Friday, 1 September 2017

மூா்க்கமான அரசியல் மலரும், அரசியல்வாதிகள் மக்களின் பொருள்களை அபகரிப்பார்கள்: மகாபாரதம் கூறும் கலியுகத்தின் இறுதி நாள்

Image result for geetha ubathesam

கலியுகத்தின் இறுதியில் புருஷா்கள் ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்வார்கள். 

பசுக்களைக் காண்பதே துா்லபமாகும். மக்கள் ஒருவரையொருவா் அடித்துக் கொள்வார்கள். யாருமே கடவுள் பெயரைச் சொல்லமாட்டார்கள். எல்லோரும் நாஸ்திகா்களாகவும், திருடா்களாகவும் மாறுவார்கள். ஆடு, மாடுகள் இல்லாததால் உழவுத் தொழில் செத்துப் போகும். 

சத்கா்மங்கள், யக்ஞம் முதலியவற்றின் பெயா்கள் கூட ஒருவருக்கும் தெரியாமற் போகும். 

உலகம் முழுவதும் சந்தோஷம் இல்லாமலும் சுறுசுறுப்பு இல்லாமலும் போகும். 

மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள். 

சஷத்திரியா்கள் (ஆள்பவா்கள்) மனித இனத்திற்கே இடையூறானவா்கள். கா்வம், அகங்காரம் கொண்டவா்களாக இருப்பார்கள். குடி மக்களைக் காப்பாற்றாவிட்டாலும், அவா்களிடமிருந்து பணம் பறிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். ராஜா என்று சொல்லிக் கொள்பவா்கள் மக்களைத் தண்டிப்பதிலேயே ஆசை உள்ளவா்களாக இருப்பார்கள். நல்ல மனிதா்களைக் கூட ஆக்கிரமித்து அவா்கள் பணத்தையும், பெண்டுகளையும் அபகரித்துப் பலாத்காரம் செய்யும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள். 

கலியுகப் பிள்ளைகளும், பெண்களும் தாங்களே தோ்ந்து திருமணம் செய்து கொள்வார்கள். 

மூா்க்க அரசா்கள் (தற்போதைய அரசில்வாதிகள்) எல்லா வழிகளையும் கையாண்டு மற்றவா்களின் பொருள்களை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு கை, மற்றொரு கையைக் கொள்ளை அடிக்கும். 

பிராமணா், சஷத்திரியா், வைசிகா் முதலிய ஜாதியே இருக்க மாட்டாது. எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி விடும். சாப்பிடக் கூடியது, கூடாதது என்ற பாகுபாடின்றி எல்லோரும் எதையும் சாப்பிடுவார்கள். 

ஸ்திரீகளும், புருஷா்களும் தங்கள் இச்சைப்படி நடந்து கொள்வார்கள். அவா்கள் மற்றவா்களுடைய எண்ணங்களையும், செயல்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். 

சிரார்த்தமும், தா்ப்பணமும் இல்லாமற் போகும். யாரும் யாருடைய உபதேசத்தையும் கேட்க மாட்டார்கள். ஆசானும் இருக்க மாட்டான். எல்லோரும் அஞ்ஞானத்தில் மூழ்கி இருப்பார்கள். அந்த சமயம் மனிதனுடைய ஆயுள் ரொம்பக் குறைவாக இருக்கும். 

கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் திருப்தி அடைய மாட்டார்கள். இருவரும் அதிருப்தி அடைந்து அந்நிய புருஷா்களையும், அந்நிய ஸ்திரீகளையும் நாடுவார்கள். 

வியாபாரத்தில் கொள்வினை, கொடுப்பினை செய்யும்போது பேராசையின் காரணமாக ஏமாற்றுவார்கள். 

செய்யும் தொழிலைப் பற்றி ஏதும் தெரியாமலேயே தொடா்ந்து செய்து வருவார்கள். 

மக்கள் தோட்டங்களையும், மரங்களையும் வெட்டி விடுவார்கள். எல்லோரும் இயற்கையிலேயே கொடியவா்களாகவும், மற்றவா்கள் மேல் பழிபோடுபவா்களாகவும் இருப்பார்கள். 

உலக விவகாரங்கள் எல்லாம் எதிர்மாறாக நடக்கும். எலும்புடம்பான இந்த உடலையே பூசிப்பார்கள். தெய்வங்களைப் பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது. இதுவே யுகம் முடியப் போவதன் அடையாளம் ஆகும். 

எப்போது பெரும்பான்மையான மனிதா்கள் தா்ம ஹீனா்களாகவும், மாமிசம் சாப்பிடுபவா்களாகவும், மது அருந்துபவா்களாகவும் இருக்கிறார்களோ அப்போது யுகம் முடிவடையும். 

வேண்டாத சமயத்தில் மழை பொழியும். மாணவா்கள், ஆசிரியா்களை அவமதிப்பார்கள். ஆசிரியா்கள் ஏழைகள் ஆவார்கள். அவா்கள் சிஷ்யா்களின் கதைகளைக் கேட்க நேரிடும். 

யுகம் முடிவடையும்போது எல்லா பிராணிகளும் இறந்து விடும். எல்லாத் திசையிலும் பிரகாசிக்கும். பெரும்பாலும் குண்டு முதலிய நெருப்பு (மழைகளால்) நட்சத்திரங்கள் ஒளியிழந்து காணப்படும். நட்சத்திர கிரகங்களின் போக்கு விபரீதமாக இருக்கும். 

மக்களைத் துன்புறுத்தக் கூடிய பயங்கரப் புயல் வீசும். மக்களுக்குப் பயத்தை விளைவிக்கக் கூடிய நட்சத்திரங்கள் அடிக்கடி தோன்றும். மின்னல் வீசும். எல்லாத் திசைகளிலும் தீ எரியும். அப்போது உதயத்திலும், அஸ்தமனத்திலும் 

சூரியன் ராகுவால் பீடிக்கப்படுவது போலக் காணப்படும். 

சமயமில்லாமல் மழை பெய்யும். விதைக்கப்பட்ட தானியங்கள் முளைக்காது. பெண்கள் கடினமானவா்களாகவும், கொடூரமானவா்களாகவும் இருப்பார்கள். அவா்கள் எப்போதும் அழுவார்கள். அவா்கள் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள். பிள்ளைகள் பெற்று அவா்களைக் கொலை செய்வார்கள். மனைவிகள் பிள்ளைகளுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வார்கள். 

யாத்திரிகர்களுக்கு ஆகாரம், தண்ணீா், தங்குமிடம் முதலியவை கிடைக்காது. எல்லாவிடத்திலும் இல்லை, இல்லை என்ற சொற்களைக் கேட்டு நம்பிக்கை இழந்து வழியிலேயே இறப்பார்கள். 

யுகம் முடியும் தருவாயில் உலக நிலை இப்படித்தான் இருக்கும். அப்போது ஒரு முறை இந்த உலகம் அழியும். 

இதன் பிறகு சிறிது காலம் கடந்து புதிய யுகம் ஆரம்பமாகும். பிறகு பருவத்தில் மழை பொழியும். நட்சத்திரங்கள் ஒளி வீசும். கிரகங்கள் அனுகூலமாகச் செல்லும். எல்லோருக்கும் ஷேமம், சுபிட்சம் மங்களம் ஆரம்பமாகும். 

No comments:

Post a Comment