சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலையில் திருமணம் நடைபெறும் சமயம், எல்லா தெய்வங்களும் கயிலாயத்தில் குவிந்ததால் பாரத்தை தாங்கமுடியாடியமல் வடதிசை தாழ்ந்து தென்திசைஉயர்ந்தது. இதை சமன்படுத்த எண்ணிய சிவபெருமான், அகத்தியரை தென்திசைநோக்கி செல்லுமாறு கூறினார்.
அகத்தியர் தென்திசையில் பயணம்செய்த சமயத்தில் பாபநாசத்தில் மணக்கோலத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் அகத்தியருக்கு காட்சியளித்தனர்.
மிகவும் மகிழ்ந்த அகத்தியர், வயல்வெளிகளாலால் சூழப்பட்ட நெல்லையில் மணக்கோலத்தில் காட்சி தந்த சிவபெருமானும் பார்வதியும் தங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இறைவனும் அக்கோரிக்கையை ஏற்றார். அந்தக்கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றாக திகழ்கிறது. பஞ்ச சபைகளில் இது தாமிர சபையாகும். இங்கு அம்பாளுக்கு காந்திமதி என்று பெயர். காந்தி என்றால் ஒளி என்று பொருள், அம்பிகையின் முகம் ஒளிமிக்கதாய் இருப்பதால் இதற்கு காந்தி பீடம் என்றும் சொல்வார்கள்.
திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் காட்சி தந்ததால் அம்பாளின் முகத்தில் மணப்பெண்ணுக்குரிய வசிகரம் இன்றும் தெரிவது இக்கோவிலின் சிறப்பு.
புதுமணத் தம்பதிகள் இக்கோயிலில் வழிபாடு மேற்கொண்டால் தங்களது வாழ்க்கை பிரகாசமாக அமையும்.
No comments:
Post a Comment