இந்தியாவில் அம்பாளுக்கு பல இடங்களில் கோவில் இருந்தாலும், திருவையாறு செல்லும் வழியில் உள்ள உமையாள் புரத்தில் உள்ள அம்மன் சன்னதியின் வரலாறு சுவாரஸ்யமானது.
பிரம்ம தேவர் சிவபெருமானை சந்திப்பதற்கு கைலாயம் சென்றார், அப்போது அங்கிருந்த முருகப்பெருமானை கவனிக்காமல் பிரம்ம தேவர் சென்றதால் முருகப்பெருமான் கோபங் கொண்டு, அவரிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை கேட்டார், தெரியாமல் விழித்த பிரம்மாவிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார்.
இதனால் பூலோகத்தில் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டபோது, சிவபெருமான் முருகனிடம் சென்று பிரம்மாவை விடுவிக்க சொன்னார். சிவபெருமானுக்கும் பிரணவ மந்திரத்தின் விளக்கம் தெரியவில்லை.
தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உரைக்க முருகன் குருவாக சுவாமிமலையில் காட்சி தந்தார், அவ்வாறு பிள்ளையை குருவாக ஏற்று உபதேசம் பெற சுவாமிமலைக்கு சிவபெருமான் வரும்போது, அவருடன் பார்வதி தேவியும் உடன் வந்தார்.
உபதேசம் பெற செல்லும் போது அம்பாளை ஒரு இடத்தில் தங்க வைத்து சிவபெருமான் மட்டும் சுவாமிமலைக்கு சென்று முருகப்பெருமானிடம் உபதேசம் பெற சென்றார். அவ்வாறு அம்பாள் தங்கிய இடம்தான் உமையாள்புரம்.
No comments:
Post a Comment