Wednesday, 13 September 2017

இரண்டு முக தெய்வம்


இரண்டு முகங்களுடன், ஆடு வாகனத்தில் அமர்ந்துள்ள அக்னி பகவானை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள கீரனூர் சிவலோகநாதர் கோயிலில் தரிசிக்கலாம். ஒரு சாபத்தால் கிளி வடிவம் பெற்ற அக்னி பகவான், இங்கு தான் சுயரூபம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. ராஜராஜசோழன் கட்டிய இந்தக் கோயிலில் கலையம்சம் மிக்கதாக இந்தச் சிலை வடிக்கப்பட்டுள்ளது. தொடர் ஜலதோஷம், குளிர் சார்ந்த நோய்கள், வெப்ப நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இவரை வணங்கி குணமடையலாம் என்பது நம்பிக்கை.

வருகிறது குபேர காலம் லட்சுமி பூஜை செய்யுங்க!

லட்சுமி பூஜைக்கு உகந்த நாட்களாக தீபாவளி, திரிதியை திதி நாட்கள், பஞ்சமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமைகள் ஆகியவை கருதப்பட்டாலும், பவுர்ணமியோடு சேர்ந்து வரும் வியாழக்கிழமை மிகுந்த சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. வரும் செப்டம்பர் 23ம் தேதி, இத்தகைய அரிய நாள் வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை கோயில்களிலும், வீடுகளிலும் பயன்படுத்தி லட்சுமி பூஜை செய்து செல்வவளம் பெறலாம். இதற்குரிய முன்னேற்பாடுகளை இப்போதே செய்யத் துவங்கி விடலாம். இவ்வாறு வரும் பவுர்ணமியை "குபேர காலம்' என்பர்.

No comments:

Post a Comment