Saturday, 2 September 2017

நந்திக்கு பதில், அனுமன் கைகூப்பிய படி சிவபெருமான் முன் நிற்கும் அதிசம் மிக்க திருத்தலம்


ராமபிரான் சிவ பூஜை செய்வதற்காக, அவரது பக்தர் அனுமன் காசியில் இருந்து சிவ லிங்கத்தை பைரவரின் அனுமதி இன்றி எடுத்து வந்துவிட்டார். பைரவர் அனுமனுக்கு பாடம் புகட்ட ஆடு மேய்க்கும் கோலத்துடன் பூண்டு ராமகிரி என்ற ஊரில் (ராமகிரி என்ற ஊர் திருவள்ளூரில் இருந்து ஊத்துக் கோட்டை வழியாக திருப்பதி செல்லும் பாதையில் உள்ளது.) அனுமனுக்காக காத்துக் கொண்டிருந்தார். 

அந்த இடத்தை அனுமன் கடக்க முற்படுமபோது அனுமனுக்கு தீராத தாகம் ஏற்படச் செய்தார். லிங்கத்தை கீழே வைக்கக்கூடாது என்பதால் ஆடுமேய்பவனாக இருந்த பைரவரிடம் லிங்கத்தை கொடுத்து தாகசாந்தி செய்து கொள்ளச் சென்றார்.. 

பைரவர் லிங்கத்தை சட்டென கீழே வைத்துவிட்டார். 

கோபப்பட்ட அனுமன் எப்படியாவது சிவலிங்கத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தனது வாலில் சுழற்றி லிங்கத்தை பெயர்த்து எடுக்க முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது, அதனால் லிங்கத்தின் மீது வால் பதிந்த தடமும் லிங்கம் சற்றே சாய்ந்தும் காணப்படும்.. 

லிங்கத்தின் முன் நந்திக்கிப் பதிலாக அனுமன் கூப்பிய கரங்களடன் காட்சிதருகிறார்.. மரகதவல்லி சமேத வாலீஸ்வரனாக ஈசன் காட்சி தருகிறார்.. 

பைரவர் ஆடுமேய்க்கும் கோலமாக கோலை தோளின் இருபுறம் தாங்கி பிரதான சன்னதியில் காட்சி தருகிறார்.. இங்கு பிரதோஷவழிபாடு கிடையாது.. தேய்பிறை அஷ்டமி மிகுந்த விஷேஷம்.. 

இங்குதான் நந்தியின் வாயில் இருந்து வற்றாத ஊற்றாக தண்ணீர் விழுகிறது.. தண்ணீர் மிகுந்த சுவையுள்ளது.. ராமகாரியத்தின் பொருட்டு இங்கு நிகழ்வு நிகழ்ந்ததால் மலை சூழ்ந்த இந்த இடம் ராமகிரி என்று அழைக்கப் படுகிறது... 

இத்தலம் சிவபெருமான் தலமாக இருந்தாலும், பைரவர் வழிபாட்டிற்கு மிகுந்த பலன் தரக்கூடிய தலமாக இருக்கிறது.

No comments:

Post a Comment