Thursday, 7 September 2017

முருகன், திருஞானசம்பந்தர், சண்டிகேஸ்வரரும் பிள்ளையார்தான்


சிவபெருமானுக்கு மூத்தப்பிள்ளையானதால் நமது கணபதியை மூத்த பிள்ளையார் என்று அழைப்பார்கள். 

இரண்டாவது பிள்ளையான முருகப்பெருமான் இளைய பிள்ளையார், எனவும் கூறப்படுவார். 

இதுதவிர திருஞானச் சம்பந்தரையும் பிள்ளையார் என்று கூறுவார் இதற்கு காரணம், சீர்காழியில் குளக்கரையில் குழந்தையாக இருந்த ஞானசம்பந்தர் உமையம்மையிடம் ஞானப்பால் அருந்தியதால் அவரை காழிப்பிள்ளையார் என்றும் அழைப்பர். 

சிவபெருமான் மீது வைத்திருந்த பக்தியின் காரணமாக, சிவபெருமானை நிந்தனை செய்த தனது தந்தையின் கால்களை மழுவால் வெட்டிய சண்டிகேஸ்வரரை சேய்ஞலுப் பிள்ளையார் என்றும் அழைப்பர். 

இந்த நான்கு பிள்ளையார்களையும் வழிபட்டால் சிவ, சக்தியின் பரிபூரண ஆசியினைப் பெறலாம்.

No comments:

Post a Comment