
முத்தமிழ் மீது கொண்ட அன்பால் முருகனுக்கு "தமிழ்க்கடவுள்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. இவர் மீது ஆங்கிலேயர்கள் சிலருக்கும் அன்பு உண்டு. ஐரோப்பியப் பெண் ஒருவர், 1936ல், கொடைக்கானலில் கட்டிய கோயிலே குறிஞ்சியாண்டவர் கோயில். மலையும் மலை சார்ந்த இடத்திற்கு "குறிஞ்சி நிலம்'என பெயர். இது மலையில் அமைந்த கோயில் என்பதால் "குறிஞ்சி ஆண்டவர் கோயில்' என பெயர் பெற்றது. இந்துமதத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் தன் பெயரை "லீலாவதி' என்று அப்பெண் மாற்றிக் கொண்டதோடு ராமநாதன் என்னும் இந்தியரையும் மணந்து கொண்டார். முருக பக்தியால் இக்கோயிலை இவர் கட்டியதாகக் கூறுகின்றனர். இந்தக் கோயிலில், அழகு தெய்வம் முருகன் கம்பீரமாக காட்சி தருகிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ இங்கு பூப்பதும் சிறப்பம்சம். 1994, 2006ல் இந்தப்பூக்கள் மலர்ந்தன
No comments:
Post a Comment