
இந்தியாவில் சக்திதேவிக்கு பல கோயில்கள் இருந்தாலும், 51 கோயில்கள் "சக்தி பீடங்கள்' என்ற பெயரால் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. புராணங்களின்படி, தட்சன் என்பவனுக்கு மகளாக அம்பாள் பிறந்தாள். அவளது பெயர் தாட்சாயணி. அவளைச் சிவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான் தட்சன். அகம்பாவம் மிக்க அவன், தன் மருமகனையே ஒதுக்கி வைத்து விட்டு யாகம் ஒன்றை நடத்தினான். அதைத் தடுக்கச் சென்ற அம்பாளை அவமானப்படுத்தினான். கணவரின் விருப்பமின்றி யாகத்திற்கு சென்ற அம்பாள், அங்கிருந்த யாககுண்டத்தில் குதித்தாள். சிவன் கோபத்துடன் அங்கு வந்து வெடித்த உடலை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அம்பாளின் உடல்பகுதிகள் 51 இடங்களில் விழுந்தன. அவ்வாறு விழுந்த இடங்களில் அவளுக்கு கோயில் எழுந்ததாக வரலாறு. மற்றொரு கருத்துப்படி "க' முதல்"க்ஷ' வரை 51அட்சரங்கள் (எழுத்து) உள்ளன. இவற்றை பீஜாட்சர மந்திரம் என்றும் சொல்வர். அம்பாளுக்கு "அட்சர சுந்தரி' என்ற பெயரும் உண்டு. இந்த அட்சரங்களின் அடிப்படையில் இந்தக் கோயில்கள் எழுந்ததாகச் சொல்வர். தமிழகத்தில் 18 சக்தி பீடங்களும், மற்ற 33 பீடங்கள் பிறமாநிலங்களிலும் உள்ளன.
No comments:
Post a Comment