Saturday 31 March 2018

அல்லிக்கேணியில் ஐந்து கோலம்


சுமதி என்னும் மன்னரின் தவத்திற்கு இணங்கி திருமால் காட்சியளித்த தலம் சென்னை, திருவல்லிக்கேணி. இங்குள்ள மூலவர் வேங்கடகிருஷ்ணர். பார்த்தசாரதி என்றும் இவருக்கு பெயருண்டு. இதே தலத்தில் அத்திரி முனிவரின் தவம் கண்டு மகிழ்ந்த திருமால், நரசிம்மராக காட்சியளித்தார். இங்கு தவம் செய்த மதுமான் என்னும் மகரிஷி, ராமச்சந்திர மூர்த்தியாக திருமாலை தரிசிக்கும் பேறு பெற்றார். 

சப்தரோமர் என்னும் முனிவருக்காக எழுந்தருளிய திருமால், கஜேந்திர வரதராகவும் அருள்பாலிக்கிறார். பிருகு முனிவரின் மகளாக அவதரித்த லட்சுமியை மணம் புரிய ரங்கநாதராக திருமால் இத்தலத்திற்கு எழுந்தருளினார். வேங்கடகிருஷ்ணர், நரசிம்மர், ராமர், கஜேந்திரவரதர், ரங்கநாதர் என்னும் ஐந்து கோலங்களில் திருமாலை தரிசிக்க விரும்பினால் திருவல்லிக்கேணிக்கு வாருங்கள். 

குப்பைக்கு போன தங்கம்


திருநாவுக்கரசர் முக்தி பெற்ற சிவத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள திருப்புகலுார். இங்கு அக்னிபுரீஸ்வரராக சிவன் கோயில் கொண்டிருக்கிறார். சுவாமியின் திருமேனி சற்று சாய்ந்திருப்பதால் 'கோணப்பிரான்' என்றும் பெயருண்டு. நாவுக்கரசர் இக்கோயிலை சுத்தப்படுத்திய போது, சோதிக்க எண்ணிய சிவன் பிரகாரத்தில் பொன்னும், நவமணிகளும் சிதறி கிடக்கச் செய்தார். 

நாவுக்கரசர் சிறிதும் மயங்காமல், கையில் இருந்த உழவாரக் கருவியால் தள்ளி விட்டு நடந்தார். பொன்மனச் செம்மலான திருநாவுக்கரசர் மகிழும் விதத்தில் சிவ பெருமான், அம்பிகை உடன் காட்சியளித்தார்.

சுக்கிர ஹோரையில் சுத்துங்க!

Image result for komatha

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை. இவை முறையே பொன்னிறம், கருமை, வெண்மை, சாம்பல், சிவப்பு நிறம் கொண்டவை. 

இவற்றின் சந்ததிகளே பூமியில் பசுக்களாக வாழ்கின்றன. பாற்கடலில் பிறந்ததால் புனிதம் மிக்கதாக கருதப்படுகின்றன.அதிகாலையில் பசுவை கண்டால் லட்சுமியின்அருள் கிடைக்கும். வெள்ளியன்று காலை 6:00-7:00 மணிக்குள் சுக்ர ஹோரையில் பசுவை சுற்றி வர திருமணத்தடை நீங்கும். அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுத்தால் முன்வினை பாவம் தீரும். பசுவை வழிபடுவோர் பூவுலக வாழ்வுக்கு பின் பசுக்களின் உலகமான 'கோலோகத்தில்' கிருஷ்ணருடன் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

பாட்டுக்கு வழிவிட்ட நதி


பிருந்தாவனத்தில் ஜீவசமாதி அடைய தயாரானார் குரு ராகவேந்திரர். அப்போது அவரது சீடர் அப்பண்ணாச்சாரியார், குருவின் கட்டளையை ஏற்று 'பிஞ்சலா' என்னும் இடத்திற்குச் சென்றிருந்தார். சமாதியில் குருநாதர் அமரவிருக்கும் செய்தியை கேள்விப் பட்டு பதற்றமுடன் வந்தார். வழியில் துங்கபத்திரா ஆற்றில் வெள்ளம் குறுக்கிட்டது. கரையில் நின்றபடி, 'ஸ்ரீ பூர்ணபோத குருதீர்த்த...'' என்னும் பாடலை பாடி குருநாதரை வழிபட்டார். 

இவரது பக்திக்கு கட்டுப்பட்ட நதி, இரண்டாக பிரிந்து நடுவில் பாதை காட்டியது. பிருந்தாவனத்தை அப்பண்ணாச்சாரியார் நெருங்கிய போது, சமாதியின் மேற்பரப்பை கற்பலகையால் மூடி கொண்டிருந்தனர் பக்தர்கள். அப்போதும் மீண்டும் ஒருமுறை பாடி குருநாதர் அருள் கிடைக்கப் பெற்றார். தினமும் பகல்நேர பூஜையின் போது பிருந்தாவனத்தில் இப்பாடல் பாடப்படுகிறது.

குளிர்விக்கும் குருபகவான்


தமிழகத்தில் சூரியனுக்காக அமைந்த ஒரே கோயில் சூரியனார் கோயில். முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதால், சுவாமிக்கு, 'குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலய தேவர்' என்று பெயர். சூரிய நாராயணருடன் உஷா, பிரத்யுஷா என்னும் தேவியர் உள்ளனர். சன்னதியை சுற்றி மற்ற பரிவார தெய்வங்களாக எட்டு கிரகங்கள் உள்ளன. சுப கிரகமான குருபகவானின் சன்னதி, சூரியனுக்கு எதிரில் உள்ளது. குரு தன் சுப பார்வையால் சூரியனின் உக்கிரத்தை போக்கி குளிர்விக்கிறார். 

காளி கேட்கும் காணிக்கை


பார்வதி, அசுரர்களை அழிக்கும் போது காளியாக உருவெடுக்கிறாள். அவளுக்கு பலியிடும் வழக்கம் உண்டு. ஆனால், உண்மையில் அவள் விரும்பும் காணிக்கை எது தெரியுமா?

மனிதர்களின் மனதில் ஆறுவிதமான பகைவர்கள் உள்ளனர். அவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம். (பேராசை, கோபம், கருமித்தனம், பெண்ணாசை, ஆணவம், பொறாமை) அவர்களை அழிக்கும் வலிமையை நமக்கு தருபவள் காளி. இந்த பண்புகளின் குறியீடாக வெள்ளாடு, எருமை,பூனை, செம்மறியாடு, மனிதன், ஒட்டகம் ஆகியவற்றை பலியிட்டனர். நோக்கத்தை உணர்ந்து, இனியாவது காளி கேட்கும் காணிக்கையை மறவாமல் கொடுப்போம்.

இருமத்தூரில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரிஅம்மன் கோவில்

இருமத்தூரில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரிஅம்மன் கோவில்

ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகான கிராமம்... எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சி அளிக்கும் தோட்டங்கள்... அமைதியான இயற்கையான சூழலில் நம்மை வரவேற்கிறது இருமத்தூர்.

முன்னோர் வழிபாடு

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம். தமிழகத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான காவிரியில் தண்ணீர் வற்றினால் கூட இருமத்தூர் வழியாக ஓடும் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வற்றுவது அரிது. ஆண்டு முழுவதும் இந்த ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் இருமத்தூர் முன்னோர் வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமாக விளங்குகிறது.

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகவும், இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு நடத்துவதற்காகவும் இருமத்தூர் தென்பெண்ணையாற்றுக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவில் திரண்டு வந்து புனித நீராடி முன்னோர்களை வழிபடுகிறார்கள். விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்த கிராமத்தின் பெரியவர்கள் கூறியதாவது:-

மாதேஸ்வரன் கோவில்

இருமத்தூரில் தென்பெண்ணையாற்றின் கரையில் 1888-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் அவற்றிற்கு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், சினையாக உள்ள மாடுகள் பெண் கன்றுகளை பிரசவிக்க வேண்டியும் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வேண்டுதல் நிறைவேறினால் கன்று குட்டிகளை நேர்ந்து விடும் வழக்கமும் உள்ளது. மேலும் இங்கு கொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுடன் இந்த கோவிலுக்கு வரலாற்று ரீதியான தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொல்லாபுரியம்மன் கோவில் அமைந்துள்ள இந்த பகுதி பிரசித்தி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்த வரலாற்று நிகழ்வு ஒன்று உள்ளது. அதாவது சென்னை, பெங்களூரு மற்றும் சேலத்துக்கு மையப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் மேட்டுப்பகுதியாகும். இயற்கையாகவே விமானங்கள் இறங்கி, ஏற வசதியாக உள்ள பகுதி என்பதால் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் விமான தளம் அமைக்க இங்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.

அம்மன் சிலையை எட்டி உதைத்த ஆங்கிலேயன்

தற்போது கொல்லாபுரியம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தின் அருகே கிழக்குப்பகுதியில் விமானங்கள் இறங்கி ஏறுவதற்கான ஓடு தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை மேற்பார்வையிடுவதற்காக இந்த பகுதியில் வந்து தங்கிய ஒரு ஆங்கிலேய அதிகாரி, அம்மனை மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று வழிபடுவதை அறிந்து ஆச்சரியமடைந்தான். அம்மனின் கற்சிலையில் இறை சக்தி இருக்குமா? என்ற கேள்வி அவனுடைய மனதில் எழுந்தது. இதனால் பொதுமக்கள் அம்மனாக வழிபட்ட கற்சிலை உள்ள இடத்தை நேரில் பார்வையிட்ட அவன், அந்த சிலையை தனது காலால் எட்டி உதைத்தான். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. விமானதளம் அமைக்கும் பணியை மேற்பார்வை செய்ய வந்த அவன் அம்மன் கோபத்துக்கு ஆளாகி உயிரிழந்தான். இறை நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட ஆங்கிலேய அதிகாரிக்கு அம்மன் தண்டனை கொடுத்து பழி தீர்த்ததாகவே மக்கள் கருதினார்கள். இந்த சம்பவம் விமான தளம் அமைக்க இருமத்தூர் பகுதிக்கு வந்த ஆங்கிலேயர்களை அதிர வைத்தது. அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது. இதனால் விமானதளம் அமைக்கும் பணியை தொடக்க கட்டத்திலேயே நிறுத்திய ஆங்கிலேயர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். பின்னர் இங்கு விமான தளம் அமைக்கும் முடிவையே கைவிட்டு விட்டனர்.


பக்தர்களுக்கு குறி சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முள்ளால் ஆன மேடை

பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலின் தெற்கு பகுதியில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டி கொள்ளும் பக்தர்கள் கோழிகளை உயிருடன் கயிற்றில் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டு விடுகிறார்கள். இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

இவ்வாறு திருட்டு போன பொருட்கள் கிடைத்தால் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடுகளை வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வாகனங்களில் செல்லும்போது கொல்லாபுரிஅம்மன் கோவிலில் வழிபட்டால் வாகன விபத்துகள் ஏற்படாது என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து விதமான வாகனங்களையும் கோவில் வளாகத்தின் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜை நடத்திவிட்டு செல்லும் வழக்கம் உள்ளது.

முள்ளால் ஆன மேடை

இந்த கோவிலின் அருகே உள்ள வளாகத்தில் ஒரு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கரடுமுரடான காரா முள்ளால் ஆன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த முள் மேடையில் அமர்ந்து பக்தர்களுக்கு குறி சொல்லும் வழக்கம் கடந்த 2 தலைமுறைகளாக நடைமுறையில் உள்ளது. இந்த கோவிலில் பூர்வீகமாக பூஜை நடத்திய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள முள் மேடை மீது அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவார். பின்னர் அங்கு குறி கேட்க வந்து அமர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கானவர்களில் யார், எந்த பிரச்சினைக்காக வந்திருக்கிறார்கள்? என்பதை கூறி அவர்களை அழைத்து பிரச்சினை தீர்வதற்கான வழிபாட்டு முறை குறித்து கூறுவது வழக்கம்.

இருமத்தூரில் திப்பம்பட்டி கூட்டுரோடு அருகே உள்ள கோட்டை என்னும் பகுதி சங்க காலத்திற்கு முன்பே மக்கள் அதிக அளவில் வசித்த பகுதியாகும். பழங்காலத்தில் போர் வீரர்கள் இந்த பகுதியில் தங்கி போர் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. முன்பு இந்த பகுதியில் கோட்டை போன்ற மதில்சுவர்கள் இருந்தன. காலப்போக்கில் இவை சிதிலமடைந்து விட்டன. போரில் இறக்கும் வீரர்களை அடக்கம் செய்யும் இடமாகவும் விளங்கிய இந்த பகுதியில் ஏராளமானோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

போர் வீரர்கள் நினைவிடம்

போர் வீரர்கள் நினைவாக அடையாள கற்கள் வைக்கப்பட்டு நினைவு சின்னம் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீரர்களின் சிறப்பை போற்றும் நடுகல் வைக்கும் பழக்கம் இந்த பகுதியில் இருந்தே தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த பகுதியில் பழங்காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட போர்வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் இருமத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பகுதிக்கு ஊர்வலமாக சென்று போரில் இறந்த மூதாதையருக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.

இருமத்தூர் தென்பெண்ணையாற்று கரையின் தெற்கு பகுதியில் காவல் தெய்வமாக வணங்கப்படும் வேடியப்பன் சிலை உள்ளது. வெப்பாலை மரத்தின் கிளையை பிடித்தவாறு வேடியப்பன் சீடர்களுடன் இருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் அருகே மகாபாரத இதிகாசத்தில் வரும் போத்துராஜா சிலை அமைந்துள்ளது. 11-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மாங்கல்ய பலம் தரும் ஸ்லோகம்

மாங்கல்ய பலம் தரும் ஸ்லோகம்

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். சில பெண்களுக்கு ஜாதக ரீதியாக மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க அபிராமி அந்தாதியில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை சொல்லுவதால், அம்பிகையின் அருளால் அவர்கள் நீடித்த சௌபாக்கியத்துடன் இருப்பார்கள். 

துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொடுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்
கனையும் கரும்பும் சிலையும் மென் பாசாங்குசமும் வகையில்
அனையுந் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே

அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.

Friday 30 March 2018

பங்குனி உத்திரத்தில் காவடி தூக்குவது ஏன்?

பங்குனி உத்திரத்தில் காவடி தூக்குவது ஏன்?

முருகன் கோவில்களில் பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின்போது பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழனி முழுவதும் காவடி காட்சிகளாக இருக்கும். முருக பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.

பார்வதிதேவிக்கும் பரமசிவனுக்கும் திருமணம் நடந்த சமயம் தேவர்களும் முனிவர்களும் மற்றும் எல்லோரும் தெய்வீக திரு மணத்தைக் காண கயிலை செல்கின்றனர். இதனால் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது.

பூமியை சரிசமமாக செய்வதற்கு சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசைக்கு அனுப்பி வைத்தார். அகத்திய முனி வரும் தென்திசையில் பொதிய மலையில் தங்கினார். அகத்திய முனிவர் அங்கிருந்த காலத்தில் தாம் வழிபட சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைக் கொண்டு வருமாறு தன் சீடனாகிய இடும்பாசுரனிடம் கட்டளையிட்டார்.

இடும்பாசுரன் மிகப்பெரிய பக்திமான். தன் குருவான அகத்தியர் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன் மனைவி இடும்பியுடன் கயிலை சென்று முருகப்பெருமானுக்கு உரிய கந்தமலையில் உள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு குன்று களையும் பெயர்த்தெடுத்து ஒரு பெரிய பிரமதண்டத்தின் இரு புறங்களிலும் காவடியாகக் கட்டினான்.

தன் தோள் மீது பிரமதண்டத்தின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு பொதிய மலைக்குத் திரும்பி வரும்வழியில் திருவாவினன்குடிக்கு மேலே ஆகாயத்தில்பறந்தபோது முருகப்பெருமான் அவ் விருமலைகளையும் அங்கேயே இறங்குமாறு செய்து அவ்விடத்திலேயே நிலைபெறச் செய்து விட்டார். தன்னை யறியாமல் தரையில் இறங்கிய இடும்பன் எவ்வளவு முயன்றும் பிரமதண்டத்தின் ஓரங்களில் கட்டிய மலை களை அசைக்கமுடியாமல் திகைத்து நின்றான்.

மறுபடி அக்காவடியைத் தூக்க முயன்றபோது சிவகிரி குன்றின் மீது ஓர் அழகிய சிறுவன் கோவணத்துடன் ஆண்டியின் உருவில் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான்.

அச்சிறுவனால்தான் மலையை அசைக்கக்கூட முடியவில்லை எனக்கருதிய இடும்பாசுரன் அச்சிறுவனை மலையிலிருந்து இறங்கும்படி அதட்டினான். சிறுவனோ மலை தனக்கே சொந்தம் என வாதிட்டான். சினம் கொண்ட இடும்பாசுரன் சிறுவனை தாக்க முயன்றான். தாக்க வந்த இடும்பன் வேரற்ற மரம் போல் சாய்ந்துவிட அவன் மனைவி இடும்பி கணவனை காப்பாற்ற சிறுவனை வேண்டினாள்.

தன் தவ வலிமையால் நிகழ்ந்தவற்றை அறிந்த அகத்தியர் முருகப்பெருமானை வணங்கினார். அக்கணமே இடும்பாசுரனும் உயிர்பெற்று எழுந்து முருகப்பெருமானின் திருவிளையாடல் அறிந்து மூவரும் முருகப்பெருமானை வணங்கி பக்தி யோடு துதித்தனர். குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் இடும்பனை பழனி தலத்தின் காவல் தெய்வமாக இருக்கும்படி பேபரருள் செய்தார்.

இரு குன்றினையும் காவடிபோல் தூக்கி வந்த இடும்பாசுரன் முருகப்பெருமானின் திரு வருளைப் பெற்றதுபோல் இன்றும் பக்தர்கள் காவடி தூக்கிச்சென்று முருகப்பெருமானின் பேபரருளைப் பெறுகின்றனர். இளவரசனாக முருகன் இடும்பனுக்குக் காட்சியளித்ததால் இன்றும் பழனி முருகனுக்கு ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

செவ்வாய் தோஷம், திருமண தடை நீக்கும் முருகன் வழிபாடு

செவ்வாய் தோஷம், திருமண தடை நீக்கும் முருகன் வழிபாடு

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

துரோகிக்கும் மன்னிப்பு

ஆன்மிக கதை : துரோகிக்கும் மன்னிப்பு

உலகில் யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் கூட இருந்தே வாழ்வை சீரழிக்கும் துரோகியை மட்டும் மன்னிக்கவே கூடாது என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

முன்னொரு காலத்தில் ரைப்யரிஷி என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு பராவசு, அர்வாவசு என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் ஒரே குருவிடம் முறையாக கல்வி பயின்று தேர்ந்தவர்கள். ஆயினும் குணத்தில் மட்டும் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அண்ணனான பராவசு.. சுயநலம் கொண்டவனாகவும், தம்பி அர்வாவசு விட்டுக்கொடுத்துப் போகும் நல்மனம் உள்ளவனாகவும் இருந்தனர். அண்ணனைத் திருத்தும் பொருட்டு தம்பி எவ்வளவோ எடுத்துக்கூறியும் பராவசு கேட்கவில்லை.

ஒரு சமயம் பிருஹத்யும்னன் என்ற மன்னன், யாகம் ஒன்றை நடத்த விரும்பி வேதம் பயின்றவர்களை அழைத்தான். அவனது யாகத்தை நடத்திக்கொடுப்பதற்காக பராவசு, அர்வாவசு இருவரும் சென்றனர். யாகம் நடைபெற்ற சமயம் திடீரென்று பராவசுவிற்கு தன் அழகிய இளம் மனைவியின் ஞாபகம் வந்தது. அவன் யாருக்கும் தெரியாமல் யாகத்தில் இருந்து விலகி வீட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் இருந்த புதருக்குள் இருந்து ஒரு சப்தம் கேட்டது. ‘ஏதோ ஒரு மிருகம் தான் வருகிறது’ என்றெண்ணி பயந்த பராவசு, அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து சப்தம் வந்த திசையை நோக்கி வீசினான்.

புதருக்குள் இருந்து, ‘மகனே’ எனும் அலறல் சப்தம் கேட்டு, அங்கே சென்றவன் கண்ட காட்சியில் மனம் பதைத்தான். அவனின் ஆருயிர் தந்தை அவன் வீசிய கல்லால் அடிப்பட்டு இறந்து கிடந்தார். கண்ணீர் மல்க அவரை அங்கேயே புதைத்து விட்டு, வீட்டிற்குச் செல்லாமல் யாக சாலையை நோக்கித் திரும்பினான்.

அங்கே தன்னைக் காணாமல் தேடிய தம்பியிடம் நடந்ததைக் கூறி வருந்தினான். மேலும் தன் தந்தையைக் கொன்ற தோஷத்தில் இருந்து தன்னை பரிகார பூஜைகள் செய்து விடுவிக்குமாறும் வேண்டினான். அண்ணனின் நிலை கண்டு வருந்திய அர்வாவசுவும் பரிகார பூஜை செய்யும் பொருட்டு யாகத்தை விட்டு வெளியேறினான்.

பராவசு நடந்ததை மறைத்து விட்டு யாகத்தை தொடர்ந்து நடத்தினான். யாகம் பல மாதங்களாக தொடர்ந்து நடந்தது. இதனிடையே அண்ணனுக்காக பரிகாரத்தை முடித்த அர்வாவசு மீண்டும் யாக சாலைக்குத் திரும்பி வந்தான். தன் சுயநலம் இல்லா பூஜையின் பலனால் முன்பைவிட அதிக பொலிவு பெற்றவனாக இருந்தான். அவனது பொலிவு கண்டு பொறாமைப்பட்ட பராவசு, அவன் யாகத்தில் இருந்தால் தன் முக்கியத்துவம் காணாமல் போகும் என்று கருதி அவனை முழுமையாக யாகத்தில் இருந்து விலக்கத் திட்டமிட்டான்.

தம்பி யாக சாலைக்குள் நுழையும் வேளையில் அவனைத் தடுத்து நிறுத்திய பராவசு, ‘ஒரு உயிரைக் கொன்று பிரம்மஹத்தி தோஷம் பிடித்த இவன் யாகசாலைக்குள் நுழையத் தகுதியற்றவன்’ என உரக்கச் சொன்னான்.

அதைக் கேட்டு மன்னன் உட்பட அனைவரும் திடுக்கிட்டனர். மன்னன் விவரம் கேட்க ‘எங்களைப் பெற்ற தந்தையைக் கொன்ற பாவி இவன்’ என்று வாய் கூசாமல் பொய்யும் சொன்னான், பராவசு.

அவன் கூறிய குற்றச்சாட்டை சற்றும் ஆராயாத மன்னனும், கோபம் கொண்டு அர்வாவசுவை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டான்.

அண்ணனின் துரோகம் அறிந்தாலும், அர்வாவசு அதைச் சகித்து புன்னகை மாறாத முகத்துடன் நாட்டை விட்டுப் புறப்பட்டான். காட்டிற்குச் சென்று படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்து தவ வாழ்வை மேற்கொண்டான். தவத்தில் மகிழ்ந்த பிரம்மா அர்வாவசுவுக்கு காட்சி தந்து ‘என்ன வரம் வேண்டும் கேள்?’ என்றார்.

அவரிடம் அர்வாவசு ‘என் தந்தை மீண்டும் உயிர் பெற வேண்டும். அண்ணனின் தீய குணங்கள் மறைந்து, அவன் நல்லவனாக வாழ வேண்டும்’ என்று கேட்டான்.

தனக்காக எதையும் வேண்டாமல் தன் அண்ணன் திருந்த வேண்டும் என வரம் கேட்ட அர்வாவசுவின் உயரிய எண்ணம் கண்டு வியந்த பிரம்மா, அவன் கேட்ட வரங்களைத் தந்து அருளினார். தன் சுயநல குணம் மறைந்து நல்லவனான அண்ணன் பராவசு தன் தவறை உணர்ந்து தம்பியிடம் மன்னிப்பு வேண்டினான். பின் இருவரும் இணைந்து பிரம்மா உயிர்பித்த தங்கள் தந்தையுடன் நீண்ட காலம் வாழ்ந்து இறை பணியில் ஈடுபட்டு நற்செயல்கள் செய்து புகழ்பெற்றனர்.

இந்தக் கதையின் மூலம் நாம் அறிவது என்ன? உலகில் யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் கூட இருந்தே வாழ்வை சீரழிக்கும் துரோகியை மட்டும் மன்னிக்கவே கூடாது என்பார்கள். ஆனால் தனக்கு துரோகம் செய்த அண்ணனையும் மன்னித்தான், அருமைத்தம்பி அர்வாவசு. இவனின் செயலினால் அண்ணனின் வாழ்வும், தந்தையின் வாழ்வும் காப்பாற்றப்பட்டு தரணியில் புகழ் பெற்றனர்.

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்

‘பங்குனி முயக்கம் கழிந்த வழுநாள்’ எனும் சங்க பாடலடி, பங்குனி திங்களும் உத்திரமும் கூடிய நன்னாள் என்னும் பொருளை தருகிறது. உறையூரில் பங்குனி உத்திர திருவிழா சிறப்புற்று இருந்தது என்று குறிப்பிடுகின்றது. சிறப்புக்குரிய பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர், முருகன்-தெய்வானை, ராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்- மாண்டவி, சத்ருகனன்- சுருதகீர்த்தி, நான்முகன்-கலைவாணி ஆகிய தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றுள்ளது.

அய்யப்பன், வள்ளி, அர்ச்சுனன் போன்றோர் அவதரித்ததும் இந்நாளில் தான். பழனியில் உள்ள திருஆவினன்குடியில் உத்திர திதியில் தேரோட்டம் நடைபெறுவது பிற முருக திருத்தலங்களைவிட மிகுந்த சிறப்புக்குரியது. இந்நாள் விரதமிருப்பதற்கும், அன்னதானம் செய்யவும் ஏற்றதாக கூறப்படுகிறது.

முருகப்பெருமான் தனது வேலாயுதம் கொண்டு மலையை உடைத்தெறிந்து, தாரகாசுசூரனை கொன்று, தெய்வானையை மணந்த நாள் பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருமணம் ஆகாதவர்கள் ஆலயங் களுக்கு சென்று வழிபட்டால் திருமணம் நடைபெறும். இந்நாளில் தங்களது துன்பங்கள், கவலைகள் தீர முருகப்பெருமானை வழிபட்டால் சூரன் போன்று துன்பம் தரும் எதிரிகளை அவன் அழித்தொழிப்பான். இந்நாளில் விரதமிருந்தால் பிறப்பற்ற முக்திநிலை கிடைக்கும். 

நான்கு வேதங்களும், தேவர்களும் ஏனைய யாவர்களும் ஆராய்ந்து அறிதற்கரியவன். பிரமம், ஓம் என்ற பிரணவத்தின் பொருளாக விளங்குபவன். மாறாத இளமையுடன், தந்தைக்கு உபதேசம் செய்து, அகத்திய முனிவருக்கு அருள் செய்து, மனித மனக்குகையிலே உறைகின்ற குகன், ஞானதண்டாயுதபாணியாக வீற்றிருக்கும் பழனியில் சித்தர்கள் ஏராளமானோர் வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் குருவாக முருகப்பெருமானை வணங்கி வழிபட்டனர். 

செல்வம், வேலை கிடைக்க ஸ்ரீ லட்சுமி மந்திரம்

செல்வம், வேலை கிடைக்க ஸ்ரீ லட்சுமி மந்திரம்

ஸ்ரீ லட்சுமி தாயார் கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் 10 முறை செபிக்கவும். வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி லட்சுமி பூஜை செய்து 108 முறை செபித்து வர விரைவில் வேலை கிடைக்கும்.

"ஸ்ரீ தேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலட்சுமீச சுந்தரி"

சந்தான வரமருளும் ராமன்

Image result for சந்தானராமஸ்வாமி

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் சந்தானராமஸ்வாமி கோயில் வரலாற்றுச் சிறப்புடையதாகும். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்ம மகாராஜாவிற்கு பல காலம் குழந்தைப்பேறு இல்லாமையால் அரசரும் அவரது தேவியார் யமுனாம்பாளும் இத்தல ராமரை வழிபட்டதன் பயனாக புத்திரப்பேற்றை அடைந்தார்கள். அதனால் மன்னன் இக்கோயிலை சிறப்பாக கட்டி 1761ம் ஆண்டு குடமுழுக்கும் செய்தது வரலாறு.

வசிஷ்டர் வணங்கிய வாயுமைந்தன்

Related image

கேரள மாநிலம் ஆலத்தியூரில் உள்ளது அனுமார் திருக்கோயில். இத்திருக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வசிஷ்டமுனிவரால் சிருஷ்டிக்கப்பட்டது.  கருவறையில் ராமபிரான் சீதாபிராட்டி இன்றி காட்சியளிக்கிறார். சீதையைத் தேடிச் செல்லுமாறு அனுமனிடம் சீதையின் அங்க அடையாளங்களை ராமர்சொல்ல  அதை கூர்ந்து கேட்கும் திருக்கோலத்தில் அனுமன் இங்கே தரிசனமளிக்கிறார்.

முருகன் வாகனம்


முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், மாமனான திருமால் கொடுத்த யானை, சேவல் மற்றும் ஆடு ஆகியவையும் வாகனங்களாக உள்ளன. திருப்பரங்குன்றம் மூலவர் முருகனின் பாதத்திற்கு அருகில் இவற்றை தரிசிக்கலாம்.

Thursday 29 March 2018

பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா!

murugar1

ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்கு பெறுகிற உத்திரம் தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த நட்சத்திரத்தை பக்தி நட்சத்திரம் என்றே பகரலாம்.

ஆம்! தெய்வங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மங்கள நித்திலமே பங்குனி உத்திரம். பாமாலை பாடிக்கொடுத்தும், பூமாலை சூடிக் கொடுத்தும் அரங்கனுக்கே ஆட்பட்ட ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணமும், பார்வதி - பரமேஸ்வரர் திருமணமும், தெய்வயானை - திருமுருகன் கல்யாணமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் விவாகமும் நிகழ்ந்த நன்னாள் பங்குனி உத்திரத்தில்தான் என்று புராணங்கள் மூலம் அறியலாம்.

இந்தத் திருமணங்கள் மட்டுமா? ஒரே சமயத்தில் ஒரே மணமேடையில் இதிகாச ஜோடிகள் நால்வர் இணைந்ததும் இந்த சுபதினத்தில்தான். ராமன் - சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்ணன்- சுருதகீர்த்தி என ஜகம்புகழும் புண்ணிய கதையான ராமாயணம் தெரிவிக்கின்றது.

கல்யாணக் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல! பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பெருவிழாவும் இந்நன்னாளில்தான். பழனியில் காவடி உற்ஸவம், திருமயிலையில் அறுபத்து மூவர் உற்ஸவம், திருச்செந்தூரிலும், சுவாமி மலையிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்ஸவம், மதுரையில் மீனாட்சி கல்யாணம் என பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா!

பந்தள குமாரனாக மணிகண்ட பெருமான் கேரள பூமியில் அவதரித்ததும் இந்நன்னாளே! அதனால்தான் சபரிமலையில் இந்த தினத்தில் ருத்ர பாராயணம் மற்றும் மகா அபிஷேகம் ஹரிஹர சுதனுக்கு நடைபெறுகிறது.

வில் விஜயன் அர்ஜுனனுக்கு "பல்குனன்' என்றும் பெயர் விளங்கக் காரணம் பாண்டவரில் புகழ் பூண்டவனாக விளங்கும் அவன் இந்நன்னாளில் பிறந்ததால் தான்.

விசேஷமான இத்திருநாளில் விரதம் இருப்பதும், அன்னதானம் வழங்குவதும் நம் முன்வினைகளை நீக்கி நலம் அருளும். பங்குனி உத்திர விரதத்தை பாங்குறக் கடைப்பிடித்தே பாற்கடலில் தோன்றிய திருமகள் பெருமாள் மார்பில் இடம்பெற்றாள் எனப் பேசுகின்றன இதிகாசங்கள்.

இருப்பவர்களை சிறப்பாக வாழ வைப்பது மட்டுமல்ல இவ்விரதத்தின் மகிமை. இறப்பவரையும் எழுப்பவல்லது பங்குனி உத்திரம். ஆம்! நெற்றிக்கண் நெருப்பால் நிர்மூலமான மன்மதனை அவன் மனைவி ரதி தேவிக்காக சிவபெருமான் எழுப்பித் தந்ததும் இம்மங்கள நித்திலத்தில்தான்!

பங்குனி உத்திர நாளில் இத்தனை நிகழ்வுகளா..! அடடே..!

lordshrimurugan-consort

ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்குபெறுகிற உத்திரம் சிறப்பு வாய்ந்தது. 

ஆம்! தெய்வங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மங்கல நித்திலமே பங்குனி உத்திரம்! இந்த நன்னாளில் தெய்வ திருமணங்களும், பல்வேறு அதிசயங்களும் நிகழ்ந்துள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

• முருகன் - தெய்வயானை திருமணம். 

• ஸ்ரீராமர் - சீதை திருமணம்.

• அண்ணாமலையார் - உண்ணாமுலையம்மை திருமணம்.

• ஸ்ரீ ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்.

• அர்ஜூனன் - பிறந்தநாள்.

• சுவாமி ஐயப்பன் - அவதார நன்னாள். 

• ரதி கேட்டுக்கொண்டதற்கிணங்க, சிவபெருமான் மன்மதனை எழுப்பித்த நாள். 

• திருமகள் - விஷ்ணுவின் திருமார்பைச் சேர்ந்த நாள்.

• இந்திரன் அந்திராணியை அடைந்த நாள். 

• பிரம்மன் சரஸ்வதியை அடைந்த நாள்

ஆகவேதான் பங்குனி உத்திர நன்னாளில் திருமண விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

நன்மைகள் வழங்கும் ஸ்படிக மாலை

நன்மைகள் வழங்கும் ஸ்படிக மாலை

ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக்கூடாது).

பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களைத் தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம்.

ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக்கூடாது). தனித்தனியாக அணிந்து கொள்ளலாம். தரமற்ற ஸ்படிக மணியையும் மாலையாக கோர்க்கக் கூடாது. ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் கோர்த்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரை ஞாணில் அணியலாம்.

ஸ்படிகமணி மாலை பயன்?

மனிதர்களாகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை சராசரியாக 21,600 முறையாகும். ஸ்படிக மணி, ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கிறார்கள். அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை, எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். இதனால் தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு, தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.

ஸ்படிக மாலை உடல் சூட்டை சீரான அளவில் இருக்க வைக்கும். நமது மனதை அலைபாயும் பீட்டா நிலையில் இருந்து, அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்துச் செல்லும். ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு, ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர, மற்ற அனைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம். குளிக்கும் பொழுது, கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

ஸ்படிக மாலையில் கை வைத்தவுடன் ஒரு வித குளிர்ச்சியை உணர்ந்தால், அது நல்ல உயர் தரமானது. உயர்ந்த வகை ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் ஸ்படிகம் கண்ணுக்குத் தெரியாது. நீரோடு நீராக ஒன்றி இருக்கும். முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன. முதல் தர ஸ்படிகமணி மாலை தான் நல்ல பலனைத் தரும். பார்த்துக் கொண்டே இருக்கச் செய்யும் வசீகர தன்மை ஸ்படிகத்திற்கு உண்டு.

ஸ்படிக மாலையை கையில் வைத்து இறைவன் பெயரை உச்சரித்தபடி தியானத்தில் ஈடுபடலாம். ஸ்படிக மாலையை வாங்கி உபயோகப்படுத்தும் முன், குறைந்தது 3 மணி நேரமாவது சுத்தமான நீரில் ஊறவிட வேண்டும். அதேபோல் ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின், அடுத்தவர் மாற்றி அணியும் போதும் நீரில் 3 மணி நேரம் ஊறவிட வேண்டும். ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது தான் பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும்.

காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாகவும் இருக்கும். இதை அணிந்த தருணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறைவதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஆன்மிகத்தில் ஸ்படிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது அபரி மிதமான ஈர்ப்பு சக்தி ஏற்படும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்வது நல்ல பலனைத் தரும். 

வாழ்வில் சகல செல்வங்களும் அருளும் விரதங்கள்

வாழ்வில் சகல செல்வங்களும் அருளும் விரதங்கள்

தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் அற்புதமான விரதங்கள் உள்ளன. இந்த விரதங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை. அம்பாளுக்கு உகந்த சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி, லலிதா சஷ்டி விரதம், உமாமகேஸ்வர விரதம், கேதார கௌரி விரதம், பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய புண்ணிய தினங்களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி.

ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம்.

அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

திருட்டு போன பொருட்கள் மீட்டுத்தரும் கொல்லாபுரியம்மன்

திருட்டு போன பொருட்கள் மீட்டுத்தரும் கொல்லாபுரியம்மன்

திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இருமத்தூரில் அமைந்துள்ள கொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.

திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலின் தெற்கு பகுதியில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டி கொள்ளும் பக்தர்கள் கோழிகளை உயிருடன் கயிற்றில் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டு விடுகிறார்கள். 

இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.  இவ்வாறு திருட்டு போன பொருட்கள் கிடைத்தால் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடுகளை வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 

வாகனங்களில் செல்லும்போது கொல்லாபுரிஅம்மன் கோவிலில் வழிபட்டால் வாகன விபத்துகள் ஏற்படாது என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து விதமான வாகனங்களையும் கோவில் வளாகத்தின் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜை நடத்திவிட்டு செல்லும் வழக்கம் உள்ளது.

பங்குனி ஹஸ்தத்துப் பரமன்

Thiruvarangathamuthanar_(1)_-_Copy

'கோயில் நம்பி' என்றும்  'கோயில் பிள்ளை' என்றும் அழைக்கப்பட்ட ஒருவர் ஸ்ரீரங்கம் கோயிலை மிகுந்த திறனுடன் நிர்வகித்து வந்தார். கோயில் புராணம் வாசிக்கும் பணியையும், கோயில் சாவியை வைத்துக்கொள்ளும் பொறுப்பையும் செய்துவந்தார். அவரது இயற்பெயர் என்னவென்று எவருக்கும் தெரியாது. காஞ்சியிலிருந்து ஆளவந்தாருக்கு பிறகு ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்து கோவிலின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கோயில் நடைமுறையில் பல  நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தினார்.

ராமானுஜரின் செய்கைகளால் தங்கள், நிர்வாக உரிமையில்  அவர் குறுக்கிடுவதாகக் கருதினர். முரண்பாடுகள் உண்டாகின. பலர் ராமானுஜருக்கு பல வகைகளில்  இடையூறு செய்தனர். கோவிலின்   நடைமுறைகளில்  பலகாலமாய்  பழகியிருந்த பெரிய கோயில் நம்பி தடையாக இருப்பதாக பலர் ராமானுஜரிடம் வாதிட்டனர், அவரை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திலிருந்து  வெளியேற்றாவிட்டால், ராமானுஜரின் எண்ணம் ஈடேறாது என்ற தகவலை    மனதில் ஊன்றினர். அவரும் கோவில் பிள்ளையை வெளியேற்ற நினைத்தார்.. அவர்கள்  ஒன்று நினைக்கப் பெருமாளின் திருவுள்ளம் வேறு ஒன்று நினைத்தது. 

ராமானுஜர்  ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காகக் காத்திருக்கும் போது, மண்டபத்திலேயே சற்றே கண் அயர்ந்தார்.  அரைகுறை தூக்கத்தில், பெருமாள் ஸ்ரீவைணவராய் தோன்றி  "கோயில் நம்பி நீண்ட காலமாக என்னையே நம்பி என்னுடன்  இருக்கிறார். அவரை வெளியேற்ற வேண்டாம்” என்று சொல்லி மறைந்து போனார்.

ராமானுஜரின் பிரதம சீடர்  மற்றும்  காரியதரிசி போல இருந்தவரான கூரத்தாழ்வானிடம் பல பணிகளுக்கு இடையூறு செய்யும்  கோயில் நம்பியை வெளியேற்றுவது பெருமாளுக்கு பிடிக்கவில்லை போலத் தெரிகிறது.  நாம் காஞ்சிபுரத்து பெருமாள் கோவில் கைங்கரியத்துக்குப் திரும்பிடலாமா என்றார். “பெருமாள் அப்படிச் சொன்னால்  நிச்சயம் பெரிய கோயில் நம்பியை மனம் மாற்றி விடுவார்” என்று கூரத்தாழ்வான் பதிலுரைத்தார். “அப்போது கோவில் நம்பியை திருத்தும் பணியை நீங்களே மேற்கொள்ளுங்கள்” என்ற பொறுப்பை அவரிடமே விட்டுவிட்டார். 

கூரத்தாழ்வான், பெரிய கோயில் நம்பியிடம் மெல்ல நட்புக் கொண்டு, உடையவரின்  பெருமை பண்களைச்  சொல்லி அவர்  மனத்தைப் பக்குவப்படுத்தினார்.  மெல்லமெல்ல கோயில் நம்பிக்கு  உடையவர் மீது பிடிப்பு உண்டாகி பக்தியாக மாறியது. 

ஒருநாள் கோவில் நம்பி தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ள  ராமானுஜரை வேண்டினார்.  "உங்களை மனம் மாறச் செய்த கூரத்தாழ்வானே உங்களுக்கு உரிய ஆச்சாரியன்" என்றார். mஇவரது  இலக்கிய அறிவையும், வாக்கு வன்மையையும் பாராட்டி 'அமுதன்' என்ற திருநாமத்தைச்  சூட்டினார் அதனால் "திருவரங்கத்தமுதனார்" என்றும் 'பிள்ளை அமுதனார்' என்றும் இவரை அனைவரும் அழைக்கத் தொடங்கினர். 

ஐப்பசி மாதம் அமுதனாருடைய தாயார் வைகுண்டபதவி அடைந்து, 11-ம் நாள் காரியத்துக்கு தம் உறவினர்கள் அல்லாது வேறு ஒரு நல்ல ஸ்ரீவைணவரை ராமானுஜரிடம் சொல்லி உணவு உண்ண அமர்த்த விரும்பினார். அன்று பரிமாறப்படும் உணவு இறந்து போனவரின் திருப்திக்கு ஏற்ப படைப்பதாக்க வைத்துக்கொள்ளப்படும். அன்று உண்பவரை சாப்பிட்டு முடித்த பிறகு உண்டது திருப்தியா எனக் கேட்பார் "திருப்தியாக உண்டேன்" என்று சொல்லி எழுந்தால், இறந்தவருடைய ஆத்மா திருப்தி அடைந்து மோட்சம் போகும் என்பது காலம் காலமாக வரும் நம்பிக்கை.

ராமானுஜர் கூரத்தாழ்வானை, அமுதனார் வீட்டுக்கு 11-ம் நாள் உணவு உண்ணப் பணித்தார். தனது ஆசாரியரே வந்ததால் அமுதனாருக்கு மிக்க மகிழ்ச்சி  அன்று கூரத்தாழ்வான் உணவு உட்கொண்ட பின் 'திருப்தி' கூறாமல் இருந்தார். அமுதனார் வேறு என்ன வேண்டும் என்றார்.

அமுதனாருடைய கோயில் புராணம் வாசிக்கும் பணியையும், கோயில் சாவி கொத்தையும் காணிக்கையாக கேட்டார். தன் குரு கேட்டு கொடுக்க மாட்டேன் எனச் சொல்லாமல் கொடுத்து அதனையும் கூரத்தாழ்வான் பெற்றார். அதன் பின்னரே "த்ருப்தியோஸ்மி" என்று கூறினார். அவற்றை உடையவரிடம் சமர்ப்பித்தார். ராமானுஜரும் மகிழ்ந்தார். 

அமுதனார் அதன்பின், கோயில் பணிகளில் அதிக ஈடுபாடுகொள்ளாமல் இருந்தார். ராமானுஜர் அனுபவத்துக்கும் திறமைக்கும் பொறுப்புக் கொடுத்து மதிப்பளிக்க நினைத்தார். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை ஸ்ரீரங்கத்தில் அரையர்கள் இசையோடு சேவித்த பின், அரையர்களுக்கு பெருமாள் பிரசாதங்கள் மற்றும் மரியாதையையும் கொடுத்து,  அவர்களைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு வீதி உலாவாக வீட்டில் விட்டு விட்டு வரும் பிரம்ம ரத மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள். 

ராமானுஜர் 'திருவரங்கப்பெருமாள் அரையரிடம்' இயற்பா சேவிப்பதை மட்டும்  பெற்று பெரிய பெருமாள் சன்னதியில் அமுதனாரை இயற்பாவைச் சேவிக்க நியமனம் செய்தார். அமுதனாருக்கும் பிரம்ம ரத மரியாதையையும் கௌரவத்தையும் சேர்த்துத் தந்தார். அமுதனார் தனக்கு ஸ்ரீகோசத்தைப் (ஓலையை) பார்க்காமல் சேவிக்க வராது என்று ராமானுஜரிடம் சொன்னார். காரேய் கருணை ராமானுஜரோ அமுதனார் ஓலை பார்த்துச் சேவிக்க விசேஷ அனுமதியும் அளித்தார்.

அமுதனார் ராமானுஜர் மீது கொண்ட பற்றால்  ராமானுஜரைப் போற்றி சில பிரபந்தங்களை செய்து அவற்றை ராமானுஜர் முன் வைத்தார். அதை படித்துப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக புகழ்ந்து இருப்பது தனக்கு பிடித்தமில்லை என்று அந்த ஓலைக்கட்டை கிழித்துப் போட்டுவிட்டார். வருத்தப்பட்ட திருவரங்கத்தமுதனார் என் கவிதையின் கருத்துக்கும் சொல்லுக்கும் பொருளுக்கும் தகுதியானவர். 

இதைப் போல் செய்து விட்டாரே என்று  கூரத்தாழ்வானிடம் கூறினார். அவர் அறிவுரைப்படி ஆழ்வார்களிடத்திலும் திவ்ய தேசங்களிடத்திலும் ராமானுஜர் கொண்ட பற்றைத் தெளிவுபடுத்தினார்.  ராமானுஜர் நூற்றந்தாதியை புதியதாக அமுதனார் எழுதினார். இன்னொரு முறை இப்போதுள்ள அந்தாதி வடிவை எழுதிக் கொண்டு போய் முயற்சித்தார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் பெருமைகளைப் பாடினார். பின் இரண்டு வரிகளில் அவர்களின் ஆசியும் தொடர்பும் கொண்ட ராமானுஜரின் பெருமையை எழுதினார். அதை ராமானுஜர் முன் வைத்தார். அவர் எடுத்துப் படிக்கக்கூடவில்லை. 

ஒருநாள்  ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் தாம் இயற்றிய நூலின் சிறப்புகள் ராமானுஜர் வாழ்வோடு வைத்துக் கொண்டு  விளக்கிக்கொண்டிருந்தார். தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு வந்தார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார் பெருமை கூறப்பட்டிருந்ததை ஏற்றுக்கொண்டார். இதை பிரபன்ன காயத்திரி என்றும் சொல்லுவர். 

பெருமாள் உலாவில் உடன் செல்லும் பழக்கம் உடையவருக்கு உண்டு. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சித்திரை மாதம் 11ம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி "இன்று  தாள வாத்தியங்கள் கூட வர வேண்டாம்" என்று சொல்லிவிட்டார். அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவித்ததை, பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார். (இந்தப் பழக்கம் இன்றும் அங்கு உண்டு).

ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒருவராக ஆக்கிக்கொள்கிறார் எனப்படுகிறது. ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும்போது உடையவரின் பெருமையையும் நம்பெருமாள் செவிசாய்த்துக் கேட்கிறார் என்பதால் வாத்தியங்கள் இசைக்கப்படுவதில்லை என்பர். இன்றும் திருவரங்கம் கோவில் ரங்கநாதர் சன்னதியில்  இயற்பா சாற்றி முடித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப்படுகிறது.

பிற்காலத்தில் நாலாயிரத்தைத் தொகுக்கும் போது இயற்பாவோடு ராமானுஜ நூற்றந்தாதியை சேர்த்துள்ளார்கள். ராமானுஜ நூற்றந்தாதியின் 108 பாட்டுக்களைச்  சேர்த்தால்தான் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் பாட்டுகள் எண்ணிக்கை மொத்தம் 4000 என ஆகும். 

திருவரங்கத்திலேயே இருந்தவராதலால் ஊர் பெயரோடு அமுதன் என்ற பெயர் சேர்த்து திருவரங்கத்தமுதனார் என்று வழங்கப்பட்டுள்ளது. கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் மூங்கில்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர் எனப்படுகிறது. அவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற குறிப்பு இல்லை. ஆனால் அவர் ராமானுஜரைக் காட்டிலும் மூத்தவர் என்ற குறிப்புக் கிடைக்கிறது. அவர் 108 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. 

நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இவர் பாடல் சேர்க்கப்பட்டுள்ளதால் இவரை ஆழ்வார்கள் வரிசையில் வைக்கலாம், உடையவரின் சீடராக இருந்த காரணத்தால் ஆசாரியர்கள் வரிசையிலும் வைக்கலாம் எனச் சொல்லுவோர்களும் உண்டு. எங்கிருந்தாலும் இவருக்கு வைணவத்தில் ஒரு இடம் உண்டு, திருவரங்கத்தில் மட்டும் ஸ்ரீ சுதர்சனர் சன்னதியில் இந்த ராமானுஜதாசர் சிலா உருவில் இருக்கிறார். இவருக்கு வேறு எங்கும் விக்ரக வழிபாடு என்பது இல்லை எனவும் சொல்லப்படுகிறது.

எதிர்வரும் பங்குனி ஹஸ்தம் 31.03.2018 இவரது அவதார திருநட்சத்திர தினமாகும். 

தந்தை சொல் தட்டாதே


அயோத்தி மன்னர் தசரதர், மூத்த பிள்ளை ராமனுக்கு பட்டம் சூட்ட முடிவெடுத்து, குலகுரு வசிஷ்டர், அமைச்சர்களிடமும் எண்ணத்தை தெரிவித்தார். அமைச்சர் சுமந்திரர் மூலமாக ராமனை அழைத்து, “மகனே! உனக்கு நாளையே பட்டம் சூட்டப் போகிறேன்,” என்றார். 

'தம்பிகள் பரதனும், சத்ருக்கனனும் தாத்தாவின் நாடான கேகய நாட்டிற்கு சென்றிருக்கும் நேரத்தில் பட்டம் சூடி கொள்ள ராமர் விரும்பாவிட்டாலும், தந்தையிடம் அதை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் சம்மதம் தெரிவித்தார். மறுநாள் மகனை காட்டுக்கு போக சொன்னபோதும் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை இதன் மூலம் உலகிற்கு உணர்த்தினார். 

திருப்பரங்குன்றத்துக்கும் திருமுருகாற்றுப்படைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதுதான்

murugar

தியானம் செய்தால் கவனம் சிதறாமல் ஒரே நினைப்பில் தியானம் செய்ய வேண்டும். ஆனால், இறைவனிடம் 'நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' என்று வாதாடிய நக்கீரப் பெருமானே தியானத்தில் இருந்து கவனத்தைச் சிதற விட்டுவிட்டாரே! அதனால் என்ன நடந்தது தெரியுமா?

ஆறுபடை வீடுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்திய நக்கீரரின் திருமுருகாற்றுப்படைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தமிழ் வளர்த்த கடைச்சங்கத்தின் தலைவர் நக்கீரர். துணிவாக சோமசுந்தரக் கடவுளிடமே வாதம் புரிந்தவர். 

அவர் சிவபெருமானோடு வாதம் செய்தபோது சிவபெருமான் கொடுத்த சாபத்தின் பலனாக நோய் வந்து அவதிப்பட்டார். அந்த நோய் தீர தீர்த்த யாத்திரை புறப்பட்டார். வழியில் திருப்பரங்குன்றத்தில் தங்கினார். சிவபூஜை செய்வதற்காகக் குளக்கரையில் ஆல மரத்தடியில் அமர்ந்தார். அச்சமயம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சிவ சிந்தனையில் இருந்து விடுபட்டுப் பார்த்தார் நக்கீரர். 

அரச மரத்திலிருந்து உதிர்ந்த ஓர் இலை, தண்ணீரில் பாதியாகவும் நிலத்தில் மீதியாகவும் விழுந்தது. இதில் என்ன அதிசயம் இருக்கப் போகிறது? இருந்தது! நீரில் விழுந்த பாகம் மீனாகவும், நிலத்தில் விழுந்த பாகம் பறவையாகவும் மாறியது. இந்த விநோத காட்சியைக் கண்டதும் நக்கீரரின் சிவபூஜை தியானம் தவறியது. 

அந்த விநோதக் காட்சியில் அவர் மனம் லயித்த சமயம் கற்முகி என்ற பூதம் அவரைப் பிடித்துக்கொண்டுபோய் மலைக்குகை ஒன்றில் வைத்தது. ஏற்கெனவே அவரைப் போல் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். ஆயிரம் பேர்கள் சேர்ந்ததும் அனைவரையும் அந்தப் பூதம் விழுங்க எண்ணியிருந்தது. 

இந்த ஆபத்தில் இருந்து தானும் மற்றவர்களும் தப்பிக்க, முருகனைத் துதித்து திருமுருகாற்றுப்படையைப் பாடினார் நக்கீரன். 

இந்தத் திருமுருகாற்றுப்படைதான் சங்கப் பாடல்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுகிறது. (இதை தினமும் பாராயணம் பண்ணினால் சிறைவாசம் கிட்டாது. நக்கீரர் பாடப் பாட, முருகன் கைவேல் மலைக்குகையைப் பிளந்து பூதத்தைக் கொன்று அனைவரையும் சிறை மீட்டது. 

திருமுருகாற்றுப்படை வெண்பா பிற்காலத்தில் யாராலோ பாடப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். யார் பாடினால் என்ன? நமக்கு விஷயம் தானே முக்கியம்! மேலும், சுவையான செய்தி ஒன்றும் உண்டு. 

"பழமுதிர்ச்சோலை மலை கிழவோனே" என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையை முடித்தார். 

அதற்கு முருகப்பெருமான் நக்கீரா நான் என்ன கிழவனா? என்று கேட்டு மறைந்தாராம். உடனே என்றும் இளையாய் என்ற வெண்பா பாடல்களை நக்கீரர் பாடினால் என்று செய்தி கூறுவாரும் உண்டு. 

நக்கீரர் இருந்து பூஜை செய்த குளம் சரவணப் பொய்கையாகும். இந்தப் பொய்கைக்கு அருகிலுள்ள பஞ்சாக்ஷரப் பாறையில் தான் நக்கீரர் அமர்ந்து பூஜை செய்தார் என்பதால், இந்தப் பாறைக்கு அருகில் நக்கீரருக்கு ஓர் ஆலயம் இருக்கிறது. 

கந்தன் கை லேல் பாறையைப் பிளந்த அடையாளத்தைக் குன்றின் தென்பாகமாகிய தென்பரங்குன்றத்தில் இன்றும் காணலாம். 

வேல் விழா

நக்கீரரை குகையிலிருந்து காப்பாற்றியதின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத நவராத்திரிக்கு முன்பாக வேலாயுதத்தை மலை உச்சிக்குக் கொண்டு போகும் விழா நடைபெறுகிறது. விழா முடிந்ததும் கடவுள் கருணை மழையைப்போல் நாம் வாழ வான்மழையும் பொழிகிறது. இந்த அற்புதம் இன்றளவும் நடைபெறுகிறது. 

இது முருகன் நமக்குக் காட்டும் கருணை அல்லாமல் வேறென்ன?

திருப்பரங்குன்றத்து தெய்வத் திருமகள் குமரனையும் தேவகுஞ்சரியையும் மீண்டும் வணங்கிவிட்டு இரண்டாம் படைவீடான திருச்செந்தூருக்குச் செல்வோம்!

Wednesday 28 March 2018

பாவங்களை போக்கும் நடராஜர் ஸ்லோகம்

பாவங்களை போக்கும் நடராஜர் ஸ்லோகம்

இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:
ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்
விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்
விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:
ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ

- சிதம்பர பஞ்சாக்ஷர மந்த்ரம்

பொருள்: இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்த்ரம். அவர் தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார். 

சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. இம்மந்திரத்தில் ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படுகிறது. இந்த மந்திரம் வாழ்க்கையில் அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. மேலும் இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும். 

கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் - திருப்பூர்

கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் - திருப்பூர்

கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் தன்னகத்தே கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுகிறது. அதே போல் கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கொழுமம் தாண்டேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி, விக்கிரம சோழனை ஆட்கொண்ட இடத்தில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழர்களின் கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. விக்கிரம சோழன் மட்டுமல்லாது பொதுமக்களின் பங்களிப்போடு இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதனை இங்கு காணப்படும் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன.

இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் மகிழ்ச்சியை அளிப்பதால் ‘மருதீசர்’ எனவும், பாவவினை என்னும் நோயை நீக்க மருந்தாகத் தோன்றியதால் ‘மருந்தீசர்’ என்றும், அர்ச்சுனன் வழிபட்டதால் ‘அர்ச்சுனேஸ்வரர்’ என்றும் பல்வேறு நாமங்களில் அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு :

அமராவதி ஆற்றங் கரையில் அமைந்துள்ள 11 சிவமூர்த்த தலங்களில், கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியை கொண்டது. பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு காரைத்தொழுவில் இருந்து இந்தப் பகுதி வழியாக இடையர் ஒருவர் பால் கொண்டு சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் கால் இடறி ஒரு குடம்பால் சிந்தியது. தினமும் இந்த நிகழ்வு தொடர்ந்ததால் மன்னன் விக்கிரம சோழனின் உத்தரவுப்படி அங்கிருந்த மூங்கில் புதர்கள், மருத மரம் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தின் மீது வெட்டுப்பட்டு, ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அது அருகில் இருந்த அமராவதி ஆற்றில் கலந்து ஓடியது. செய்தியறிந்து மன்னர் விக்கிரம சோழன் வந்து, தன் கைவிரல் மோதிரத்தால் ரத்தம் வடியும் இடத்தில் அழுத்த ரத்தம் நின்றதாம். இதையடுத்து அந்த இடத்தில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்தை விக்கிரம சோழன் அமைத்ததாக கூறப்படுகிறது. இன்றளவும் இங்குள்ள சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் வெட்டுப்பட்ட காயத்தின் தழும்பு போன்ற அமைப்பை காண முடியும்.

சோழர் படைத்தளபதி நாகதோஷத்தால் பாம்பு கடித்து அவதிப்பட்ட போது, இங்குள்ள அம்மன் புற்றாக தோன்றி அருள்புரிந்ததாகவும், குலோத்துங்க சோழன் மகளுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்ட போது, அர்ச்சுனேஸ்வரர் தோஷம் நீக்கி அருள்புரிந்ததாகவும். கர்ண பரம்பரை மற்றும் தல வரலாற்று செய்திகள் கூறுகின்றன.

ஒவ்வொரு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வளர்பிறை, பஞ்சமிதிதி மற்றும் பவுர்ணமி திதியன்றும் திருமணத்தடை நீங்க இத்திருக்கோவிலில் பரிகார பூஜைகள் நடைபெறுகிறது. இதில் மாங்கல்ய தோஷம் நீங்க வேண்டி பெண்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனால் இத்திருத்தலம் திருமணத்தடைகள் நீக்கும் ‘தென் திருமணஞ்சேரி’ என்று அழைக்கப்படுகிறது.

கொங்கு சோழனான மூன்றாம் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில், திரிபுவன சிங்கன் என்பவருக்கு ‘பிரமேகம்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட சர்க்கரை நோய் ஏற்பட்டது. அவர் கடத்தூர் மருந்தீஸ்வரரை வணங்கி வேண்டியதால் சர்க்கரை நோய் நீங்கி நலம் அடைந்தார். எனவே இறைவனுக்கு அமுது செய்ய நிலம் தானமாக வழங்கியதாகவும் இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

திருக்கோவில் அமைப்பு :

அர்ச்சுனேஸ்வரர் கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சமசதுர வடிவிலான கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என 90 அடி நீளம் கொண்டது. அர்ச்சுனேஸ்வரர் கோவிலின் தெற்கு திசையில் இறைவனது வலது பக்கத்தில் கிழக்கு நோக்கி கோமதி அம்மன் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. மேலும் இரு திருச்சுற்றுகள், இரு திருமுற்றங்கள், இரு திருவமுது மடங்கள், இரு வாசல்கள் என அமைந்துள்ளது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும்.

