித்து பிடித்து விட்டது என்பர். சிவனும் ஒரு பித்தனைப் போல புலித்தோல் ஆடை, பாம்பு ஆபரணம் சூடி இருப்பதால் சுந்தரர், "பித்தா பிறை சூடி' என்று தேவாரப்பாடலில் குறிப்பிடுகிறார். உஷ்ண தேகம் கொண்டவர் என்பதால் சிவனைக் குளிர்விக்க அபிஷேகம் செய்வர். அபிஷேகப்பிரியர் என்று அவரைக் குறிப்பிடுவர். ஆனால், அமிர்தம் கலந்த மண்ணால் ஆன கும்பகோணம் கும்பேஸ்வரர், அமிர்தம் போல குளிர்ச்சி மிக்கவராக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் நடப்பதில்லை. பவுர்ணமியன்று மட்டும் புனுகுச்சட்டம் சாத்தி வழிபடுவர். புனுகுவின் நறுமணம் கும்பேஸ்வரருக்கு மிகவும் பிடிக்கும்.

கிரகதோஷமா! அரசமரத்தைச் சுற்றுங்க!

Image result for arasamaram

தெய்வீகமான மரங்களில் சிறப்பானது அரசு. அரசமர சுள்ளி ஹோமம், யாக குண்டங்களில் நெருப்பிட பயன்படுத்தப்படுகிறது. மும்மூர்த்திகளின் வடிவமாகத் திகழும் இதன் அடியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், உச்சியில் சிவனும் இருப்பதாக ஐதீகம். இதற்கு "அஸ்வத்த விருட்சம்' என்று பெயர். "அஸ்வத்தம்' என்றால் "குதிரை'. ஒருமுறை அக்னிதேவன், குதிரையாக மாறி அரசமரத்தில் ஒளிந்து கொண்டதால், இதற்கு "அஸ்வத்தம்' என்ற பெயர் ஏற்பட்டது. திங்கள்கிழமையும், அமாவாசையும் கூடி வரும் நாளில் பெண்கள் அரசமரத்தை வலம் வந்து வழிபடுவது மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு ஆகிய பலன்களைத் தரும். இதன் அடியில் நாகங்களை பிரதிஷ்டை செய்யும் வழக்கம் தமிழகத்தில் மரபாக பின்பற்றப்படுகிறது. சர்ப்பதோஷத்தால் (ராகு, கேது கிரக தோஷம்) திருமணம், குழந்தைப்பேறு தடைபடுபவர்கள் அரசமரத்தடி நாகர்களுக்கு பாலபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும்.

அப்பா நெருப்பு... அம்மா நீர்


பரமேஸ்வரனின் நேத்ராக்னியில் இருந்து (கண்களில் இருந்து வந்த நெருப்பு) சுடரே குமாரசுவாமி. திருப்புகழில் சொல்லப்பட்டுள்ளபடி நெருப்பையும் எரிக்கும் ஞானாக்னி அவர். அவர் அக்னியாக விளங்கினாலும் இருதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால், ரொம்ப ஜலசம்பந்தமும் உள்ளவர். சரவணன் என்ற பொய்கையில் தான் சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா சரவணப்பொய்கை என்னும் நீராக இருந்தாள். ஜலரூபமாக இருந்த கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் "காங்கேயன்' என்று பெயர். 

எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. கார்த்திகைப் பெண்டீருக்குப் பிள்ளையாகி கார்த்திகேயன் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கிருத்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட "ஷடக்ஷரி' இவருடைய மந்திரம்(சரவணபவ). காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாத்சரியம் என்று ஆறு பகைவர்களைக் கொன்று, ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே. 

ஆதியில் முருகக்கடவுள் சங்கப்புலவராக இருந்தார். பின்னர் புலமையோடு சக்தி, ஞானம்,வைதீகம், சைவம் எல்லாவற்றையும் சேர்த்து திராவிட தேசத்தை ரட்சிப்பதற்காக ஞானசம்பந்தராக வந்தார். "நான்மறை சம்பந்தன்' என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்கிறார். முருகனைப் புகழ்கிறார் மகாபெரியவர்

எத்திராஜ் என்றால் என்ன தெரியுமா?


எத்திராஜர் என்று குறிப்பிடப்படுபவர் ராமானுஜர். துறவிகளை வடமொழியில் "யதி' என்பர். இச்சொல்லுக்கு "அடக்கியவர்' என்ற பொருளும் உண்டு. ஐம்புலன்களையும், மனதையும் அடக்க வல்லவரே துறவியாக முடியும் என்பதால் "யதி' என்பர். துறவிகளில் சிறந்து விளங்கியதால் ராமானுஜருக்கு "யதிராஜர்' என்று பெயர் வந்தது. இச்சொல்லே "எத்திராஜர்' என்றாகி விட்டது. ராமானுஜர் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் குழந்தைகளுக்கு "எத்திராஜ்' என்று பெயரிடுவர்.

நன்றாக படிக்க இங்கே போங்க


ராமனின் குருவான வசிஷ்டர், ஞானம் பெற ஆர்வம் கொண்டு பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரது விருப்பத்தை அறிந்த பிரம்மன், ஒரே ஒரு தர்மம் செய்தால், பலன் பத்தாக பெருகும் தலம் பூலோகத்தில் உள்ளது. அங்கு சென்றால் ஞானம் கிடைக்கும் என்றார். அந்தத் தலமே மயிலாடுதுறை அருகிலுள்ள தலைஞாயிறு. பிரம்மாவின் அறிவுரையை ஏற்ற வசிஷ்டர், அங்கு சென்று சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜை செய்து ஞானம் பெற்றார். இத்தல இறைவனின் மகிமையை அறிந்த இந்திரன், அத்தலம் வந்து தான் செய்த ஒரு குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். அவனது பாவம் தீர்ந்தது. இதனால் இறைவனுக்கு, "குற்றம் பொறுத்த நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. மயிலாடுதுறையில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு சென்று வந்தால் படிப்பில் பின்தங்கிய குழந்தைகள் சிறப்பாக படிப்பர் என்பது ஐதீகம். குழந்தைகளின் கல்விக்காக சம்பந்தர் பாடிய தேவாரத்தை இங்கு பாடலாம்.

சிவனுக்கு நூலின் பெயர்


அவ்வையார் எழுதிய நூல் ஆத்திசூடி. இது சிவனுடைய பெயர்களில் ஒன்று. சிவன் தலையில் பிறைச்சந்திரன், கங்கை, நாகம் ஆகியவற்றை சூடியிருப்பதோடு கொன்றைப்பூவையும், ஆத்திமலரையும் சூடியிருப்பார். ஆத்திப்பூ, இளம் மஞ்சள் நிறத்தில் பிறைச்சந்திரன் போல இருக்கும். இதனை வடமொழியில் "அகஸ்தி' என்று குறிப்பிடுவர். அதுவே அகத்திப்பூ ஆகி ஆத்திப்பூ என்றாகி விட்டது. ஆத்திப்பூவை சூடியவர் என்பதால் சிவனுக்கு "ஆத்திசூடி' என்ற திருநாமம் உண்டு. ஆத்திசூடியில் வரும் கடவுள்வாழ்த்துப் பாடல் சிவனைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

அமர்ந்தால் பட்டாபிஷேகம் நின்றால் சித்ரகூடம்


ராமரும் சீதையும் ஆசனத்தில் அமர்ந்து, தம்பிகள் நின்று கொண்டிருந்தால் அதை "பட்டாபிஷேக கோலம்' என்பர். சீதாராமர், லட்சுமணருடன் நிற்கும் கோலத்திலுள்ள கோயில்களை "சித்ரகூடம்' என்று சொல்வர். வனவாசம் சென்ற காலத்தில் ராமரும் சீதையும் லட்சுமணரோடு இருந்த முக்கிய இடங்கள் இரண்டு. ஒன்று சித்ரகூடம், மற்றொன்று பஞ்சவடி. பஞ்சவடியில் இருந்து சீதையை ராவணன் தூக்கிச் சென்றதால், அந்த இடத்தை ஓவியம் வரையும் வழக்கம் குறைவு.

பக்திக்கு கட்டுப்படுபவன்


அடியார்களும், புலவர்களும் இறைவனின் பாதத்திலிருந்து உச்சிமுடிவரை ஒவ்வொரு அங்கமாகப் போற்றிப் பாடுவர். இதனைப் பாதாதிகேச வர்ணனை என்பர். ஆனால், நம்மாழ்வார், இதற்கு நேர்மாறாக பெருமாளின் முடியிலிருந்து திருவடி வரை பாடினார். இதை "கேசாதிபாத வர்ணனை' என்பர். நம்மாழ்வார் இப்படி பாடக் காரணம் உண்டு. ஒருமுறை, அவர் பெருமாளை எண்ணி தியானத்தில் ஆழ்ந்தார். தியானம் கலைந்து பார்த்தபோது, அவர் அமர்ந்திருந்த இடத்தில் பெருமாளின் திருமுடியைக் கண்டார். அவர் அமர்ந்திருந்த நிலையில், பாதமே முதலில் கண்களில் பட்டிருக்க வேண்டும். ஆனால், தன்னையே சுருக்கிக் கொண்டு, பெருமாள் கிரீட தரிசனம் காட்டியதால், ""முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?,'' என்று பாடிவிட்டார். நிஜமான பக்திக்கு ஆண்டவன் கட்டுப்படுவான் என்பதற்கு இந்நிகழ்ச்சி உதாரணம்.

வாகனத்துக்கும் வாகனம் இருக்கு


கோயில்களில் இறைவனைச் சுமந்து வரும் கருடன், அனுமன், சிம்மம் முதலானவற்றை வாகனங்கள் என்போம். ஆனால், ஒரு வாகனத்தையே சுமக்க ஒரு வாகனம் இருப்பது தெரியுமா! பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் இருப்பவர் கருடன். இவரை "கருடாழ்வார்' என்பர். வைகுண்டத்தில் இருந்து திருப்பதி மலையான சப்தகிரியை பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர். அங்கிருக்கும் ஏழுமலைகளில் கருடாத்ரியும் ஒன்று. பெருமாளுக்கு வாகனம் கருடன். ஆனால், அந்த கருடனுக்கு ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. "சுபர்ணோ வாயு வாஹனா:'' என்று கருடனைக் குறிப்பிடுகிறது. அதாவது காற்றே அதன் வாகனம். கருடமந்திரமான "கருடபஞ்சாட்சரிக்கு' உடனே பலன் தரும் சக்தி உண்டு. திருவிழா காலத்தில் கருடசேவையில் பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு. கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறி. சுவாதியன்று மாலைநேரத்தில் கருடதரிசனம் மிகவும் விசேஷம்.

