ஒரு மனிதனுடைய ஜனன ஜாதகத்தில் ஆறாவது இடம்தான் கடன், நோய், எதிரி மற்றும் வழக்குகளைப் பற்றிச் சொல்லும் பாவகமாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் ஆறு வாரங்கள் அல்லது சதுர்த்தி திதிகளில் கடன் தீர்க்கும் கணபதிக்கு பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லக் காரணம் குறிப்பிட்ட 6ம் ஸ்தானம் பாவக்கிரஹங்களின் ஆதிக்கத்தில் இருப்பதுதான். ஆறுமுறை வழிபடுவதால் படிப்படியாகக் கடன்சுமை குறைந்து மகிழ்ச்சி அடையலாம்.
பண்டை நாட்களில் அரசர்கள், சத்ரு மற்றும் ருணரோக நிவாரண ரட்சைகளைக் கட்டிக்கொண்டு நலம் பெற்றார்கள்.
அதேபோல சாதாரண மனிதர்களும் எளிய முறையில் ருணரோக நிவாரண ரட்சைகளை செய்து கைகளில் அணிந்து கொள்ளலாம். ரட்சை என்றால் உயிரைக் காப்பது என்று பொருள். இது சாதாரண வண்ணக் கயிறு போன்று இன்று பல இடங்களில் முறையற்ற வகையில் விற்கப்படுகிறது. 3x3 அளவுள்ள தாமிரத் தகட்டில், பலன் வேண்டி எந்தக் கடவுளை பூஜை செய்கிறோமோ, அந்தக் கடவுளின் பீஜாட்சரத்தை எழுதி, அதில் 16 முடிச்சுகள், 7 முடிச்சுகள் இட்ட சிவப்பு அல்லது பஞ்சவர்ணக் கயிறை வைத்து பூஜை செய்து ஒரு வட்டமான டப்பாவில் வைத்து பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும்.
பிறகு, வெளியே செல்லும்போது கயிறைக் கையில் கட்டிக்கொண்டு செல்வது முறை. இப்படியாக ரட்சையைச் செய்து அறுகம்புல், செவ்வரளி, வில்வம் மற்றும் முல்லை மலரால் அர்ச்சனை செய்து வந்தால் கடன், நோய், எதிரி மற்றும் வழக்கு போன்ற எப்படிப்பட்ட பிரச்சனையையும் சமாளித்து நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.
No comments:
Post a Comment