19-ந்தேதி (செவ்வாய்) :
* சஷ்டி விரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் உற்சவம் ஆரம்பம், சுவாமி தங்கப் பூங்கோவிலிலும், அம்பாள் சப்பரத்திலும் பவனி.
* மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை உற்சவம் தொடக்கம்.
* சிதம்பரம் நடராஜ பெருமான் திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (புதன்) :
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் நடேசர் அன்னாபிஷேகம், ஆனி உத்திர அபிஷேகம், நடராஜர் அபிஷேகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் பவனி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* சிதம்பரம் நடராஜர் கோவில், ஆவுடையார் கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
* கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.
21-ந்தேதி (வியாழன்) :
* திருநெல்வேலி நெல்லையப்பர் தங்க பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
* ராஜபாளையம் சமீபம் பெத்தவ நல்லூர் மயூரநாதர் பவனி.
* மதுரை மீனாட்சி ஆலயம், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (வெள்ளி) :
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காலை சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா, இரவு வெள்ளி விருட்ச சேவை.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* கானாடுகாத்தான், திருக்கோளக்குடி ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
* மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை.
* சமநோக்கு நாள்.
23-ந்தேதி (சனி) :
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் வருசாபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ஆனி உற்சவம் ஆரம்பம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் காலை சுவாமி-அம்பாள் வெள்ளி விருட்ச சேவை, இரவு இந்திர விமானத்தில் வீதி உலா.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
24-ந் தேதி (ஞாயிறு) :
* சர்வ ஏகாதசி.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
25-ந்தேதி (திங்கள்) :
* பிரதோஷம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி பல்லக்கிலும், அம்பாள் தவழ்ந்த திருக்கோலமாய் முத்துப் பல்லக்கிலும் பவனி.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் சந்திர பிரபையிலும் புறப்பாடு.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
No comments:
Post a Comment