Monday 27 November 2017

உறங்கிக்கொண்டே நிர்வகிப்பவர்


மாயஜாலக்காரராக வேடிக்கைகளை நிகழ்த்துவதில் வல்லவர் என்பதால் விஷ்ணுவுக்கு "மகாமாயன்' என்று பெயர். தமிழில் "மாயோன்' என குறிப்பிடப்படுகிறார். இவர் செய்யும் வேடிக்கையிலேயே பெரிய வேடிக்கை, தூங்கிக் கொண்டே இந்த பிரபஞ்சத்தை நிர்வகிப்பது தான். ஊரைக் கூட்டிக் கொண்டு அரங்கத்தின் மேடையில் தூங்குகிறார். அந்த தூக்கத்தில் எழுந்த கனவாக, இந்த பிரபஞ்சம் உண்டானது. அந்த வேடிக்கை கனவில் தான், உலகின் சிருஷ்டி தத்துவங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. "அவரது கனவு கலையும் நாளில் உலகம் முடிந்து போகும்' என்கின்றனர் மகான்கள்.

கண் துடித்தால் என்னாகும்


சுக்ரீவன் ராமனிடம், ""ராமா! இனி சுகமோ துக்கமோ நம் இருவருக்கும் ஒன்றுதான்!'' என்று சொல்லி நண்பனாகச் சேர்ந்தான். அப்போது பலசாலியான அனுமன், ஒரு மரக்கிளையை முறித்து நெருப்பு மூட்டினார். அக்னி சாட்சியாக நண்பர்கள் இருவரும் வலம் வந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். அப்போது அசோகவனத்தில் இருந்த சீதைக்கு இடதுகண் துடித்தது. பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மை ஏற்படும். தனக்கு நல்லகாலம் வரப்போகிறது என்பதை எண்ணி சீதை மகிழ்ந்தாள். ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது என்பர்.

ஒருவனே தேவனென்று போற்றுவோம்


ஆஸ்திகனோ, நாத்திகனோ...மனித சக்திக்கு மீறிய ஏதோ ஒரு சக்தி இருப்பது நிதர்சனம். ஆஸ்திகவாதி அவனது மனநிலையின் அடிப்படையில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன், சக்தி என்றெல்லாம் இறைவனைப் பிரிக்கிறான். தர்மத்தைக் கடை பிடிக்க வேண்டும் என்பதற்காக, இந்த தெய்வங்களுக்கு புராணக்கதைகளை உருவாக்கியுள்ளான்.

அப்பைய தீட்சிதர் என்ற மகான், ""மகேஸ்வரனுக்கும் (சிவன்), ஜனார்த்தனனுக்கும் (விஷ்ணு) இடையே துளிக்கூட பேதம் இல்லை. ஆனால், என்னவோ தெரியவில்லை..என் மனம் சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமானிடம் தான் அதிகம் ஈடுபடுகிறது,'' என்கிறார். லீலாசுகர் என்னும் மகான், ""நான் சைவன் தான். நமசிவாய நாமத்தை ஜபம் செய்பவன் தான். ஆனால், என் மனம் என்னவோ காயாம்பூ நிறம் (கருப்பு) கொண்ட கோபிகா கண்ணனிடமே லயிக்கிறது,'' என்கிறார்.

எனவே, மனிதர்கள் என் தெய்வம் தான் பெரிது, உன் தெய்வம் சிறிது என்று சொல்லத் தேவையில்லை. எல்லாரும் ஒரே இறைவனையே வணங்குகிறார்கள். பெயரில் தான் வித்தியாசம். இதன் காரணமாக, கடவுளே பொய் என்று சொல்லத் தேவையில்லை. இந்தப் பிரச்னையை நாத்திகர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆத்திகர்கள் பாதை வகுத்து விடக்கூடாது.

அன்றே நடந்த காதலர் தினம்


காதலர் தினம் என்பது இன்று நேற்றல்ல. சங்க காலத்திலேயே இருந்துள்ளது. சங்க இலக்கியத்தில் "மடலேறுதல்' என்ற வகையுண்டு. காதலித்தவளை அடைய முடியாத காதலன், தன் மனநிலையை ஊரறியச் செய்ய, காதலியின் உருவம் வரைந்த கொடியை கையில் தாங்கியபடி ஊரை வலம் வருவான். "இவள் தான் என்னைக் கைவிட்ட இரக்கமற்றவள்' என்று கண்ணீர் சிந்துவான். இதுபோல, திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகவும், திருமாலைத் தன் காதலனாகவும் கருதி, சிறிய திருமடல், பெரியதிருமடல் என்னும் பாடல்களை உருகி உருகி எழுதியுள்ளார். இப்பாடல்களில் பல திவ்யதேசங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

எந்த சாபமும் பிள்ளையாரை அணுகாது


பார்வதிக்கு சிவன் ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை தேவி கவனமாகக் கேட்கவில்லை. கோபமடைந்த சிவன், பார்வதியை மீன் பிடிக்கும் பரதவர் குலப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார். அப்போது, அங்கு வந்த முருகனும், விநாயகரும் அம்மாவின் பக்கம் சேர்ந்து கொண்டனர். சிவனின் கையில் இருந்த சுவடிகளை(ஞானநூல்கள்) பறித்து வீசியெறிந்தனர். விநாயகரையும், முருகனையும் தங்கள் இருப்பிடத்திற்குள் நுழைய அனுமதித்த நந்திகேஸ்வரரை சுறாமீனாகும்படி சாபமிட்டார். அப்போதும் கோபம் தணியவில்லை. முருகனை வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கச் செய்தார். விநாயகரை ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டார். விநாயகருக்கு சாபம் அளித்தால் மீண்டும் சிவனிடமே வந்து சேரும் என்பதே இதற்குக் காரணம். திருவிளையாடல் புராணத்தில் பரஞ்ஜோதி முனிவர் இதைக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்ச்சி வலைவீசிய படலத்தில் இடம்பெற்றுள்ளது.

