Thursday 8 March 2018

அன்புள்ள அப்பா


ஒரு கஞ்சன் யாகம் செய்தான். யாகத்தின் முடிவில் தானம் செய்ய வேண்டும் என்பது விதி. கஞ்சனுக்கு தானம் செய்ய மனம் வரவில்லை. சம்பிரதாயத்துக்காக எலும்பும் தோலுமான பசுக்களை தானம் கொடுத்தான். தந்தையின் தவறை அவனது மகன் நசிகேதஸ் சுட்டிக்காட்டினான்.

கோபமடைந்த தந்தை,“ அப்படியானால், உன்னைத் தான் எமனுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்,” என்றார். பையன் நிஜமாகவே எமலோகம் போய்விட்டான். அப்போது எமதர்மன் அங்கு இல்லை. மூன்று நாள் கழித்து வந்தார்.

நசிகேதசை வரவேற்ற எமன், “மூன்று நாட்கள் உன்னை பட்டினியாக காக்க வைத்ததற்கு வருந்துகிறேன். அதற்கு ஈடாக மூன்று வரம் தருகிறேன்,” என்றார்.

சிறுவன் முதலில், தன் தந்தை செய்த தவறை மன்னித்து யாகத்தின் பலனை அவருக்கு கொடுக்க வேண்டினான். அதை எமன் கொடுத்து விட்டார். 

இறப்புக்கு காரணமானவர்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என நசிகேதஸ் வாழ்க்கை உணர்த்துகிறது.

No comments:

Post a Comment