
பண்டிகைகளிலேயே தீபாவளி தான் மிகச்செலவுடைய திருநாள். புத்தாடை, நகைகள், பட்டாசு, பண்டங்கள் என விழா களைகட்டும். அதனால் தான் குபேரபூஜையை இந்நாளில் நடத்துகிறார்கள். லட்சுமி கடாட்சம் இருந்தால் தீபாவளி செலவு பற்றி கவலையே இல்லை. எனவே, மகாலட்சுமியை தினமும் வழிபட வேண்டும். மகாலட்சுமிக்கு, "மலர் மகள்' என்று சிறப்புப் பெயர் உண்டு. பாலைக் கடைந்தால் மிருதுவான தன்மையுடைய வெண்ணெய் கிடைக்கும். அதேபோல, பாற்கடலைக் கடைந்தபோது, மென்மையானவளான மகாலட்சுமி தோன்றினாள். இவள் மலரைவிட மென்மையான தன்மை கொண்டதால், "மலர் மகள்' எனப் பெயர் பெற்றாள். தாமரையாள், பத்மவாசினி, நாண்மலராள், பூபுத்திரி (பூமியின் மகள்), மாமகள், மாதுளங்கி, பதுமை, அக்னி கர்ப்பை, ரத்தினாவதி, ஜானகி என்பன மகாலட்சுமியின் வேறு சில பெயர்கள் ஆகும்
No comments:
Post a Comment