Tuesday 19 September 2017

தமிழகத்தில் வசித்த ஐயப்பனின் முன்னோர்


ஐயப்பனின் முன்னோர் தமிழகத்தில் வாழ்ந்தனர். இவர்கள் செம்பழஞ்ஞி குடும்பத்தினர் என அழைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தான் இக்குடும்பம் வசித்து வந்தது. செல்வாக்கு மிக்க இக்குடும்பத்தை தஞ்சையை ஆண்ட சோழமன்னர்கள் புறக்கணித்ததோடு போரும் தொடுத்தனர். பகைமை விரும்பாத செம்பழஞ்ஞி குடும்பமும் தென்காசிப்பகுதியில் குடிபுகுந்தது. ஆனாலும், பகைமன்னர்கள் விட்டுவிடுவதாக இல்லை. மீண்டும் விரட்டினர். சிறிது காலத்திற்குப் பின், கேரளாவில் உள்ள கோந்தி என்னும் இடத்தில் குடியேறினர். அங்கேயும் சோழனின் நெருக்கடி தொடர்ந்தது. பாதுகாப்புக்காக பந்தளம் வந்து சேர்ந்தனர். பந்தளத்தில் இவர்களை பந்தளராஜா குடும்பத்தினர் என்று மக்கள் அழைத்தனர். அப்பெயர் இன்றும் ஐயப்பசுவாமிக்கு இருப்பதை அறியலாம். தங்கள் பகுதியான தென்காசி முதல் கோந்திவரையில் உள்ள பகுதியில் தங்களின் உரிமையை நிலைநாட்டிட விரும்பினர். இந்த சந்தர்ப்பத்தில் உதயணன் என்ற கொள்ளைக்காரனின் அட்டகாசமும் இப்பகுதியில் அதிகரித்து வந்தது. இந்த அடக்குமுறைக்கு முடிவுகட்டிட மணிகண்டன் அவதரித்தார். உதயணனை வென்றதோடு, கோட்டை கொத்தளங்களை அமைத்து பந்தளநாட்டைப் பலப்படுத்தினார். எரிமேலி முதல் சபரிமலை வரையிலுள்ள பகுதி இன்றும் ஐயப்பனின் சாம்ராஜ்ஜியமாகத் திகழ்கிறது.

தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. டவுன்லோடு செய்யுங்கள் ! பயன்பெறுங்கள் !!

https://play.google.com/store/apps/details?id=com.wTNBUSBOOKING_5632636

No comments:

Post a Comment