ஒரு வகுப்பில் ஆசிரியர் ஒரு அசைன்மென்ட் கொடுத்தார். சிலர் நல்லா படிச்சு நெறய மார்க் வாங்கினாங்க. சிலர் படிப்பைப் பற்றி கவலையே படுறதில்லே. அவர்கள் ஏதோ பெயருக்கு மார்க் வாங்கினாங்க. போதாக்குறைக்கு நிறைய மார்க் வாங்கினவங்களைப் பார்த்து பொறாமை வேறு பட்டாங்க! இவங்களும் நல்லா படிச்சு அவங்களை முந்தினா ஆரோக்கியமான போட்டியா இருந்திருக்கும்! அதை விட்டுட்டு, பொறாமைப்பட்டு அவங்களைப் பத்தி தப்பு தப்பா பேசினாங்க! இந்த மாதிரி பசங்களுக்கு ஒரு கதை இருக்கு. படிச்சுட்டு இனியாச்சும் திருந்துங்க. வானரர் தலைவன் சுக்ரீவனின் மனைவியை வாலி கடத்தி வச்சிருந்தான். இதனால், இவங்க எப்போதும் சண்டை போட்டுக்கிட்டே இருந்தாங்க. வாலி பலசாலியாச்சே! அதனால் சுக்ரீவனால் ஏதும் செய்ய முடியவில்லை. அடங்கி ஒடுங்கிக் கிடந்தான். இந்த நேரத்தில், ஆஞ்சநேயர் மூலமாக அவனுக்கு ராமலட்சுமணர் அறிமுகம் கிடைச்சுது. ஒருநாள் வாலிக்கும், சுக்ரீவனுக்கும் கடும் போர் நடந்தது. இதை ராமலட்சுமணர் பார்த்துக் கொண்டிருந்தனர். லட்சுமணன் ராமனிடம், ""அண்ணா! இந்த சகோதரர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களே! இது தீரவே வழியில்லையா?'' என்று கேட்டான். உடனே ராமபிரான், ""எல்லாரும் பரதனைப்போல ஆகி விட முடியுமா? அவனைப் போல் ஒரு தம்பி யாருக்கு கிடைக்க முடியும்?'' என்றார். இதற்காக லட்சுமணன் டென்ஷன் ஆகவில்லை.
அவரும் ராமனுக்கு தம்பி தானே! போதாக்குறைக்கு அவர் கூடவே இருந்து இமை மூடாமல் பாதுகாப்பு கொடுப்பவர். அப்படியிருக்க அண்ணா, எங்கோ இருக்கிற பரதனைப் புகழ்கிறார் என்றால் அவனுக்கு கோபம் வந்திருக்க வேண்டுமே! ஆனால், லட்சுமணன் ""அண்ணா! நீங்க சொல்றது சரி தான். நீங்க இல்லாத நேரத்திலே அயோத்தியைக் கட்டிக்காக்கும் பரதன் தான் <உயர்ந்தவன்,'' என்றான். இந்தக் கதையில் வருவது போல, சகோதரர்கள், நண்பர்கள், அலுவலகப்பணியாளர்கள், தொழிலாளிகள் பொறாமையின்றி இருந்துவிட்டால், சண்டை, சச்சரவுக்கே இடமில்லை. நம்மைச் சார்ந்த யார் முன்னேறினாலும், அவரைப் பாராட்டுவதுடன் அவரை முன்மாதிரியாகக் கொண்டு முன்னேறவும் முயற்சிக்க வேண்டும். புரியுதா!
No comments:
Post a Comment