காட்டுக்குள் கடவுள்


தீர்க்க ரோம மகரிஷி தலைமையில்12 ஆண்டுகள் சத்திரவேள்வி செய்ய முனிவர்கள் விரும்பினர். வேள்வி நடத்தும் இடம் தெய்வாம்சம் மிக்கதாக இருக்க வேண்டும் என எண்ணி பிரம்மாவின் உதவியை நாடினர். அனைவரையும் ஒரு விமானத்தில் ஏற்றி, ""இதில் பூலோகத்தைச் சுற்றி வாருங்கள். விமானத்தின் சக்கரம் எங்கு விழுகிறதோ அதுவே வேள்வி நடத்த தகுதியான இடம்,'' என்றார். அதன் படி ரிஷிகள் சென்றபோது, விமானச் சக்கரம் ஒரு வனப்பகுதியில் விழுந்தது. அதுவே நைமிசாரண்யம். "நேமி' என்றால் "சக்கரம்'. "ஆரண்யம்' என்றால் "காடு'. இங்கு ரிஷிகள் செய்த சத்திரவேள்வியின் பயனாக விஷ்ணு யாக குண்டத்தில் தோன்றி, எல்லாருக்கும் மோட்சகதி வழங்கினார். மேற்குவங்க மாநிலத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மரங்கள் அடர்ந்த வனப்பகுதியையே விஷ்ணுவாக வழிபடுகின்றனர்.

நெஞ்சம் உருகட்டும்


சிவனை வணங்கும் போது, ஊனெல்லாம் உருகி, கண்ணீர் பெருகுவதாக திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற தெய்வப்புலவர்களெல்லாம் பாடியுள்ளனர். இறைவனிடம் நம் கோரிக்கையை வைக்கும் போது மனமுருகி பிரார்த்திக்க வேண்டும். நமக்கு ஏதேனும் நோய் வந்தால், அதன் வேதனை தாளாமல், ""கடவுளே! என் வியாதியை குணமாக்கமாட்டாயா?'' என உருகி கண்ணீர் சிந்தி வேண்டுவோம். அதுபோல், நமக்கு ஏதேனும் பொருள் கிடைத்து இன்பமாக இருக்கும் வேளையில் கூட, ""இப்படி ஒரு பாக்கியத்தை தந்தாயே,'' என கண்ணீர் சிந்தி வணங்க வேண்டும்.

மனம் குழந்தையானது


இலங்கையில் சீதையைத் தேடிச் சென்ற அனுமன், ராவணனின் மனைவி மண்டோதரியைப் பார்த்தான். அவளது அடக்கத்தைப் பார்த்து, அவளே சீதை என நினைத்துக் கொண்டான். தேடியது கிடைத்து விட்டால் மனதில் மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை தானே! எழுபது வயது பெரியவராக இருந்தாலும், அபரிமித மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டால், ஆட்டம் தானாக வருகிறதல்லவா! அதுபோல் வியாகரண (இலக்கணம்) பண்டிதர், சொல்லின் செல்வர் என்றெல்லாம் புகழப்படும் அனுமனும், தன் வாலை எடுத்து தரையில் அடித்தார். குரங்குகளுக்கு மகிழ்ச்சி வந்துவிட்டால், வாலை தான் தரையில் அடிக்கும். அத்துடன் ஒரு கம்பத்திலிருந்து இன்னொரு கம்பத்திற்கு தாவினார். மாறி மாறி தாவி விளையாடினார். இதன்மூலம் தன் பிறவிகுணத்தையும் அந்த இடத்திலே காட்டி விட்டார். எவ்வளவு பெரியவராக இருந்தாலும், இயற்கை சுபாவம் மாறாது என்பதும் இந்த சம்பவம் மூலம் நிரூபிக்கப்படுகிறது. அனுமனின் வால் தரிசனம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். அதனால் தான், அதற்கு குங்குமம் இட்டு மரியாதை செய்கிறார்கள்.

ரகசியம் பரம ரகசியம்


குரு÷க்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் கடும்போர். அர்ஜுனன் அடித்த அம்பில், கர்ணனின் தேர் முப்பது காத தூரம் தள்ளிப்போய் விழுந்தது. பெருமை தாங்காத அர்ஜுனன், தேரோட்டிக் கொண்டிருந்த கண்ணனிடம், இதுபற்றி பெருமையாகப் பேசினான். கண்ணன் அண்ணாந்து பார்த்தார். தேரில் பறந்த கொடியில், அமர்ந்திருந்த அனுமனிடம், ""கீழே குதி'' என்றார். அர்ஜுனனிடம்,""மைத்துனா! கடந்த யுகத்தில் அனுமனிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டியிருந்தது. அப்போது, மறந்து விட்டேன். இப்போது தான் ஞாபகம் வந்தது. அவனிடம் பேசிவிட்டு வருகிறேன்,'' என்றவர், அனுமனுடன் 
மறைந்து விட்டார்.

பின், கர்ணன் விட்ட அம்புகளின் பலம் தாங்காமல், அர்ஜுனனின் தேர் 35 காததூரம் பின்னால் போய் விழுந்தது. கண்ணன் அனுமனுடன் திரும்பி வந்தார். ""என்னப்பா! என்னவோ வீரம் பேசினாயே! நீயே உன் வீரத்தை மெச்சிக் கொள்ளாதே. பலமிக்க அனுமனும், நானும் இருந்ததாலேயே உன்னால் தாக்குப்பிடிக்க முடிந்தது,'' என்றார்.

அதிருக்கட்டும்...அனுமனிடம் கண்ணன் பேசிய ரகசியம் என்ன! யாருக்குத் தெரியும்...ஆனால், உத்தேசமாக ஒன்றை உணர முடிகிறது. ""உன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று எண்ணாதே. எல்லாமே இறைவனால் தான் நடக்கிறது,'' என்ற ரகசியத்தை அனுமனுக்குப் போதித்திருப்பாரோ!

பொட்டு வைப்பது ஏன் ?


