Monday 18 September 2017

சாஸ்தாவின் மகன்

Image result for சாஸ்தா

சாஸ்தா என்ற தெய்வம் சபரிமலை ஐயப்பன்  என்பதிலிருந்து வேறுபட்ட அமைப்பு. முதலில் தோன்றிய அவதாரப்புருஷர் சாஸ்தா. பூத நாதனான சாஸ்தா அவதரித்து, சிவபெருமானுடன் கைலாயத்தில் வாழ்ந்தார். சிவபெருமான் அவருக்கு சகல  வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். மகிஷி என்னும் அரக்கியை அழிக்க 12 ஆண்டுகள் மானிடனாகப் பூவுலகில் வாழும் பொருட்டு சிவபெருமான் நல்லாசி வழங்கி அனுப்பி வைத்தார். பூமிக்கு வந்த மானிட ஐயப்பன் பிரம்மசாரி. ஆனால், சாஸ்தாவிற்குப் "பிரப' என்ற மனைவியும் சத்தியன் என்ற மகனும் உண்டு. தர்மசாஸ்தா ஸ்லோகங்களில் பூர்ணா, புஷ்கலா என இரண்டு மனைவிகளோடு அவர் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனால்  ""பூர்னாதவ, புஷ்கலேக பாசஸ்தோதயபக'' என்று "பிரப' என்ற மனைவியின் இரண்டு முகங்கள் தான் பூர்ணவும் புஷ்கலையும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. பரசுராமரால் கேரளத்தைக் காக்கும் தெய்வமாகக் கொண்டு வரப்பட்டவர்தான் சாஸ்தா. 

No comments:

Post a Comment