இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அங்கு ‘கணேஷ் சதுர்த்தி’ என்று சிறப்பான அளவில் மிகப் பிரமாண்டமாக விநாயகர் வழிபாட்டை கொண்டாடுவார்கள். பத்து நாட்களுக்கும் மேலாக பக்திப்பரவசத்தில் மகாராஷ்டிரா மாநிலம் மிதக்கும் என்றால் அது மிகையல்ல.
இந்த மாநில மக்களைப் பொறுத்தவரை, விநாயகப் பெருமான் குலதெய்வமாகவும், வெற்றிதரும் கடவுளாகவும் போற்றப்படுகிறார். இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோவிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். ‘மங்கல்வார்’ என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளான மக்கள் விநாயகர் கோவிலுக்குச் செல்வார்கள்.
கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய பிரசாத வகைகளோடு, வடநாட்டுக்கே உரிய பர்பி, லட்டு, பால்பேடா போன்றவற்றையும் நிவேதனமாகப் படைப்பார்கள். கடைசி நாளில் ‘கணபதி பப்பா மோரியா’ என்னும் கோஷம் எழுப்பி, விநாயகரை வழியனுப்புவது விழாவின் உச்சகட்டமாகும்.
No comments:
Post a Comment