சபரிமலை ஐயப்பனுக்கு நம்மால் இயன்ற நெய் தேங்காயை மட்டும் நாம் ஆண்டுதோறும் காணிக்கையாக அளிக்கிறோம். அந்தக்காலத்தில் ஐயப்பன் கோயில் போய் திரும்ப வேண்டுமானால், ஒரு மாதம் வரை ஆகிவிடும். எனவே, அவருக்கு படைக்க நெய் பலகாரங்களைக் கொண்டு செல்லும் பழக்கம் இருந்தது. நெய் பலகாரங்கள் நீண்டநாள் கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதால், அதைக் கொண்டு சென்றனர். இப்போதும், அதே வழக்கப்படி நெய் தேங்காய் கொண்டு செல்கிறோம். எத்தனை அபிஷேகங்கள் நடந்தாலும், நெய் அபிஷேகத்திற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. நெய்யே பிரசாதமாக எடுத்து வருகிறோம்.
நமது காணிக்கைகள் மிகவும் எளியவை. ஆனால், ஐயப்பனுக்கு மண்டல பூஜையின் போது அணிவிக்கப்படும் தங்க அங்கியாகிய மாபெரும் காணிக்கையை வழங்கிய மாமன்னர் பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர் தான் சித்திரை திருநாள் மகாராஜா. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் மாமன்னர்.
மண்டல பூஜை சமயத்தில், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரியன் மாறும் நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்படும் நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நெய் திருவிதாங்கூர் அரண்மனை சார்பில் வழங்கப்படுவதாகும். இவ்வழக்கத்தையும் சித்திரை திருநாள் மகாராஜாவே ஏற்படுத்தினார். எனவே இவரைக் கவுரவப்படுத்தும் வகையில், இவரது பிறந்தநாள் சபரிமலையில் முக்கியத்துவம் பெறுகிறது. இவர் ஐப்பசி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த ஜென்ம நட்சத்திரத்தில், இவரது ஐயப்ப சேவையை நினைவு கூறும் வகையில், "சித்திரை ஆட்டத்திருநாள்' என்ற நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படும்.
சபரிமலை நடை மண்டல பூஜைக்காக 41 நாட்களும், மகரவிளக்குக்காக 20 நாட்களும் திறந்திருக்கும். அதுபோல எல்லா தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள், ஓணம் பண்டிகை, கோயில் பிரதிஷ்டை தினம் ஆகிய தினங்களிலும் திறந்திருக் கும். இந்த வரிசையில் சித்திரை ஆட்டத் திருநாளும் இடம் பெற்றிருக்கிறது என்றால் இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக,அன்று மாலையே நடை திறக்கப்படும். சித்திரை ஆட்டத்திருநாளன்று விசேஷ பூஜைகள், அபிஷேகம் நடத்தப்படும். இதில் திருவிதாங்கூர் அரண்மனை பிரதிநிதிகள் கலந்து கொள்வது வழக்கம். காலை நடைதிறந்ததும் கணபதி ஹோமம் நடக்கும். பின்னர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் நெய் பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த இனிய நாளில், இங்கிருந்தபடியே ஐயப்பனை வணங்கி அவர் அருள்பெறுவோமே!
"" இந்த ஆண்டு நவம்பர் 5 தீபாவளி அன்று சித்திரை ஆட்டத்திருநாள் நடக்கிறது. தமிழகத்தில் தீபாவளி நடப்பதால் கூட்டம் குறைவாக@வ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என@வ பக்தர்கள் எவ்வித இடைஞ்சலும் இன்றி ஐயப்பனை தரிசித்து வர வா#ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு தனிநபர் ஐயப்பனுக்கு செய்த சேவைக்காக கொண்டாடப்படுவதே சித்திரை ஆட்டத்திருநாள். ஐயப்பன் கோயில் இதற்காக ஆண்டில் இரண்டு நாட்கள் திறந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்''
No comments:
Post a Comment