
முருகபக்தரும், வாய் மணக்க திருப்புகழ் பாடிய வருமான அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் அவதரித்தார். பெண்ணாசையால் கெட்ட அவர், இங்குள்ள கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகப்பெருமானே அவரைத் தாங்கிப் பிடித்தார். தன்னைப் பாடுமாறு "முத்தைத்தரு பத்தித்திருநகை' என்று அடியெடுத்துக் கொடுக்க, அருணகிரியார் அதை முதலடியாகக் கொண்டு திருப்புகழைப் பாடினார். பின், தமிழகத்திலுள்ள ஏராளமான கோயில்களுக்கு சென்று, அங்குள்ள முருகனைப் பற்றிப் பாடினார்.
No comments:
Post a Comment