Friday, 15 September 2017

பிரசாதத்திற்காக அடித்துக் கொள்ளாதீர்கள்

Image result for பிரசாதம்

சாதம் என்றால் சாதாரண சோறு. "ப்ர' என்றால் "தெய்வம்'. கடவுளுக்கு படைத்த சோறு என்பதையே "ப்ரசாதம்' என்கிறோம். இறைவனுக்கு படைத்த பிரசாதத்தை சிலர் வேண்டாம் என்கிறார்கள். சிலர் பிரசாதத்துக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

தெய்வங்கள் மனிதனைப் போல் நேரடியாக உணவை ஏற்பதில்லை. அவர்களின் பார்வை மட்டுமே அதில் படுகிறது. இதை சமஸ்கிருதத்தில் "த்ருஷ்டி போக்' என்பர். "கண்ணொளிபட்டது' என்பது இதன் பொருள். தெய்வத்தின் கண்ணொளி பட்ட பொருள் புனிதத்தன்மை அடைகிறது. இதைச் சாப்பிடுபவர்களின் மனம் தூய்மையடைகிறது. உள்ளத்தில் பக்தியை உருவாக்குகிறது. எனவே, பிரசாதம் எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் வரிசையில் நின்று உரிய மரியாதையுடன் பெற்றுச் செல்ல வேண்டும். அதைப் பகிர்ந்து சாப்பிடும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment