Monday, 18 September 2017

வீரமாமுனிவரின் தேம்பாவணி

Image result for வீரமாமுனிவரின்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டாண்ட்டைன் பெஸ்கி என்னும் கிறிஸ்தவ போதகர், 16ம் நூற்றாண்டில் மதுரை  நகருக்கு வருகை புரிந்தார். சுப்ர தீபக் கவிராயரிடம் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டார். இவரை "வீரமா முனிவர்' என்று அழைத்தனர். "தைரியநாதசுவாமி' என்ற பெயரும் இவருக்கு உண்டு. தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தம் செய்த பெருமை இவருக்குரியது. தேம்பாவணி என்னும் காப்பியத்தை இவர் எழுதினார். மூன்று காண்டங்களையும், 36 படலங்களையும், 3615 பாடல்களையும் கொண்ட இந்நூலில் இயேசுநாதரின் தந்தையான சூசையப்பரின் வரலாறு கூறப்படுகிறது. சதுரகராதி என்னும் அருஞ்சொல் விளக்க நூல் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார். இதுதவிர, வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம், வாமன் கதை, பரமார்த்த குருகதை, இலக்கண நூலான தொன்னூல் விளக்கம், செய்யுள் நூல்களான திருக்காவலூர் கலம்பகம், அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரி அம்மாள் அம்மானை ஆகியவையும் இவரால் எழுதப்பட்டவை.

தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. டவுன்லோடு செய்யுங்கள் ! பயன்பெறுங்கள் !!

https://play.google.com/store/apps/details?id=com.wTNBUSBOOKING_5632636

No comments:

Post a Comment