குருவும் அவருடைய சீடர்களும் ஆற்றங்கரையோரம் பேசிக் கொண்டே சென்றனர்.
ஒரு சீடன் கேட்டான், ''குருவே, நீங்கள் சிறந்த போர் வீரராக இருந்ததாக மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம் தானா?''
''ஆம்...ஆனால் அதெல்லாம் அந்தக்காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டேன்''
''ஏன் குருவே? போர்புரிவது தவறா… ஆயுதம் கூடாதா?''
''புத்திக் கூர்மை, அமைதியை விட சிறந்த ஆயுதம் வேறில்லை”
குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கையில்லை. அவரை சோதித்துப் பார்க்க திட்டமிட்டனர்.
''நாளை மாலையில் குரு தியானத்தில் இருக்கும் போது, இருவரும் மறைந்து நின்று அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதம் எடுக்காமல் நம்மை எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம்'' என்று முடிவு செய்தனர்.
மறுநாள் வகுப்புகள் முடிந்தது. குரு தியானத்தில் அமர்ந்தார். இரு சீடர்கள் அவருக்கு தெரியாமல், பின்புறம் ஒளிந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்து, பேசி வைத்தபடி குருவின் இரு பக்கமிருந்து தாக்குவதற்காக நெருங்கினர்.
குரு முகத்தில் சலனம் ஏதுமில்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும் வரை அமைதி காத்த குரு, கடைசி விநாடியில் சட்டென்று குனிந்தார். இருவரும் தங்களுக்குள் 'மடேர்' என்று மோதி தரையில் உருண்டனர். எழ முயன்ற சீடர்களிடம், ''மற்றவரை சோதிக்க வேண்டாம். விரும்பினால், உங்களையே சோதித்து பாருங்கள், அது சாதனைக்கு வழிவகுக்கும்!
No comments:
Post a Comment