பொதுவாக சிவன் கோவிலில் இறைவனுக்கு இடது புறமாக அம்மன் சன்னிதி அமைவது மரபு. ஆனால் கடத்தூரில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்துக்கு வலது புறமாக 4 அடி உயரத்திருமேனி கொண்டு, தனி சன்னிதியில் கோமதி அம்மன் அருள்பாலிக்கிறார். எனவே காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சியைப் போன்று கடத்தூர் கோமதியம்மனும் தனிச்சிறப்பு பெற்றவராய் திகழ்கின்றார்.

சைவம், வைணவம் பேதம் இன்றி கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் இறைவனின் முதுகுப்பகுதியில் விஷ்ணு சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோவில் திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. வாயிலின் முன்புறம் 4½ அடி உயர பலிபீடமும், 3½ அடி நீளம் 3 அடி உயரம் கொண்ட நந்திதேவர் சிலையும் அமைந்துள்ளது. சுவாமி சன்னிதியின் தெற்கு தேவ கோட்டத்தில் வெள்ளை நிறம் பளிங்குக் கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி சிலை உள்ளது. இந்த பளிங்கு திருமேனியானது காசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகின்றனர்.

பொதுவாக சுயம்புலிங்கம் உள்ள கோவில்களில் நவக் கிரக சன்னிதி இருப்பதில்லை. இருப்பினும் இந்த திருக்கோவிலில் கோமதியம்மனின் தவத்தினை கண்ட சனிபகவான் தானும் தவமியற்றி வழிபட்டு வந்ததாக வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே பக்தர்கள் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்கள் மற்றும் ராகு, கேதுகளின் தோஷ காலங்கள் உள்ளிட்ட இடர்பாடுகள் நிறைந்த காலங்களில் இங்கு தவமியற்றி நிற்கும் சனிபகவான், கால பைரவர் ஆகியோரை வணங்கி, பின் கோமதியம்மனை வணங்கி அர்ச்சுனேஸ்வரரை வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும்.

இத்திருக்கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிப்பூரம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி, பைரவர் பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் பக்தர்களால் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாப்த பூர்த்தி ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகிறது. திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை, காலசர்ப்ப தோஷம் மற்றும் சகல தோஷங்களுக்குமான பரிகாரத்தலமாக இத்திருக் கோவில் உள்ளது.

கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் கணியூருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினசரி காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடை திறந்திருக்கும். விஷேச தினங்களில் நடைதிறப்பு நேரம் மாறுபடும்.

சூரிய ஒளி விழும் அதிசயம்

ஆண்டு முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளி கோவில் அருகில் உள்ள அமராவதி ஆற்றின் நீரில் பட்டு பிரதிபலித்து சுயம்புவாய் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள அர்ச்சுனேஸ்வரர் மீது படுவது சிறப்பம்சமாகும். சூரியன் திசை மாறும் காலங்களான உத்திராயணம், தட்சிணாயணம் காலங்களிலும் கூட சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும்.

மேலும் ஆற்று நீரில் படும் சூரிய ஒளி ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை கோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம் வசந்த மண்டபம் கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும். அதிகாலையில் சூரிய பகவான் தன்கிரகணங்களை அர்ச்சுனேஸ்வரர் மீது செலுத்தி வழிபடுவதால் இவ்விறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம்.

அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத காலங்கள் தவிர மற்ற காலங்களில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் அதிசயத்தை காண முடிகிறது. இந்த அதிசய நிகழ்வை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ராகுகால பைரவர் விரத வழிபாடு

ராகுகால பைரவர் விரத வழிபாடு

தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் தொங்கும்; அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது 16 மாத தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டதால் கிடைத்த அனுபவ உண்மைகள் ஆகும்.

1. நமக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2. நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்.
4. சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டா கும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.அரசியல் சூழ்ச்சிகள் நிர்மூலமாகும்.
7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்து விடும்.
8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.

குழந்தை பாக்கியம் அருளும் நிலக்கோட்டை மாரியம்மன்

குழந்தை பாக்கியம் அருளும் நிலக்கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கடந்த 1912-ம் ஆண்டுக்கு முன்பு மாரியம்மன் கோவில் பீடமாக இருந்தது. பின்னர் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த கோவில் பைரவரை அஷ்டமி திதியில் வணங்கி வந்தால் அனைத்து தொல்லைகள், பீடைகள் நீங்கும். அதே போன்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இவ்வாறு குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியினர் ஆண்டுதோறும் கரும்பு தொட்டில்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது தவிர தங்கள் குறைகள் தீர்த்து வைக்கக்கோரி அம்மனிடம் மனம் உருகி வேண்டும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும், தீச்சட்டி, தீர்த்தக்காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். 

நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்றான அம்மைநோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய்தீர அம்மனை மனதார வேண்டிக்கொள்வார்கள். குறிப்பாக அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மைநோய் குணமாகும் என பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் அருள மனம் உருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து குழந்தை வரம் கிடைத்ததும் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து, அதை கரும்பில் தொட்டிலாக கட்டி அந்த தொட்டிலில் குழந்தையை வைத்து மாரியம்மன் கோவிலை 3 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பின்னர் தொட்டில் கட்டிய கரும்புகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.

பங்குனி உத்திரத்துக்கு இவ்வளவு சிறப்புகளா?

murugar1

பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். திருமணமாகாத இரு பாலரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபடின் திருமணப்பேறு அருளக் கிடைக்கும்.

புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். இதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்களில் இருக்கின்றன. 

தமிழ் மாத கடைசி மாதமான பங்குனியில், பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனித நாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தைக் கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.

உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன் அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இந்நாளில்தான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான்.

ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக செய்து வருகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இந்தநாளில்தான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில்தான் மணம் புரிந்துகொண்டார்.

மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்தப் பங்கு உத்திரத்தன்றே. நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது, மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது, சரஸ்வதி பிரம்மதேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதெல்லாம் பங்குனி உத்திர தினத்தன்றுதான்.

கோபத்திற்குப் பெயர் போனவர் துர்வாச முனிவர். இவர் வந்து கொண்டிருந்தபோது, அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருந்தது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வந்தார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வந்தான். 

தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்கக் கேட்க, இதனால் ஏற்பட்ட பெருமிதம் அவன் முகத்தில் தெரிந்தது. துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா!' உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்தப் பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத்தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.

தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர் மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கிக் கொள்வதா என்ற எண்ணம் அவனுக்கு. ஆனாலும், கொடுப்பவர் துர்வாசர் என்பதால் ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டு அலட்சியமாக தன் கையால் தொடாமல் அங்குசத்தால் ஏந்தி யானையின் தலைமீது போட்டான். யானையோ இந்திரனுக்கும் மேலான அலட்சியத்துடன் இருந்தது.

ஆம், தன் தலையில் வைக்கப்பட்ட மலர் மாலையை உடனே தும்பிக்கையால் இழுத்துத் தன் கால்களின் கீழே போட்டு மிதித்துத் துவைத்து விட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.

தேவேந்திரா, தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உனக்கு ஆணவம் கொண்டாயே!.

எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார். துர்வாச முனிவரின் சாபத்தின்படி இந்திர லோகத்தில் இருந்த எல்லாச் செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் பதறிப் போனார்கள். உடனே எல்லோரும் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள்.

இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள். மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டனர். நாட்கள் பல சென்றன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால், திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. 

பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவந்தது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்க ஆரம்பித்தாள். இவ்விரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் உருவானது. உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிக் கொண்டார்.

காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும்படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே தங்கி நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார். பாற்கடலைக் கடைவதில் இன்னும் சில நாட்கள் தொடர்ந்தன.

எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கியது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள்.அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாளே பங்குனி உத்திரத் திருநாளனது. அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் அணிவித்தாள். இதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்ந்தத் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடையாது. 

அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை. இந்நாளில் மற்ற வைணவ ஆலயங்களிலும் மணக்கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். மேலும், காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார்.

காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, இதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள். மதுரையைப்போலவே,, தேவேந்திரன், நான்முகன், கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடந்தேறின. ஸ்ரீராமன் சீதை, லட்சுமணன் ஊர்மிளை, பரதன் மாண்டவி, சத்ருக்கன் ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன.

இதே பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடப்படுவது வழக்கம். பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான் என்பது சத்தியமான உண்மை. அதுபோல திருமழபாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான் நடக்கும் என்பதும் உண்மை. 

பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சியருளை தருபவர்கள். அதனாலேயே அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கிக் கொள்கிறோம். இதனால், பகை அகற்றி புண்ணியம் பெறலாம். நம் அம்மை காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியத்தை தரும். நாற்பத்திரண்டு ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.

இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும், பூரணா-பூஷ்பாகலா சாஸ்தாவையும், ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணத்தில் இருக்கிறது. மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியாதிருந்த வேளையில், அவள் வாங்கிய வரத்தின்படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால்தான் தனக்கு அழிவு எனப் பெற்றிருந்தாள். ஆனால், ஆணும் ஆணும் எப்படி சேர்வது? பிள்ளை எப்படி பிறக்கும்? எனவே, இது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் மஹிஷி செய்து கொண்டிருந்தாள். 

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்ய தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்தனர். இதனால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.

சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போயிருந்தன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலங்காலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருந்தான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்கத் தவம் செய்து கொண்டிருந்தாள்.

சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால், காமன் கணைகள் தம் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். 

ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். இதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றும். எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவே நமக்கு வருகிறது.

சம்பந்தர் பதிகத்தில் பங்குனி உத்திரவிழா

சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். இச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவையை, பாம்பு தீண்டிவிட உயிரிழந்தாள். மகளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். இதையறிந்த சம்பந்தர், பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார்.

பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்! என்ற பொருள்பட பாடலைப் பாடினார்.

சிவனருளால் பூம்பாவை உயிர் பெற்றாள். "பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய் என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்."

பங்குனியில் நந்திக்கு திருமணம்

சிலாத முனிவர் திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறப்பர் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்றிருந்தார் சிலாதமுனிவர். தம் உயிரான ஐயாறப்பரைப் பூசித்து கடும் தவம் இருந்தார். தனக்கு அறிவார்ந்த மகன் வேண்டுமென்று பிரார்த்தித்தார்.

ஈசன் காட்சியாய் வந்து....சிலாத முனிவரே! என்னைப் போன்றே உனக்கொரு மகன் வேண்டும் என்றால் நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் செய்ய யாக பூமியை உழும்போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறு மட்டுமே. அவனை எடுத்துக்கொள்! என்று அசரீரியாகத் திருவாய் மலர்ந்தருளினார். ஈசனின் அருளை எண்ணி சிலாதமுனிவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.

இறைவன் அருளிய வண்ணம் யாக முடிவில் பூமியை உழுதார். கலப்பையில் ஒரு பெட்டகம் தட்டுப்பட்டது. முனிவர் அதைத் திறந்து பார்த்தார். அதில் நான்கு தோள்களும் மூன்று கண்களும் பிறையணிந்த முடியும் கொண்டு விளங்கும் ஒரு மூர்த்தியைக் கண்டார் வணங்கினார். ஐயாறப்பர் மீண்டும் அசரீரியாய், முனிவரே! பெட்டியை மூடித்திற என்று கட்டளையிட்டருளினார்.

பெட்டகத்திலிருந்த அம்மூர்த்தி முன்னைய வடிவம் நீங்கி பிரகாசத்தோடு அழகிய குழந்தை வடிவுடன் இருந்தது. அக்குழந்தையைக் கண்டு சிலாத முனிவரும் அவரது மனைவி சித்ராவதியாரும் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் அடைந்தனர். பெற்றோர் அக்குழந்தைக்கு "செபேசுவரர்" என்று நாமகரணம் செய்து வளர்த்து வந்தார்கள். செபேசுவரர் பதினான்கு வயதிற்குள் வேதாகம சாஸ்திரங்கள் உட்பட சகல கலைகளிலும் வல்லவரானார்.

அழகிலும் அறிவிலும் சிறந்த இம்மைந்தனை இன்னும் இரண்டு வருடத்தில் இழக்க நேருமே என்று ஏங்கி வருந்திய பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு ஐயாறப்பர் ஆலயத்தை அடைந்தார் செபேசுவரர். இறைவனைத் தொழுது வழிபட்டார். தனக்கு நீண்ட ஆயுளைத் தந்து பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தருளும்படி வேண்டினார். பின்னர் அங்கிருந்த அயனரி தீர்த்தத்திலே நீராடிய பிறகு, இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்தார்.

செபேசுவரரின் அருமைத் திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன. செபேசுவரரின் உறுதியான தவத்தையும், வைராக்கியத்தையும், அன்பையும் கண்டு மகிழ்ந்த இறைவன் ஐயாறப்பர் அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் வேண்டிய படியே நிலையான நீண்ட ஆயுளைத் தந்தருளினார். அதோடு, நிலைத்த பதினாறு பேறுகளையும் தந்தருள வேண்டும் என்று வரமாக அருளினார்.

மேலும், செபேசுவரரது புண்பட்ட உடலை நலமுறச் செய்தல் வேண்டுமெனத் திருவுளங் கொண்டு கங்கை நீர், மேகநீர், பிரமன் கமண்டலநீர், அம்மையின் முலைப்பால், இடபநந்தியின் வாய்நுரைநீர் எனும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார் இறைவன். இதனால் செபேசுவரர் உடல் ஊறு நீங்கிச் சூரியன் போல் பிரகாசித்தார். சிலாத முனிவர் தம் மகனுக்குத் திருமணம் செய்விக்க எண்ணினார்.

அதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். வசிஷ்ட முனிவரின் பவுத்திரியும், வியாக்ரபாதமுனிவருடைய புத்திரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாச அம்மையாரை தமது புதல்வன் செபேசுவரருக்குத் திருமணம் செய்விக்க விரும்பினார். இறைவன் ஐயாறப்பர் இறைவி அறம் வளர்த்த நாயகி ஆகியோரின் முன்னிலையில், திருமழபாடி வஜ்ர தம்பேசுவரர் கோயிலில் பவித்திரமான பங்குனித் திங்களில் புனர்வசு நட்சத்திரதினத்தில் செபேசுவரர்க்கும் சுயம்பிரகாச அம்மையாருக்கும் இனிதே திருமண விழா நடந்தேறியது.

பின் செபேசுவரர் ஐயாறப்பரால் உபதேசம் பெற்று கைலாயத்தில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியும் முதன்மைத் திருவாயிலில் இருந்து காக்கும் உரிமையும், சைவ ஆச்சார்யருள் முதல் குருவாகும் தன்மையும் பெற்றார். இறைவன் அருளால் இத்தகைய பேறு பெற்ற செபேசுவரர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஐயன் ஐயாறப்பரும் அம்மை அறம் வளர்த்த நாயகியும், புதுமணத்தம்பதியரான நந்தியெம்பெருமானையும் சுயம்பிரகாச அம்மையாரையும் அழைத்துக் கொண்டு சப்த ஸ்தானத் தலங்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குத் திருவுலா சென்று வருகிறார்கள்.

இந்த உலாவில், இறைவனும் இறைவியும் கண்ணாடிப் பல்லக்கிலும், நந்தியெம்பெருமானும் சுயம்பிரகாச அம்மையும் வெட்டிவேர் பல்லக்கிலும் உலா வருகிறார்கள். இந்நிகழ்ச்சி ஏழூர் திருவிழா என்று இன்றளவும் நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களில் சாஸ்தா கோயில்கள் மிக அதிகமாக இருக்கின்றன. பங்குனி உத்திரத்தன்று இங்குக் கூட்டம் அலைமோதும்.

பங்குனி உத்திர சிறப்பு

எல்லா நட்சத்திரங்களும் சிறப்பு மிக்கவைதான் என்றாலும், குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள் இன்னும் விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இப்படி. இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது.

அப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு உள்ளது?

சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களைக் கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.

தெய்வமணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத்திரு நாளும் ஒன்று. இத்திருநாளை தெய்வீகத்திருமண நாளாகவே இந்து சமயம் போற்றிக் கொண்டாடுகிறது. பங்குனி மாதம் பவுர்ணமி திதியோடு உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளான பங்குனி உத்திரம் திருநாளில் தான் அநேகர தெய்வீக திருமணங்கள் நடந்தேறியுள்ளன. இந்நாளைக் கல்யாண விரதம் என்றும் அழைப்பர். பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்யத் தேர்ந்தெடுத்தது. காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது, மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது, ராமர் சீதையை மணந்தது, லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது, இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது, திருப்பரங்குன்றத்தில் முருகன்  தெய்வானை திருமணம் நடந்தது, ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்தது, அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு.

எப்போதும் நோயாளியாக இருக்கும் கிரகநிலைகள் யாருக்கு?

newplanet

சிலருக்கு நோய்கள் வந்தால், அவை விரைவில் குணமடையும். சிலருக்கு நீடித்துக்கொண்டே இருக்கும். சிலருக்கு ஆயுள் முழுவதுமே நோயினால் தவிப்பார்கள். இத்தகைய நிலையில் ஆரோக்கியமாக இருக்கும் கிரகநிலையையும், எப்போதுமே நோயாளியாக இருக்கும் கிரகநிலையையும் பார்ப்போம். 

நோயிலிருந்து குணமடையும் கிரகநிலைகள்

• 12-க்குடையவன் பலமற்றவனாய் 8-க்குடையவனுடன் சேர்ந்திருந்து, 10-க்குடையவனும் பலம் பெற்றிருந்தால், அந்த மனிதன் நோயற்றவன் ஆகிறான். 

• சந்திரன் சுபருடன் கூடி, 6, 8, 12-ம் இடங்களைத் தவிர்த்து வேறு இடத்திலிருந்து லக்னாதிபதி சுபர் பார்வை பெற்றிருந்தால் தனக்கு வரும் நோயின் வீரியத்தை அறிந்துகொள்ளும் நிலை உண்டாகும். 

• லக்னத்தில் சுபக்கிரகம் இருந்தாலும் சந்திரன் சுபருடன் கூடி கேந்திரத்தில் இருந்தாலும் நோயிலிருந்து விடுபடுவான். 

• 12, 6, 8 4 ஆகிய இடங்கள் பாப சம்பந்தம் பெற்றிருந்து கேந்திரத்தில் சுபரும் இருந்தால் நோயின் வேகம் குறையும். 

• பிரசன லக்னத்திற்கோ, ஜன்ம லக்னத்திற்கோ 7, 8, 9, 5-ம் இடத்தில் சுபக்கிரகங்களோ, சுபரால் பார்க்கப்பட்ட வேறு கிரகங்களோ இருந்து, சந்திரன் 3, 6, 10, 11-ம் இடங்களில் ஏதேனும் ஒரு இடத்திலிருந்தால் ரோகம், ஆபத்து இவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் நோய்களில் இருந்து விடுபடுவான். 

• சந்திரன் 3, 6, 10, 11-ம் இடங்களில் இருந்தாலும் 5,9 கேந்திரம் 2-ம் இடத்தில் இருந்தாலும் லக்னம் சுபக்கிரகத்தால் பார்க்கப்பட்டால் நோயில் இருந்து விரைவில் குணமடைவான். 

எப்போதும் நோயாளியாகவே இருக்கும் கிரகநிலைகள் 

• ஆறுக்குடையவன் பாபரின் சேர்க்கையை அடைந்து, செவ்வாய் இராகுவுடன் சேர்ந்திருந்தால் ஜாதகர் எப்போதுமே ஏதேனும் ஒரு நோயின் தாக்கத்திலே இருப்பார். 

• செவ்வாய் 8, 7-ல் இருந்தால் கலகமும், ஜென்ம லக்ன, சந்திர லக்னத்திற்கு 12-ல் இருந்தால் ஜதகருக்கு செலவும் அதிகரிக்கும். 

• லக்னத்திலிருந்து புதனையோ, சந்திரனையோ பாபக்கிரகம் பார்த்தால் உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நோயிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

• லக்னத்தில் பாபரும் இருந்து சந்திரனும் பலமற்றதாக இருந்தால் அந்த மனிதன் நோயிலிருந்து ஏழுந்திருக்கமாட்டான்.