ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை பிரியும் காலம் வந்தது. மணிகண்டன் அவரிடம், ""நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால் நீங்கள் மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டதாக இருக்கும்'' என்றார். "அப்படியானால் நான் உன்னை எப்படி காணவருவேன்' என மகாராஜா கேட்டார். அதற்கு மணிகண்டன், "நீங்கள் வரும்போது உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம்' என அருள்பாலித்தார். ராஜாவும் சபரிமலைக்கு அடிக்கடி செல்வார். பல இடங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே அமர்ந்துவிடுவார். "ஐயோ! அப்பா!' என அவர் அடிக்கடி சொல்வார். இந்த சொற்களே திரிந்து "ஐயப்பன்' என ஆகிவிட்டதாக கர்ணபரம்பரைக் கதையுண்டு. நிஜத்தில் "ஐயன்' என்ற சொல்லே இப்படி மாறியிருக்கிறது. "ஐயன்' என்றால் "தலைவன். அதனால் தான் பெரியவர்களை "ஐயா' என மரியாதையுடன் அழைக்கிறோம். ஐயனுடன் அப்பனையும் சேர்க்கும் போது, அந்த ஐயனே நமது தந்தை என்றாகிறது. இப்போதும் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது, நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக ஒரு கருடன் வருவது விசேஷ அம்சமாகும்.
Friday, 15 September 2017
ஐயப்பன் - பெயர்க்காரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment