Tuesday, 13 March 2018

பிரமோற்சவம் - விளக்கம்

பிரமோற்சவம் - விளக்கம்

ஒவ்வொரு ஆலயங்களிலும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை, பிரமோற்சவம் என்று அழைப்பது வழக்கம். பிரம்மதேவன், ஒவ்வொரு கோவிலிலும், முன்னின்று திருவிழாவை நடத்துவதால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரமோற்சவம் சிறப்பு வாய்ந்தது. 

இந்த விழாவின் போது சுவாமி பவனி வரும் முன்பாக, ஒரு சிறிய தேர் வரும். பிரம்மனுக்கு வழிபாடு கிடையாது என்பதால், தேரில் அவருக்குரிய சிலை இருக்காது. ஆனால் பிரம்மதேவன் உருவமற்ற நிலையில் விழாவை மேற்பார்வையிட வருவதாக ஐதீகம்.

No comments:

Post a Comment