Saturday 10 March 2018

நல்ல பலன்களை வழங்கும் நவக்கிரக வழிபாடு

நல்ல பலன்களை வழங்கும் நவக்கிரக வழிபாடு

நவக்கிரக வழிபாடு, ஒவ்வொருவருக்கும் நல்ல பலன்களை வழங்கும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பலனை வழங்கும் சக்தி உள்ளது. 

சூரியனை வழிபட்டால் ஆரோக்கிய நலன் பெறலாம். சந்திரனை வழிபட புகழ் வந்து சேரும். செல்வ வளம் பெறுவதற்கு செவ்வாயை வழிபடுவது நல்லது. அறிவு வளர்ச்சியில் சிறந்து விளங்க புதனையும், ஞானம் பெறுவதற்கு வியாழ பகவானையும் வழிபட்டால் பலன் கிடைக்கும்.

மேலும் சந்தோஷம் நிலைத்திருக்க வெள்ளியையும், ஆயுள் பலம் பெறுவதற்கு சனி பகவானையும் வழிபடுவது நன்மை தரும். எதிரி பயம் விலகுவதற்கு ராகு வழிபாடு சிறந்தது. குலம் விருத்தியடைய கேதுவை வழிபட வேண்டும்.

No comments:

Post a Comment