1. சிவனுக்கு( பரம்பொருளுக்கும் அவரை பற்றுக் கோடாக கொண்டு வழிபடும் சிவனடியார்களுக்கும்) யான் அடியார் என்று எண்ணி எண்ணி மகிழ்பவன் உண்மையான சிவனடியார்.
2. தனக்கு உகந்ததை ( தன்னால் தன் சக்திக்கேற்றவாறு இருப்பதை கொடுப்பவன்) சிவனுக்கு படைத்து மகிழ்பவன் உண்மையான சிவனடியார்.
3. சிவனுக்கு உகந்ததை( சிவச்சின்னங்கள், திருவைந்தெழுத்து மந்திரம், உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களையும் சிவமாகவே பார்க்கும் தன்மை) தானும் உகந்து மகிழ்பவன் உண்மையான சிவனடியார்.
4. அண்டசராசரத்தை ( தனு, கரண,புவண,போகம்) படைத்து அதில் இன்புற வாழ, என்னையும் ( மனிதப்பிறவி கொடுத்து) படைத்தான் என்பதை இன்புறும் போதெல்லாம் மறவாது நினைப்பவன் சிவனடியார்.
5. சிவபெருமான் மட்டுமே தனக்கு வேண்டியதை வேண்டாமலே கொடுக்க வல்லவன் என்பதை உணர்ந்து வாழ்பவன் சிவனடியார்.
6. சிவனிடம் தான் பெற்றதை ( யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பது போல) பிறருக்கு கொடுத்து மகிழ்பவன் சிவனடியார்.
7. பிறருக்கு தான் ( தானமாக) கொடுத்ததை, சிவன் கொடுத்ததே என்றுஎண்ணி அவரிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என எதிர்பாராது இருப்பவன் சிவனடியார்.
8. துன்பங்களும், நோய்களும் தன்னை சூழ்ந்த வினைகளை போக்க வந்தவை என்று உணர்ந்து அனுபவித்து வினைகளை அகற்ற வல்லவன் சிவனடியார்.
9. தனக்கு துன்பம் தரும் காரணிகள் யாவும், பிறரால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. தன்னாலே வரவழைக்கப்பட்டது என்று உணர்பவன் சிவனடியார்.
10. தான் இன்புற தடைஏதும் விதிக்காதவன் சிவன் என நம்புபவன் சிவனடியார்.
11. இன்புறலும், துன்புறலும் தன் ஆன்மாவை சிவனடிக்கு இழுத்து சொல்லும் இரட்டை மாடுகள் என உணர்ந்து ஒவ்வொரு அனுபவத்திலும் தன் வினை அகன்று போவதை அறிந்து நொடிக்கு நொடி அதிகரிக்கும் ஆனந்தத்தொடு ( இன்பமாக) வாழ்பவன் சிவனடியார்.
12. தானே சிவமாக சிவானந்த பேரின்பத்தில் மூழ்கி இருந்தாலும் சிவனொருவன் மட்டுமே எல்லாம் தர வல்லவன் என்பதை மறவாது இருப்பவன் சிவனடியார்.
13. தன்னால் ஆக வேண்டியது என சிவனார் பணித்த ( தன்னை கருவியாக நினைத்து) தன் பிரபஞ்ச கடன் மட்டுமே தன்னாலாகும் என உணர்ந்து நடப்பவன் சிவனடியார்.
14. சிவனை நாட, தடை ஏதும் சொல்லாதிருப்பவன் சிவனடியார்.
15. சிவனால் ஆகும் பிரபஞ்ச ( உலகத்தில் இயங்கும் பொருள்கள் எல்லாம்) செயல்களை பார்த்து, ரசித்து மகிழ்பவன் சிவனடியார்.
16. தனக்கென ஒரு பிரபஞ்ச கடனை ( உலகத்தில் மனிதனாக பிறக்க வைத்து தனது கடமைகளை சரிவர செய்வதற்காக) தந்து, தன் பணியில் என்னையும் இணைத்துக் கொண்டானே அந்த சிவன் என எண்ணி அளித்த பிறவியை ( மானிடப் பிறவியை சிவமாகவே வாழ்ந்தோமே என்று) வியந்து போற்றி வாழ்பவன் சிவனடியார்
17.உண்மையான சிவனடியார் சிவபெருமானுக்கும் அவரை பற்றுக் கோடாக கொண்டு வழிபடும் சிவனடியார்களுக்கும் தேவை அறிந்து தொண்டு செய்பவனே சிவனடியார் ஆவார்
18.எல்லாம் பரம்பொருள் ( சிவபெருமான்) கொடுத்தது என்று எண்ணி எல்லா உயிர்களிடத்தும் உண்மையான அன்பு செலுத்துபவனே சிவனடியார் ஆவார்
19. என்னால் நடப்பது ஒன்றுமில்லை எல்லாம் சிவபெருமானால் நடத்தப்படுகிறது என்று நினைப்பவன் சிவனடியார் ஆவார்
20. சிவபெருமானிடத்தும் ,சிவனடியார்களிடத்தும் உண்மையாக உள்ளன்போடு தொண்டு செய்து வாழ்பவனே உண்மையான சிவனடியார் ஆவார்
No comments:
Post a Comment