Sunday, 17 June 2018

ஆணவம் அகன்றது


தன்னை ஏமாற்ற முடியாது என ஆணவம் கொண்டிருந்தான் திருடன் ஒருவன். ஒருநாள் கொள்ளையடித்து விட்டு வந்த அவன், களைத்து போயிருந்தான். வழியில் தென்பட்ட, குளக்கரையில் நின்றான். திருடனை அடிக்கடி காட்டுப் பாதையில், நோட்டமிட்ட சிறுவன் ஒருவன், குளத்தில் ஏதோ தேடுவது போல நடித்தான்.

திருடன், “தம்பி....என்ன தேடுகிறாய்?” என கேட்டான். ''என் புது மோதிரம் நீரில் விழுந்து விட்டது” என்று அழுதான். அதை நம்பிய திருடன், அபகரிக்க திட்டமிட்டான்.

“தம்பி... கவலைப்படாதே! நானே தேடி தருகிறேன்” என்று சொல்லி, தன்னிடம் உள்ள நகை பொட்டலத்தை சிறுவனிடம் கொடுத்து விட்டு, தேட ஆரம்பித்தான். கண் சிமிட்டும் நேரத்திற்குள் சிறுவன் காட்டுக்குள் ஓடி மறைந்தான். எங்கு தேடியும் சிறுவனைக் காணவில்லை. 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' என்பதை உணர்ந்த திருடனின் ஆணவம் மறைந்தது.

No comments:

Post a Comment