Friday 16 March 2018

செல்லப்பிள்ளை


போகர் என்னும் சித்தரால் வடிவமைக்கப்பட்ட, நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான், பழநியில் அருள்பாலிக்கிறார். சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக, முருகப்பெருமான் இங்கு இருப்பதால் இதற்கு 'சித்தன் வாழ்வு' என்றும் பெயருண்டு. ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து நிற்பதால் 'பழநியாண்டி' என்று அழைப்பர். 

நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்கு வழங்காமல், விநாயகப் பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப் பெருமான் இங்கு ஆண்டியாகஇருக்கிறார். ஆனாலும், பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பால் ராஜ அலங்காரத்தில் பட்டு பீதாம்பரதாரியாக கிரீடத்துடன் வழிபாடு செய்வதையே விரும்புகின்றனர். அவர் தான் பக்தர்களின் செல்லப்பிள்ளை ஆயிற்றே!

No comments:

Post a Comment