Sunday 17 September 2017

கண்ணா ! கண்ணா ! நீ எங்கே ?


ஒரு சமயம் ஆயர்பாடியில் யசோதை கண்ணனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்தாள். குழந்தையாக இருக்கும்போது தயிரையும், வெண்ணெயையும் திருடித் தின்றாலும், என்னை விட்டு எங்கும் போகாமல் இருந்தான். ஆனால், இளைஞனானதும் சொல்லாமல் கொள்ளாமல் இஷ்டம் போல் எங்காவது போய்விடுகிறானே,'' என்று வருந்தினாள். வளர்த்த பாசம் அவளை இப்படி எண்ண வைத்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. விறுவிறு என்று ஒரு வீட்டை நோக்கி நுழைந்தாள். அது வேறு யாருடைய வீடுமல்ல! கண்ணனின் காதலி ராதாவின் வீடு தான்.

அவளிடம், ""அம்மா! ராதா!  கண்ணனைக் கண்டாயா?'' என்று கேட்டாள். அவளோ கண்களை மூடியபடியே தியானத்தில் இருந்தாள். யசோதையின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. கண்ணனோடு இரண்டறக்கலந்து தெய்வீகப்பரவச நிலையில் இருந்த ராதா, மெல்ல உலகநினைவுக்குத் திரும்பியபடியே கண்விழித்தாள். தன் முன் அமர்ந்திருந்த யசோதையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அப்படியே  அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்கினாள்.  யசோதை பரபரப்புடன்,""ராதா! என்பிள்ளை கண்ணனைப் பார்த்தாயா?'' என்று மீண்டும் கேட்டாள்.

அவளோஇயல்பாக, ""கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யுங்கள். அப்போது நம் உள்ளத்தில் கண்ணன் இருப்பதைக் காண்பீர்கள்,'' என்று சொன்னாள். யசோதையும் அப்படியே தியானித்தில் லயித்தாள். ராதா தன்னுடைய தெய்வீக சக்தியை யசோதையின் மீது செலுத்தினாள். புல்லாங்குழலை இசைத்தபடியே கண்ணன் கண்ணுக்குள் தோன்றினான். அதன்பின், நினைத்த @நரத்தில் எல்லாம் கண்ணனைக் காணும் பாக்கியத்தைப்பெற்றாள் யசோதை .

No comments:

Post a Comment