குலதெய்வத்திற்கு விரதம் இருந்து வணங்கி வந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் காணலாம்.
குலதெய்வங்களுக்கு விரதம் இருக்கும் முறை
வாழ்வில் சில எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் அவர்களின் குலதெய்வத்தை அறிந்து அதற்கு விரதம் இருந்து வணங்கி வந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் காணலாம்.
பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபுரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.
குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது. அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.
No comments:
Post a Comment