Monday, 11 September 2017

போனாலும் வந்துவிடுவேன்!


ஸ்ரீரங்கத்தில் வசித்தவர் சொட்டை நம்பி. இவருக்கு ரங்கநாதர் மீது <<உயிர். அவரது இறுதிக்காலம் நெருங்கியது. சிஷ்யர்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். ஒரு சிஷ்யர் அவரிடம், ""இப்போது உங்கள் மனதில் என்ன நினைப்பு ஓடுகிறது?'' என்றார். அதற்கு அவர்,""நான் மோட்சத்தைக் கட்டாயம் அடைந்துவிடுவேன். திரும்பி வர இயலாத அளவுக்குரிய உ<றுதியான நிலையைப் பெறுவேன். வைகுண்டத்திற்கு நிச்சயம் போவேன். அங்கே இருக்கும் பரமாத்மாவை (திருமால்) பார்ப்பேன். அவர் மட்டும், நம் ஊரிலுள்ள ரங்கநாதரைப் போல் இல்லாவிட்டால், வைகுண்டமே வேண்டாமென்று வந்துவிடுவேன்,'' என்றார்.

ரங்கநாதரின் அழகைச் சுவைத்துப் பருகியவர்களில் ஒருவர் சொட்டைநம்பி. இவரைப் போலலே தொண்டரடி பொடியாழ்வாரும் பாடல் ஒன்றில், ரங்கநாதர் தரிசனம் இல்லாத லோகம் தனக்குத் தேவையில்லை என்கிறார்."பச்சைமால் மலைபோல் மேனி' என்ற பாடலில் "இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண் டேன் அரங்கமாநகருளானே' என்கிறார். ரங்கநாதரைத் தரிசிக்கும் பாக்கியத்திற்குப் பதிலாக, இந்திரலோக ஆட்சியை தன்னிடம் ஒப்படைத்தாலும் அது தேவையில்லை என்பது அவரது கருத்து.

நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா!

மகாபாரத ஆசிரியர் வியாசர் ஒரு சமயம் மிகுந்த கவலையுடன், ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தார். அப்போது, நாரதர் அங்கு வந்தார்.

""வியாசமுனிவரே! மிகுந்த கவலையுடன் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களே! சிந்தனை ஆபத்தான விஷயம். சிந்தனையை விட சிதையே தேவலை. (சிதை என்றால் இறந்தவர்களை எரிப்பதற்காக படுக்க வைக்கும் விறகு, விராட்டி படுக்கை) ஏனெனில், சிதை <உயிரற்ற உடலைத்தான் எரிக்கும். சிந்தையோ உயிருள்ள <உடலையே எரித்து விடும். இப்படிப்பட்ட சிந்தனைக்கு நீங்கள் என்றைக்குமே இடம் கொடுக்கக்கூடாது. சிந்தித்து சிந்தித்து கவலைப்படுவதால் என்னாகி விடப் போகிறது! இந்த கவலை சிந்தனை நீங்க வேண்டுமென்றால், கிருஷ்ணனைப் பிரார்த்திக்க வேண்டும். நீங்கள் அவனைப் பற்றி பாரதத்தில் எழுதியது கொஞ்சம் தான். அவனது பாலபருவம் முதலே எழுதுங்களேன்,'' என்றார்.

வியாசரும் நாரதரின் வார்த்தைகளில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டு பகவான் கிருஷ்ணரின் லீலைகளை எழுத ஆரம்பித்தார். அவ்வாறு உருவான நூல் தான் ஸ்ரீமத் பாகவதம்

No comments:

Post a Comment