Friday, 15 September 2017

விஷ்ணுவுக்கும் கங்கைக்கும் என்ன சம்பந்தம்?

Image result for விஷ்ணு

தீபாவளி கதாநாயகனான நரகாசுரன் சத்யபாமாவின் உதவியுடன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான். ஆனால், கங்கையோ சிவனின் தலையில் இருந்து வந்த நதி. எனவே தீபாவளியன்று அநியாயத்தை அழித்த கிருஷ்ணனையும், பாமாவையும் வழிபடுவது சரி. ஆனால், சிவனுடன் சம்பந்தப்படுத்தி, கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகளந்தார். அவர் தன் பாதத்தை மேல் லோகத்துக்கு தூக்கியவுடன், பிரம்மா அந்த பாதங்களுக்கு தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அது ஆகாய கங்கையாகக் கொட்டியது. அது அப்படியே பூமியில் விழுந்தால் உலகம் தாங்காது என்பதால், சிவன் அதைத் தன் தலையில் தாங்கினார். பின்னர், பகீரதனின் கோரிக்கைக்கு இணங்க பூமி தாங்கும் வேகத்தில் இங்கு அனுப்பி வைத்தார். புனிதநீர் எதுவாயினும் அது கங்கையே ஆகும். நம் வீட்டுக்குடத்தில் புனிதநீரிட்டு நூல் சுற்றி மந்திரங்களை ஓதும் போது கங்கை அதற்குள் ஆவாஹனம் ஆகிவிடுகிறது. எனவே, விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் கங்கை தீர்த்தம் சம்பந்தப்படுகிறது. ஆக, பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற முப்பெரும் தெய்வங்களுக்கும் சம்பந்தப்பட்ட கங்கை நதியை நம் வீட்டு தண்ணீரில் ஆவாஹனம் செய்து தீபாவளியன்று நாம் கங்கா ஸ்நானம் செய்கிறோம். 

No comments:

Post a Comment