
ராமன் மீது தீவிரமான பக்திகொண்டிருந்தார் குலசேகராழ்வார். மன்னராக இருந்த இவர், ராமனை தனது பிள்ளையாகக் கருதி, தன்னை ராமனின் தாய் கோசலையாக நினைத்து பல தாலாட்டு பாடல்களைப் பாடினார். ஒருமுறை இவருடைய அவையில் ராமாயண நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தில் ராவணனின் தம்பிகளான கரதூஷணர்களுடன், ராமன் போரிடுவதற்காக கிளம்பிய காட்சி வந்தது. நாடகத்தோடு ஒன்றிப் போயிருந்த குலசேகராழ்வார் அன்பு பெருக்கெடுத்த நிலையில், ""தளபதிகளே! அசோகவனத்திலிருக்கும் சீதையைக் காக்க நமது படைகளைக் கிளப்புங்கள்,'' என்று ஆக்ரோஷமாய் உத்தரவிட்டு ஆசனத்தை விட்டு எழுந்தார்.
நிலைமையை உணர்ந்த நாடகக்குழுவினர், அரக்கர்களைக் கொன்று சீதையும் ராமரும் ஒன்று சேரும் காட்சியை நடித்துக் காட்டினர். அதன்பிறகு தான், ஆழ்வார் சமாதானம் அடைந்தார். தனக்காக படைகளைக் கிளம்பச் சொன்ன குலசேகராழ்வாருக்கு பெருமாள், ராமபிரானின் வடிவில் காட்சி தந்து சமாதானப்படுத்தினார். இந்த ஆழ்வாரே, திருப்பதி பெருமாளின் முன் "படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே' என்று பாடியவர். அதனால், சீனிவாசப்பெருமாளின் முன்னால் இருக்கும் படியை "குலசேகரப்படி' என்கிறார்கள்.
No comments:
Post a Comment