Saturday 16 September 2017

செலவில்லாத யாகம்


யாகம் செய்ய வேண்டுமானால் பெரிய யாகசாலை,  குண்டம், திரவியங்கள், வேதம் ஓதும் அந்தணர்கள் என்று  பலவும் தேவை. ஆனால், செலவில்லாத யாகம் ஒன்று இருக்கிறது. அதுதான் பெற்றோரை வணங்குவதாகும். யார் ஒருவன் பெற்றோரை மானசீகமாக வணங்கி விட்டு தன் அன்றாடக் கடமைகளைச் செய்கிறானோ, அவன் யாகம் செய்த நற்பலனைப் பெறுகிறான். இந்த யாகத்திற்கு ஒரு காசு கூட செலவில்லை. நாரதர் கொடுத்த மாங்கனியைப் பெறுவதற்கு, முழுமுதற்கடவுள் விநாயகர் பின்பற்றிய எளிய வழி இதுதான். தாயும் தந்தையுமே நம் கண்கண்ட தெய்வங்கள் என்பதை விநாயகர் இந்நிகழ்வின் மூலம் உலகிற்கு காட்டியருளினார். "தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பது சொல் வழக்கு. இதனையே தமிழ் மூதாட்டி அவ்வை, ""அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'' என்று சொல்லி நமக்கு வழிகாட்டினாள். கடவுளைக் கூட பெற்றோருக்கு ஒப்பிட்டு "அம்மையப்பன்' என்றே சொல்லி  வழிபடுகிறோம்.  

No comments:

Post a Comment