கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து 150 கி.மீ., துாரத்திலுள்ள பேலுார் சென்னகேசவர் கோயில். இங்கு பிரகாரத்தை சுற்றி ராமாயண, மகாபாரத, தசாவதார சிற்பங்கள் உள்ளன. இதில் இரண்யனை வதம் செய்யும் நரசிம்மர் சிற்பம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
கர்ஜிக்கும் நரசிம்மரின் கண்களில் அனல் பறக்க, முகத்தில் கனல் தெறிக்க ஆவேசமுடன் காட்சி தருகிறார்.
முன் இரு கைகள் அசுரனின் வயிற்றை கிழித்த நிலையிலும், பின்னிரு கைகள் குடலை தன் கழுத்தில் மாலையிட்டபடியும் உள்ளன. பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. ஒருகை கண்ட நாதமாய் மணியடித்து ஓசை எழுப்புகிறது. ஒருகை இரண்யனின் கைகளை அழுத்தி பிடித்தும், ஒருகை நகத்தால் அவனது தொடையை கிழித்தும் கோபத்தை வெளிப்படுத்துகிறது. பெருமாளின் பாதத்தில் அசுரர்கள் அஞ்சியபடியும், கருடாழ்வார் கைகூப்பியும் நிற்கின்றனர். இச்சிலை இரண்ய சம்ஹாரத்தை கண்முன்னே நிறுத்துகிறது என்றால் மிகையில்லை.
No comments:
Post a Comment