Thursday, 14 September 2017

நந்தி தலங்கள்


பெரிய நந்தி தலம்- திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் (இங்கு தான் தமிழகத்தின் மிகப்பெரிய நந்தி உள்ளது)
நந்தி கொம்பு ஒடிந்த தலம்- திருவெண்பாக்கம்
நந்தியின் திருமணத்தலம்- திருமழப்பாடி
நந்தி விலகியுள்ள தலங்கள்- திருப்புங்கூர், திருப்பூந்துருத்தி, பட்டீஸ்வரம், கீழ்வேளூர். 
இந்தத் தலங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ளன.

மேலே இருக்குது விநாயகரின் முகம்
ஐந்து முக விநாயகர் பல இடங்களில் இருக்கிறார். பொதுவில்  இவரது ஐந்து முகமும் வரிசையாகத் தான் காணப்படும். ஆனால், நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோயிலில், நான்கு முகம் மேலேயும், ஒரு முகம் நேராகவும் காட்சி அளிக்கிறது. மூஞ்சூறுக்கு பதிலாக இவருக்கு சிம்ம வாகனம்  தரப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment