Sunday 18 March 2018

தாலாட்டு பாட நீராடுங்க


கிரகங்களில் புதனுக்குரிய தலம் திருவெண்காடு. இங்கு சிவன் சுவேதாரண்யேஸ்வரர் என்னும் பெயரில் உள்ளார். அம்பாளுக்கு பிரம்ம வித்யாம்பிகை என்று பெயர். இந்திரனின் வாகனமான வெள்ளை யானை ஐராவதம், சிவனை வழிபட்ட தலம் இது. இங்குள்ள முக்குளங்களான சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களில் நீராடி சுவாமியை வழிபட்டால் நல்ல குழந்தைகள் பிறக்கும். 'முக்குளத்தில் நீராடுவோரை தீவினைகள் நெருங்குவதில்லை' என சம்பந்தர் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதி மக்கள், 'முக்குளத்தில் ஆடி முத்தி பெற வந்தானோ?' என்று தாலாட்டு பாடும் வழக்கம் இருக்கிறது.

No comments:

Post a Comment