ஆதிசங்கரரால் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குவது, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகிலுள்ள உப்பூர் என்னும் தலம். இத்தலத்தில் வீற்றிருக்கும் விநாயகருக்கு `வெயில் உகந்த விநாயகர்’ என்று பெயர் இவருக்கு மேற்கூரை கூட இல்லை.
இராமபெருமான், ராவணனை அழிக்க கிஷ்கிந்தையிலிருந்து கிளம்பி சேதுக்கரைக்கு நடந்தே சென்றுக் கொண்டிருந்தார். இராவண வதம் வெற்றிகரமாக நடக்கவேண்டும் என்று எண்ணிய இராமன் முதலில் இந்த விநாயகப் பெருமானை வழிபட்டார். தனது மாமனாகிய பெருமாளே, இராம அவதாரத்தில் எளிமையாக வந்து தன்னை வணங்கியதால், இத்தலத்து விநாயகரும் மேற்கூரை கூட இல்லாமல் மிக எளிமையாக காட்சி தருகிறார்.
No comments:
Post a Comment