புருவ மத்தியில், மூளையின் முன்புறம் பைனீயல் கிளாண்ட் என்னும் சுரப்பி உள்ளது. யோக சாஸ்திரத்தில் இதனை "ஆக்ஞா சக்கரம்' என்பர். இதனைக் குளிர்ச்சிப்படுத்தவே விபூதி, சந்தனம், குங்குமம் இடுகிறோம். நெற்றியில் இடும் பொட்டை "நெற்றித்திலகம்' என்பர். "திலம்' என்றால் "எள்'. அளவில் சிறிதாக எள்ளைப் போல இட்டுக் கொள்வதால் "திலகம்' என்று பெயர் வந்தது. அக்காலத்தில், அரசர்கள் சந்தனம், ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களாலான சாந்தை நெற்றியில் வரைந்து கொள்வர். இதற்கு "திலக தாரணம்' என்று பெயர். பூக்கள், பாம்பு, திரிசூலம் போன்ற வடிவங்கள் இதில் இடம்பெறும். தாமரைமலர் வடிவம் இதில் சிறப்பானது. மகாகவி காளிதாசர் "மாளவிகாக்னிமித்ரம்' என்ற காவியத்தில் நெற்றித்திலகம் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

Sunday 26 November 2017

துளசியின் மகிமை


திருமாலின் மார்பினை அலங்கரிக்கும் துளசியை விஷ்ணுவின் மனைவி என்று "தேவீ பாகவதம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர். திருப்பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத்தோடு துளசி பிறந்ததாக பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. லட்சுமியின் அம்சமான துளசி இருக்குமிடத்தில் விஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம். எதனோடும் ஒப்பிட முடியாத உயர்வான பொருள் துளசி. ஒருமுறை, சுவாமிக்கு அணிவித்த துளசியைக் கழுவி, மீண்டும் ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்தலாம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் துளசிதீர்த்தம் அருந்தி விரதம் பூர்த்தி செய்வர். துளசிமாட வழிபாட்டைத் துவங்க ஏற்ற மாதம் கார்த்திகை. கார்த்திகை சோமவாரம், கார்த்திகை அமாவாசை நாட்களில் துளசிமாடத்தை வலம் வந்து வழிபட விரைவில் திருமணயோகம் உண்டாகும்.

வாயுவை விரட்டும் சடாரி


பெருமாள் கோயில்களில், திருமாலின் திருவடிகளைத் தலையில் தாங்குவதாகக் கருதி செய்யும் வழிபாடு சடாரி. இதனை"ஸ்ரீசடாரி' என்று குறிப்பிடுவர். "ஸ்ரீ' என்பது லட்சுமியையும், "சடாரி' என்பது திருமாலையும் குறிக்கும். இதன் மகிமை பற்றி "பாதுகா ஸஹஸ்ரம்' என்னும் நூலில் வேதாந்ததேசிகர் பாடியுள்ளார். "சடம்' என்னும் ஒருவகை வாயு தீண்டுவதால் தான் உயிர்களுக்கு அறியாமை உண்டாகிறது. அந்த வாயு மீது கோபம் கொண்டு விரட்டியதால், நம்மாழ்வாருக்கு "சடகோபன்' என்ற பெயர் ஏற்பட்டது. எனவே சடாரியை நம்மாழ்வாரின் சொரூபமாக போற்றுவர். இதனைத் தாங்கும்போது பெருமாள், தாயார் இருவரின் திருவடிகளையும் தலையில் தாங்குவதாக ஐதீகம். இதைத் தாங்கினால், உலக வாழ்வு நிலையற்றது என்றும், இறைவனின் திருவடியே நிரந்தரமானது என்ற ஞானமும் ஏற்படும்.

ருத்ராட்சம் அணிந்து குளியுங்கள்


சிவசின்னங்களில் முக்கியமானது ருத்ராட்சம். இதற்கு "சிவனின் கண்' என்று பொருள். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய அசுரர்களை சிவன் நெற்றிக்கண்ணால் எரித்தார். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியால் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அந்த கண்ணீர் துளிகளே ருத்ராட்ச விதைகளாக மாறின. ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளின் எண்ணிக்கையை முகம் என்று குறிப்பிடுவர். இதில் ஒருமுகம் முதல் பதினாறு முகம் வரை இருக்கும். ஒருமுக ருத்ராட்சம் சிறப்பானது. இதை அணிபவர்கள் பூவுலக வாழ்வு முடிந்து சிவலோக வாழ்வு பெறுவர். ருத்ராட்சத்தை அணிந்து நீராடுவது கங்கையில் குளித்த புண்ணியத்தை தரும்.

நான் "நாய்'

Image result for மாணிக்கவாசகர்

சிவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்டு, தன்னைப் போலவே (சிவமாகவே) ஆக்கினார். இறைவனின் பேரருளை வியந்த நிலையில், இவர் பாடிய பாடல்கள் திருவாசகத்தில் "அச்சோ' என்ற பதிகமாக இடம்பெற்றுள்ளது. இதில் கடைசிப்பாடலில் "நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்து அம்மை எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே' என்று குறிப்பிடுகிறார். ""நாய் போல இழிந்த என்னையும் ஒரு பொருளாக மதித்து பல்லக்கில் ஏற்றுவித்த தயாபரன் சிவன். என்னைப் போல புண்ணியத்தை பெறக் கூடியவர் வேறு யாருமில்லையே'' என்று வியக்கிறார். இந்த பாடலோடு திருவாசகம் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது. ஒரு பெரிய அருளாளர் தன்னை நாய்க்கு ஒப்பிட்டது, அனைவருக்கும் தாழ்மை வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்


நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள். ""பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே! தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே! உனது திருவடியைச் சரணடைகிறேன்.

