ஒரு செயலைச் செய்கிறோம் என்றால், அதில் முழுமையான கவனம் வேண்டும். "ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போதே, வெளியில் என்ன வெல்லாம் கெட்டது நடக்கிறது, அதைக் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போமே!' என்ற எண்ணம் தலைதூக்குவது இயல்பு. இது கூடாது என்கிறது ஆன்மிகம்.துறவி ஒருவர் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். வழியில், ஒரு மனிதரின் கால் வெட்டப்பட்டு கிடந்தது. அதில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. யாரோ ஒருவரின் காலை மிருகங்கள் பதம் பார்த்து விட்டதோ என அவர் சிந்தித்த வேளையில், காலை இழந்த மற்றொரு துறவி சற்று தூரத்தில் <உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். ""ஐயோ! உங்கள் காலை மிருகம் ஏதேனும் கவ்வி விட்டதா?'' என்று பரிதாபத்துடன் விசாரித்தார் முதல் துறவி.""ஆம்!'' என்றவரிடம், ""சிங்கமா, புலியா?'' என்று கேட்டார் முதல்துறவி.""இரண்டும் இல்லை, மனம் என்னும் விலங்கு,'' என்ற காலிழந்த துறவியைக் கேள்விக்குறியுடன் நோக்கினார் முதல் துறவி.""ஆம் துறவியே! நான் இங்கே தவத்தில் ஈடுபட்டிருந்தேன். கடும் தவம்...நேற்று, தற்செயலாகக் கண் திறந்த போது, என் எதிரே ஒரு பெண் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் அப்சரஸ் போலக் காணப்பட்டாள். செடிகளின் மறைவில் நின்ற அவளை எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆசை காரணமாக, நான் அவளை எட்டி எட்டி பார்த்தேன். திடீரென என் மனசாட்சி பேசியது.""தபஸ்வியான உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? போ! உன் காலை வெட்டிக் கொள், கால் இருப்பதால் தானே அருகில் போய் அவளைப் பார்க்கும் ஆசை வந்தது,'' என்றது. உடனே என் காலை வெட்டி எறிந்து விட்டேன்,'' என்றார். இந்தக் கதையில் வருவது போல, பணி செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடைபோடும் போது, வெளிக்கவர்ச்சிகள் இழுக்கத்தான் செய்யும். மனதைக் கட்டுப்படுத்தி, அதிலிருந்து மீண்டால் தான் லட்சியஇலக்கை எட்ட முடியும்
Sunday, 17 September 2017
ரொம்ப ரொம்ப கவனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment