Sunday 18 March 2018

பாதம் பதித்த மண்டபம்


திருப்பதி மலை அடிவாரத்தை 'அலிபிரி' என்பர். இங்கு புளியமரம் ஒன்று இருந்ததால் 'புளியடி' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. அதுவே 'அலிபிரி' என்றாகி விட்டது. 

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அலிபிரியில் இருந்து மலையேறுவர். இப்பாதைக்கு 'சோபன மார்க்கம்' என்று பெயர். மலைப்பாதையில் முதலில் தரிசிக்க வேண்டிய இடம் ஸ்ரீபாதமண்டபம். ஒருமுறை ராமாயணம் கேட்பதற்காக அடிவாரம் வந்த திருமலைநம்பி, நேரம் போவதே தெரியாமல் மதியம் வரை இருந்து விட்டார். உச்சிக்கால பூஜை நேரமாகி விட்டதால், மலைக்கு எப்படி செல்வது என்று பதட்டப்பட்டார். அப்போது பெருமாளே மலையில் இருந்து கீழே இறங்கி வந்து ஓரிடத்தில் காட்சியளித்தார். அவர் பாதம் பதிந்த இடமே 'ஸ்ரீபாத மண்டபம்' எனப்படுகிறது. தற்போது இது பெருமாள் கோயிலாக உள்ளது. 

No comments:

Post a Comment