சொர்க்கவாசலா! நுழையவே வேண்டாம்!


உலகத்தைப் படைத்த இறைவன், நமக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்தார். கோடி நன்மையான விஷயங்களைக் கொடுத்தவர், ஒன்றிரண்டு தீமையான விஷயங்களையும் வைத்தார். இதன்மூலம் உலக உயிர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது. எவனொருவன் நல்லதைப் பிடித்துக்கொண்டானோ, அவன் மீண்டும் இறைவனையே அடைகிறான். கெட்டதைப் பிடிப்பவனுக்கு பல சோதனைகளையும், ஆயிரமாயிரம் பிறவிகளையும் கொடுத்து படாதபாடு படுத்தி, ஞானத்தைக் கொடுத்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். யார் நல்லது செய்கிறார்களோ, அவர்கள் பக்கம் அவன் நிற்கிறார். திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, நல்லவர்களான பாண்டவர்களுடன் நின்றார். 

கெட்டவர்களான கவுரவர்களை அழிக்க துணைசெய்தார். எனவே, இறைவன் கொடுத்த நல்லதை மட்டுமே தேர்வு செய்பவர்கள், பாவக்கணக்கு பட்டியலில் இருக்கமாட்டார்கள். அவர்கள் பெருமாள் கோயிலுக்குப் போய் சொர்க்கவாசலுக்குள் நுழைய வேண்டுமென்பதில்லை. அவர்களின் பாவத்தைப் பெருமாளே துடைத்து, பரமபதத்திற்கே அழைத்துச் சென்றுவிடுவார்.

குழந்தை ஏன் அழுகிறது ?


ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்திலே உருவானது. அதன் மனதில் பெருமாள் மறைந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டது. உடனே ஓவென்று அழுதபடியே,""பெருமாளே! ரங்கா! ஏன் என்னை மீண்டும் பூமியில் பிறக்கச்செய்யப் போகிறாய்? இதுவரை எடுத்த பிறவிகளில் நான் பட்டது போதாதா?'' என்றது.

""பட்டேன்.. பட்டேன் என்கிறாயே? அந்த பாடுகளை எல்லாம் நானா தந்தேன்! நீயே இழுத்துக்கொண்டது தானே! போபோ! நீ துவங்கியதை நீதான் முடித்து வைக்க வேண்டும்!'' என்று பெருமாள் பதில் சொல்லவும், தாய்க்கு பிரசவவலி ஏற்பட குழந்தை பூமிக்கு வந்து விட்டது. அதுவரை, அதன் கண்களுக்கு தெரிந்த பெருமாள் இப்போது தெரியவில்லை. "க்வா க்வா' என்று அழ ஆரம்பித்து விட்டது. "க்வா க்வா' என்றால், "எங்கே எங்கே' என்று அர்த்தம். "இவ்வளவு நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவனை எங்கே?' என்று அழ ஆரம்பித்து விட்டதாம் குழந்தை. "க்வா க்வா' என்பது தான் இப்போது 'குவா குவா' ஆகியிருக்கிறது. மீண்டும் "க்வா க்வா' போடாமல், பரமபதத்திலேயே தங்க வேண்டுமானால், நம் கண்களில் நல்லது மட்டுமே படட்டும்.

அக்னியை கடன் வாங்காதீர்


"வீட்டில் சாம்பிராணி போட வேண்டும், பக்கத்து வீட்டில் எரியும் விறகு அடுப்பிலிருந்து கங்கு (அக்னி) வாங்கி வா,'' என்று பிள்ளைகளைப் பக்கத்து வீட்டுக்கு அனுப்பாதீர்கள். இது சாஸ்திரத்துக்கு விரோதமானது. கோயிலில் தீபமேற்றினால், ஒரு விளக்கிலிருந்து இன்னொன்றை ஏற்றக்கூடாது. தனியாக தீப்பெட்டி வைத்து ஏற்றுங்கள். இதை அனுமன் தன் வாழ்வில் கடைபிடித்தார். இலங்கையிலே அவரது வாலில் நெருப்பு வைத்து விட்டார்கள். நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடாது. கேட்காமல் கொடுத்ததை என்ன செய்வது என்று அனுமன் சிந்தித்தார். கொடுத்தவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விடுவது என்று முடிவெடுத்தார். ஊருக்கே தீ வைத்தார். அக்னிதேவனுக்கு அருமையான விருந்துஅளித்தார். இனியேனும், நெருப்பு விஷயத்தில் கவனமாக இருப்பீர்கள் தானே!

Saturday 25 November 2017

கோவிலை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் ?

Temple16

கோவிலை பிரதட்சணம் செய்தல் என்பது பல ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

பொதுவாக பிரதட்சணம் செய்யும் பொது அவசரம் அவசரமாக நடந்துசெல்லக் கூடாது. நிதானமாக அடிமேல் அடிவைப்பது போல நடக்க வேண்டும். நமக்கு இருக்கும் அவசர வேலையை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, நிதானமாக கடவுளை மனதார நினைத்து, வலம் வருதலே சரியான முறையாகும்.

எந்தக் கோவிலை வலம் வந்தாலும் அல்லது சந்நிதிகளை சுற்றி வந்தாலும் இந்த மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு சுற்றிவருவது நல்லது. 

யாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருதாநிச!
தாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே!

பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும் என்பது இதன் பொருள். 

கோயில் அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

மூன்று முறை வலம் வந்தால் - இஷ்ட சித்தி அடையலாம்.

ஐந்து முறை வலம் வந்தால் - வெற்றிகள் கிட்டும். 

ஏழு முறை வலம் வந்தால் - நல்ல குணங்கள் பெருகும். 

ஒன்பது முறை வலம் வந்தால் - நல்ல புத்திர பாக்கியம் கிட்டும். 

இதைச் சொன்னால் நினைத்ததை அடையலாம்

maa_lalitha

தேவிக்கு நிகர் வேறு ஏதும் தெய்வம் உண்டோ? லோகத்தை காத்து ரட்சிப்பவளான அன்னை திரிபுரசுந்தரியை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட மகா புண்ணியம் நமக்குக் கிடைக்குமாம். 

இவளின் நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு ஒருநாளும் ஒரு குறையும் இல்லாமல் நம்மைக் காத்து இரட்சிப்பாள். அப்படிப்பட்ட விசேஷம் படைத்த அன்னை லலிதாம்பிகையின் தலை முதல் பாதம் வரை கேசாதிபாத வர்ணனையாக, பஞ்ச க்ருத்தியங்களான ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்காரம், திரோதானம், அனுக்கிரகம் இவற்றை, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் இவர்களின் தன்மையைத் தன்னுள் கொண்டு தானே பஞ்ச பிரம்ம ரூபிணியாக இந்தப் பிரபஞ்சத்தை நடத்துவதாக வர்ணிக்கப்படுகிறாள் இந்த ஸ்லோகத்தில். அது தான் "லலிதா சகஸ்ரநாமம்". தேவியின் ஒவ்வொரு நாமமும் தேனாய் இனிக்கும் பொருள்களைக் கொண்டவை.

ஒருமுறை கூறப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.

குடந்தைக்கு அருகிலுள்ள திருமீயச்சூரில் விஷ்ணுவின் அவதாரமான சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர், அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை கூறுகிறார்....அது என்னவென்று பார்ப்போம். 

தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப் போக்கும். செல்வத்தை அளிக்கும். அகால மரணம் ஏற்படாது. நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைச் செல்வம் தரும். கங்கை முதலிய புண்ணிய நதிகளில் முறைப்படி பல தடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்டைசெய்தல், க்ரஹண காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்சகாலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்த புண்ணியமானது லலிதா சகஸ்ரநாமப் பாராயணம்.

இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும். ஶ்ரீவித்யை போன்று மந்திரமோ, ஶ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை எனலாம். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது என்று ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார். 

அன்னையின் ஆயிரம் திருநாமங்களான லலிதா சகஸ்ரநாமத்தை நவராத்திரி தினங்களில் மட்டுமன்றி அனைத்து வெள்ளிக்கிழமை மற்றும், தேவிக்கு உகந்த நாட்களில் பொருள் அறிந்து பாராயணம் செய்யலாம். யார் ஒருவர் அனுதினமும் லலிதா சகஸ்ரநாமத்தை சொல்கிறார்களோ, வாழ்வில் எதை அடைய விரும்புகிறோமோ அது தானாக அவர்களை வந்தடையும் என்பது உறுதி. 

காசியில் நடந்த ஒரு உண்மை சம்பவம்

kasi

ஒருநாள் காசி விஸ்வநாதர் வறியவன் வேடம் பூண்டு காசியில் நகர் வலம் வந்தார்.

செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பசிக்கு உணவு கேட்டார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்டன. பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களில் வீடு வீடாக ஏறி இறங்கினார். யாரும் பிச்சை போடவில்லை. 

மாலை 7 மணி ஆகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை. பசியோடு காசியின் கழிவு நீர் கங்கையில் கலக்கும் இடத்திற்கு வந்தார்.

அங்கே தனியாக ஒரு தொழுநோயாளி அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைச் சுற்றி நான்கு நாய்கள். காலை முதல் மாலை வரை எடுக்கும் பிச்சையை இங்கே கொண்டு வந்து 5 பங்காக பிரிப்பார். 

முதல் 4 பங்கு உணவுகளை நான்கு நாய்களுக்கும் மிச்சமுள்ள ஒரு பங்கை இவரும் சாப்பிடுவார். அங்கு வந்த இறைவன் அவரிடம் சென்று எனக்குப் பசிக்கிறது என்று கை நீட்டினார். தொழுநோயாளி அவர்வாடிய முகத்தை கண்டு தன் பங்கு உணவை அவருக்கு நீட்டினார். இறைவன் அதிர்ந்துவிட்டார். நான் யார் தெரியுமா என்று தொழுநோயாளியிடம் கேட்டார்.

யாராக இருந்தால் என்ன?....முதலில் சாப்பிடு என்றான். மீண்டும் இறைவன் அதட்டலாகக் கேட்டார். நான் யார் தெரியுமா?

தொழுநோயாளி அமைதியாக சொன்னார்.......இறைவன் வாயடைத்துப் போய் விட்டார்.

இந்தத் தொழுநோயாளியின் அசுத்தமான உணவை என் அழுகிப்போன கைகளால் கொடுப்பதை பெற்றுக் கொள்வது காசி விஸ்வநாதரை தவிர வேறு யாராக இருக்க முடியும்? என்று சிரித்தார்.

எல்லா உயிருள்ளும் உயிராக இருக்கும் இறைவனுக்கு எந்த உயிர்களுக்குள்ளும் வேறுபாடு பார்க்கத் தெரியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்து அழகாகச் சொன்னார்...இறைவன் மெய்மறந்து நின்று விட்டார்.

லக்னம் - ராசி இவற்றில் எது முக்கியம்?

laknam

உங்களுடைய ராசி என்ன என்று கேட்டால் பளிச் என்று பதில் சொல்லும் ஒருவரிடம் அவரது லக்னம் என்ன? என்று கேட்டால் சற்றுத் திணறுவார்கள். ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பதுதான் உயிர். ராசி என்பது உடல்தான். 

