Thursday, 14 September 2017

பாடினால் பலனுண்டு


நாலாயிர திவ்ய 
பிரபந்தத்தில் ஆண்டாள் 
பாசுரங்களுக்கு தனியிடமுண்டு. பூர நட்சத்திர 
நாட்களில் ஆண்டாள் 
பாசுரங்களைப் பாராயணம் செய்வது சிறப்பு.
அதிகாலையில் நீராடிவிட்டு தூய்மையான ஆடையை அணிந்து கொள்ளவேண்டும். பூஜை அறையை மெழுகி கோலமிட்டு ஆண்டாள், ரங்கமன்னார் படத்தை வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பசுநெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஆண்டாளின்பாசுரங்களான திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றைப் படிக்க வேண்டும். இதனால், குடும்பத்திற்கு நன்மைகள் பல உண்டாகும். புத்தி விருத்தியாகும். பாவங்கள் அடியோடு விலகும். யமுனை, கங்கை போன்ற புனிதநதிகளில் நீராடிய புண்ணியம் உண்டாகும். உறுதியான மனம் வாய்க்கும். குடும்ப கஷ்டங்கள் நீங்கும். கெட்டகனவுகள் மறையும். நீண்டகால வியாதிகள் நீங்கும். பகைவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அஞ்ஞானம் நீங்கி உண்மை ஞானம் ஏற்படும். பேச்சுத்திறமை ஏற்படும். சங்கீதத்தில் தேர்ச்சி வரும். புகழ் வாழ்வு நிலைக்கும். கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் வாய்ப்பர். தம்பதிகள் நல்ல குழந்தைகளைப் பெறுவர். இறைவனிடம் கேட்டவரம் அனைத்தும் கிடைக்கும். பொதுவாக பாசுரங்களின் இறுதிப்பாடலில் அவற்றைப் படிப்போர் அடையும் நன்மைகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும். பலன் கருதாத பக்தி தான் சிறந்தது என்றாலும், நம்மைப் போன்ற சாமான்ய மக்களையும் பக்தியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே இந்த பலன்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஆண்டாள் பாசுரங்களை உள்ளப்பூர்வமான நம்பிக்கையோடு பாராயணம் செய்வோருக்கு வேண்டிய பலன்கள் அனைத்தும் உறுதியாக கிடைக்கும்.

No comments:

Post a Comment