
கோயிலில் ஆண்டுக்கொருமுறை பிரம்மோற்ஸவத்தின் போது தேர் பவனி நடைபெறுவது வழக்கம். தேர் மரத்தால் செய்யப்பட்டிருக்கும் அல்லது மரத்தேரினை தங்கம் அல்லது வெள்ளியினால் கவசமிட்டிருப்பர். வித்தியாசமாக வெண்கலத்தால் ஆன மிக உயரமான தேர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் உள்ளது. 24 அடி உயரமும், 11அடி அகலமும் கொண்ட இத்தேர் தமிழகத்திலேயே உயரமானது. கிண்ணித்தேர் என்று அழைக்கப்படும் இதில் வைகாசி மாத பிரம்மோற்ஸவ விழாவில் காளிகாம்பாள் பவனி வருகிறாள். மராட்டிய வீரசிவாஜி காணிக்கையாக அம்பாளுக்கு அளித்த வீரவாள் இக்கோயிலில் உள்ளது.
No comments:
Post a Comment