லக்னம் தான் ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம் அவருடைய முமு வாழ்க்கையிலும் அவருக்கு நடக்கப்போகும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ஆதாரத்தூண் போன்றது. ராசி என்பது லக்னத்திற்கு துணை செய்யும் ஒரு அமைப்புதான். 

லக்னத்திற்கு இத்தனை சிறப்பு இருக்கும் போது ஏன் ராசிக்கு மட்டும் நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். தொலைக்காட்சி, ஊடகங்கள் ராசிக்கு தான் பலனைக் கணித்து வெளியிடுகின்றனர். லக்ன பலன்களை யாரும் கண்டுக்கொள்ளவதில்லை அது ஏன்? 

பூமியின் சுழற்சிப் பாதையின்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது. ஏன்னென்றால் லக்னமானது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாறிக்கொண்டு இருக்கும். அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும், அடுத்தடுத்த லக்னங்களில் மனிதர்கள் பிறப்பார்கள். 

ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்கு பின்னால் இந்த பனிரெண்டு ராசிகளில் எந்த ராசி இருக்கிறதோ அதுவே அந்த ஜாதகரின் ராசி எனப்படுகிறது. ஒரு ராசியின் அளவு சுமாராக இரண்டே-கால் நாள் இருக்கும்.  

லக்னம் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருப்பதால், அன்றைய தினத்துக்கான பலன்களை கணிக்கும் போது ராசியை வைத்து பொதுபலன் கணிக்க முடியுமே தவிர, மாறிக்கொண்டே இருக்கும் லக்னத்துக்கான பலனைத் துல்லியமாக கணிக்க முடியாது. 

எனவே தான், ஊடகங்களில், செய்தித்தாள்களில் தோராயமாக பொதுபலனை கணித்துச் சொல்கின்றனர். ஆனால், அவை துல்லியமான பலன்கள் அல்ல. லக்னத்தையும், ராசியையும் இணைத்துத்தான் பலன் சொல்ல முடியும். சொல்லவும் வேண்டும். அப்போதுதான் அது முறையான ஜோதிட பலன்களாக இருக்கும். 

ஜாதகருக்கு லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்கக்கூடியது. லக்னம்-ராசி இரண்டின்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்ய வேண்டிய அமைப்பு இருந்தால் நிச்சயம் அதன் தசையில் கெடுபலன்கள் தான் நடக்கும் என்று கண்களை மூடிக் கொண்டு பலன் சொல்லிவிடலாம். 

குரு மேடு உங்கள் கையில் எப்படி இருக்கிறது?

guru

குருமேடு கோபுரமாகவும், தனரேகை தாராளமாகவும் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உங்க கையில் குருமேடு எப்படி இருக்கிறது? 

உள்ளங்கையை விரித்தவுடன் எந்த மேடு மற்ற மேடுகளை விட அதிகமாய் உயர்ந்து காணப்படுகிறது என்பதை வைத்து ஒருவருடைய குணநலன்களை தெரிந்துக் கொள்ளலாம். எந்தெந்த மேடுகள் பலமாக உள்ளன, எவை பலம் இழந்து உள்ளன என்பதை வைத்தும் ஒருவருடைய குணநலன்கள் அறிந்து கொள்ளப்படுகிறது. அதில் குரு மேடு பற்றிப் பார்ப்போம்.

குரு மேடு

குரு மேடு என்பது ஆள்காட்டி விரலுக்கு அடிப்பாகத்தில் இருக்கும். குரு மேடு உப்பலாக இருந்தால் உச்சமேடு எனவும், பள்ளமாக இருந்தால் நீச்ச மேடு எனவும், சமமாக இருந்தால் நடுத்தர மேடு எனவும் அழைக்கப்படுகிறது.

குரு மேடு உச்சமாக இருந்தால் நல்ல பலன்களாக இருக்கும். நீச்சமாக இருந்தால் கெடு பலன்களையும், சமமாக இருந்தால் நல்லவை, கெட்டவை இரண்டும் சமமாக நடக்கும். இந்த மேடு கையில் நன்றாக அமைந்து இருந்தால் நடுத்தர உயரமாக இருப்பார்கள். ஆரோக்கியமான தேகம் மற்றும் நடை கம்பீரமாக இருக்கும்.

குணநலன்கள்

• மற்ற மேடுகளை விட குருமேடு உயர்ந்து இருந்தால் நியாயவாதிகளாகவும், நேர்மை, நாணயம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.

• இவர்கள் உபதேசம் செய்வதில் திறமை உள்ளவர்களாகவும், பேராசிரியர்களாகவும், உயர்ந்த லட்சியங்கள் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தன்னைத் தானே புகழ்ந்து பேசும் சுபாவம் உடையவர்களாகவும், யாருக்கும் கட்டுபட விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள்.

• சமூக சேவை, அரசியல், அழகிய பொருட்கள் மேல் பிரியம் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். சுத்தம், சுகாதாரத்தில் அக்கறையும் தனது காரியத்தில் மிகுந்த கவனமும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

• எதிலும் முதன்மையாக இருக்க ஆர்வம் கொண்டவர்கள். பணிந்து போவதில் விருப்பம் இல்லாதவர்கள். இவர்கள் தன்மானம் உடையவர்கள். பிறர் பரிகாசம் செய்வதை வெறுப்பார்கள்.

• எந்தத் துறையில் இருந்தாலும் அதிர்ஷ்டமுள்ளவராகத் திகழ்வார். விடா முயற்சி, ஆற்றல் பெற்றவர்கள் தங்கள் வருமானத்தை பொதுநலம், தெய்வ காரியங்களுக்கு செலவிட தயங்க மாட்டார்கள்.