சூரியன் அல்லது சந்திரன் மீது பூமியின் நிழல் படர்ந்து மறைக்கப்படுவதை கிரகணம் என்கிறோம். கிரகண காலத்தில் கட்டாயம் குளிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
சூரியன் அல்லது சந்திரன் மீது பூமியின் நிழல் படர்ந்து மறைக்கப்படுவதை கிரகணம் என்கிறோம். சூரிய, சந்திர ஒளி இல்லையேல் பகல், இரவு என்னும் காலங்கள் இல்லை.
மழை பெய்யாது. பயிர்கள் விளையாது. பூமி மற்றும் அதில் வாழும் உயிர்கள், அவற்றின் உணவுப் பொருட்கள் எல்லாமே சூரிய சந்திர ஒளிக்கதிர்களினால் அன்றாடம் தமக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன.
இப்படி இறையருளால் இயற்கையாக நமக்குக் கிடைக்கும் சூரிய சந்திரர்களின் இயல்பான ஒளி மறைக்கப்பட்டு குறிப்பிட்ட நாழிகை அவற்றின் கிரகண கால ஒளி, பூமி மற்றும் அதில் உள்ள எல்லாவற்றின் மீதும் படுகிறது. இதனால் 'மஹா ஸ்பரிசம்' என்னும் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இன்றைய விஞ்ஞானிகளும் கிரகணத்தினால் சில மாறுபாடுகள் ஏற்படுவதையும் நேரடியாகக் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் கூறுகின்றனர். எனவே இந்த தோஷம் நீங்குவதற்காக கிரகணம் விட்ட பிறகு தலைக்கு குளித்து, விபூதி குங்குமம் இட்டுக் கொண்டு இறைவழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment